க.நாகப்பன்
அறிமுக ஹீரோயின்களின் டிரெய்லர் இங்கே... இவர்களில் வருங்கால சினேகா, த்ரிஷா, தமன்னா, அஞ்சலி யாராக இருக்கும்? அது உங்கள் கணிப்புக்கு...
ஆலைக்காரிக்குப் பிடித்த பஷீர்!

'பஞ்சாலைக்காரி’ நந்தனா. 'கிருஷ்ணவேணி பஞ்சாலை’ யின் மில் தொழிலாளியாகக் கனவுலகில் கால் பதிக்கிறார்.
''திருவனந்தபுரத்துக்காரி. ஃபேஷன் டிசைனிங் படிச்சிட்டு இருக்கும்போதே, மில் தொழிலாளி பூங்கோதையா புரொமோஷன் வாங்கிட்டேன். நாலு வயசுல இருந்தே கத்துட்டு இருக்கிறதால, கிளாஸிக்கல் நடனத்துல கில்லி. சுடிதார், ஜீன்ஸ், டாப்ஸ்னு எனக்கான எல்லா டிரெஸ்களையும் நானே டிசைன் பண்ணிப் போட்டுப்பேன். அம்மா சமையல் பிடிக்கும். வைக்கம் முகம்மது பஷீர் புத்தகங்கள் பிடிக்கும். குறிப்பா 'மதிலுகள்’, 'பாத்துமாயூடே ஆடு’ ரெண்டு புத்தகங்களும் ரொம்பப் பிடிக்கும்.
குறும்பு செய்யும் குழந்தை, சுதந்திர வேட்கை உள்ள இளைஞர், ஜெயில் கைதி, இந்துத் துறவி, முஸ்லிம் சூஃபி, ஹோட்டல் சர்வர், ஜோசியர், பிச்சைக்காரர்களின் தோழர்னு தன் அனுபவங்கள் அத்தனையையும் இலக்கியமாக்கியவர் பஷீர். அப்படியான ஒரு வாழ்க்கை வாழணுங்க.''
''அக்காக்கள் என்னைவிட அழகு!''

'மனம் கொத்திப் பறவை’ படத்தின் கேரளத்து மனம் கொத்தி ஆத்மியா!
''பிறந்தது கண்ணூர் மாவட்ட செறுகு. அம்பிலி, ஆதிரானு என்னைவிட அழகா ரெண்டு அக்காக்கள் இருந்தாலும், சினிமாவுக்கு நான் மட்டும்தான் வந்திருக்கேன். பி.எஸ்சி., நர்ஸிங் முடிச்சிட்டு சினிமாவுக்கு வந்துட்டேன்.
அமைதியா இருப்பேன். ரொம்பவே கவலைப்படுவேன். நாய், பூனையை போட்டோவில் பார்த்தாக்கூடப் பயப்படுவேன். இயல்பாவே நான் அன்புக்காக ஏங்குற பொண்ணு. இப்போ இந்தப் படம் மூலமா எனக்கு ஏகப்பட்ட சொந்தங்கள் கிடைச்சிருக்காங்க.
அப்புறம்... ம்ம்ம்... குருவாயூரப்பன்தான் எனக்குக் கடவுள், நண்பன், காதலன் எல்லாமே. வீட்ல அவர் படங்களைத்தான் எக்கச்சக்கமா மாட்டிவெச்சிருக்கேன்!''
பிரியாணி வித் பாயல்!

'தேரோடும் வீதியிலே’ படத்தில் ஆடி அசத்தும் தேர் பாயல்கோஷ்.
''கொல்கத்தா பொண்ணு. 5.5 உயரம், 52 கிலோ, 24 வயசு. பொலிடிக்கல் சயின்ஸ் பட்டதாரி. தமன்னா, சனா கான்லாம் எனக்கு ஃப்ரெண்ட்ஸ். ஃபிட்னெஸுக்காக நிறையத் தண்ணீர், யோகா, ஜிம், காய்கறி, பழங்கள்னு வாரம் முழுக்க செம டயட்ல இருப்பேன். ஆனா, வீக் எண்ட்ல கட்டுப்படுத்த முடியாம, சிக்கன் பிரியாணியை ஒரு கட்டு கட்டிருவேன். டான்ஸ், ஸ்குவாஷ் ரெண்டும் தெரியும். ஸ்மிதா பாட்டீல் மாதிரி தேசிய விருதுகளோட ஸ்கோர் பண்ணணும். ரஜினி, சூர்யாவோட நடிக்கணும்னு ஆசை. தஞ்சாவூர்ல ஷூட்டிங் நடந்தப்போ, பிரகதீஸ்வரர் கோயிலைப் பார்த்தேன். ஆயிரம் வருஷங்களுக்கு முன்னாடி கட்டின கோயிலாமே? ஆச்சர்யத்துல அப்படியே நின்னுட்டேன். ஐ லவ் தமிழ்நாடு!''
கண்ணழகி!

'கும்கி’ யானையைக் கட்டி மேய்த்துக்கொண்டு இருக்கிறார் லட்சுமி மேனன்.
''மேட் இன் கொச்சின். அப்பா, துபாய்ல ஆர்ட்டிஸ்ட். அம்மா, சென்னை கலாஷேத்ராவில் கிளாஸிக்கல் டான்ஸில் டாக்டர் பட்டம் வாங்கினவங்க. நான் இப்போதான் டென்த் படிக்கிறேன். 'கும்கி’ல 'அல்லி’னு ஆதிவாசிப் பொண்ணு கேரக்டர். மேக்கப் இல்லாம நடிச்சு இருக்கேன். கிளிசரின் இல்லாம அழுதிருக்கேன். அந்த அளவுக் குக் கதையோட இன்வால்வ் ஆகிட்டேன். என்கிட்டயே எனக்கு ரொம்பப் பிடிச்சது என் கண்கள். கெட்ட பழக்கம்... கோபம். நல்ல பழக்கம்... அஞ்சு நிமிஷத்துக்கு மேல அந்தக் கோபம் இருக்காது.''