என் விகடன் - திருச்சி
என் விகடன் - மதுரை
என் விகடன் - சென்னை
என் விகடன் - கோவை
ஸ்பெஷல் -1
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

"அப்பவே விடிய விடிய பார்ட்டிதான்!"

ஆர்.சரண்படம் : பொன்.காசிராஜன்

##~##

''அன்னைக்கு டி.வி-ல 'கரகாட்டக்காரன்’ முழுப் படத்தை யும் பார்த்தேன். 'அட’னு எனக்கே ஆச்சர்யமா இருந்துச்சு. ராஜாண்ணே கதையே கேட்காம அந்தப் படத்துக்கு மியூஸிக் போட்டுக் கொடுத்தார். பல சீன்களை ஸ்பாட்லதான் யோசிச்சோம். கவுண்டமணிக்கு டயலாக் எழுதுற வீரப்பன் அண்ணன் ஒரு மலையாள ஜோக்கைத் தழுவி வாழைப்பழ காமெடி வெச்சார். அது இப்படி எகிடுதகிடு ஹிட் ஆகி காலத்தைத் தாண்டி நிக்கும்னு எதிர்பார்க்கலை. இப்பவும் என்னைப் பார்க்கிறவங்க அந்த இன்னொரு பழம் எங்கேனு கேக்குறாங்க. அதைக் கேட்காதவங்ககூட, சொப்பன சுந்தரியை இப்போ யார் வெச்சிருக்காங்கனு சிரிப்பாங்க!'' - கண் சிமிட்டிச் சிரிக்கிறார் கங்கை அமரன். ஒரு காலத்தில் டிரெண்ட் செட்டராக இருந்தவர், இப்போது மகன்களின் 'மங்காத்தா’ ஆட்டத்தை ரசித்து மகிழ்கிறார்.

 '' 'பார்ட்டி... பார்ட்டி’னு உங்க பசங்க ரொம்பப் படுத்துறாங்களோ... 'நாங்க கொண்டாடாத பார்ட்டியா?’னு நீங்களே ஒரு ஃபங்ஷன்ல படபடத்துட்டீங்களே?''  

''ஆமா... அதுல என்ன தப்பு? நாங்களும் பார்ட்டி பண்ணி இருக்கோம். நீங்கள்லாம் நினைச்சே பார்க்க முடியாத ஆளுங்க ளோட விடிய விடிய பார்ட்டி கொண்டாடி இருக்கோம். அதுவும் நான்,

"அப்பவே விடிய விடிய பார்ட்டிதான்!"

அண்ணன்லாம் '16 வயதினிலே’ படம் வந்தப்பவே, எல்லா பார்ட்டிகள்லேயும் கலந்துக்குவோம். ஆனா, ஒருநாள் அண்ணன் தெளிவா ஒரு முடிவு எடுத்தார். நான்-வெஜ் சாப்பிடக் கூடாது, தனிப்பட்ட முறையில் யாரையும் சந்திக்கக் கூடாதுனு. இப்போவரைக்கும் அதைக் கடைப்பிடிக்கிறார். ஆனா, இதுல இன்னொரு உண்மை... அப்பவும் சரி... இப்பவும் சரி... பார்ட்டிக்கு நான் வேடிக்கை பார்க்க மட்டும்தான் போவேன். இப்போ என் பசங்க நிறைய பார்ட்டிகளுக்குப் போறாங்கதான். ஆனா, தெளிவான பசங்க. அவங்க லிமிட் அவங்களுக்குத் தெரியும்.''

''இப்போதைய மியூஸிக் டிரெண்ட் எப்படி இருக்கு?''

''காலத்துக்கு ஏத்த மாதிரி ஆட்கள் வந்துட்டாங்க. இலக்கியத் தரமான வார்த்தைகள் போய், 'மே மாசம் 98-ல் மேஜர் ஆனேனே...’, 'டாடி மம்மி வீட்டில் இல்லை’னு ஆயிடுச்சு. நா.முத்துக்குமார், சினேகன், விவேகா, கபிலன்னு இப்பவும் நல்ல பாடல்கள் எழுதும் கவிஞர்கள் இருக்காங்க. ஆனா, அவங்களும் கமர்ஷியல் பாடல்கள் எழுதும் நிர்பந்தத்தில் சிக்கிக்கிட்டாங்க. ஆங்கில ஆல்ப மோகத்தில் மியூஸிக் போடுறாங்க. அது கேட்க நல்லா இருந்தா லும், நம்ம பாரம்பரிய இசையைத் தொலைச்சிட்டோமோனு தோணுது. ஆஸ்கர் போறோம்னு பெருமையா சொல்லிக்கலாம். ஆனா, நம்ம அடையா ளத்தை இழந்துட்டோமே!''

''ஆனா, இப்போதைய இளைஞர்கள் 'ஒய் திஸ் கொல வெறி’யை அவ்வளவு ரசிக்கிறாங்களே... அதைக் குத்தம் சொல்வீங்களா?''

''சுருக்கமா சொல்லிடுறேனே... என்ன கொடுமை சார் இது?''

''அப்போ நீங்க அண்ணன் தம்பிங்க, நண்பர்கள்போல ஜாலியா சினிமா எடுத்தீங்க... இப்ப உங்க பசங்களும் அப்படி நெருக்கமா இருக்காங்க... என்ன சொல்லி வெச்சிருக்கீங்க?''

''அது ரத்தத்துலயே ஊறிக் கிடக்கு. அப்போ ஸ்டுடியோல பட வேலைகளுக்கு மத்தியில ஏதாச்சும் விளையாடுவோம். அண்ணன் செஸ் விளையாட்டுல கிங். வெறியா விளையாடுவார். ஒரு காய்ன் வெட்டும்போது அப்படியே ஃபோர்ஸா வெட்டித் தூக்கி வீசுவார். பெரும்பாலும் அவர்தான் ஜெயிப்பார்.

ஊர்ல நான், ராஜா அண்ணன், மூத்த அண்ணன் ஆர்.டி.பாஸ்கர், பாரதிராஜா எல்லாம் காக்கா குஞ்சுனு ஒரு விளையாட்டு குச்சி வெச்சு மரத்துல தாவி விளையாடு வோம். அதுல பாரதிராஜாவை அழவெச்சுடுவோம்.

இப்ப எங்க பசங்க எல்லாம் ஒண்ணா கிரிக்கெட் விளையாடி னாங்க. அதைப் படமாவும் எடுத்து ஜெயிக்குறாங்க.''

"அப்பவே விடிய விடிய பார்ட்டிதான்!"

''ஏன் இன்னும் பிரேம்ஜிக்குக் கல்யாணம் பண்ணிவைக்க மாட்டேங்குறீங்க?''

'' 'டேய்... யாரையாச்சும் லவ் பண்ணித் தொலைடா’னுகூடச் சொல்லிட்டேன். கேட்க மாட்டேங்கிறான்.

நடிக்கிறப்போகூட, 'லவ் லுக் விடுடா’னு சொன்னா, பேய் முழி முழிக்கிறான்’னு வெங்கட் பிரபு என்கிட்ட புகார் சொல்றான். அவனுக்குக் காதல் வர மாட்டேங் குது. இப்போ அவனுக்கு ரொம்ப மும்முரமா பொண்ணு பார்த்துட்டு இருக்கோம். சீக்கிரமே கல்யாண விருந்து வெச்சிடுவோம்!''

''பசங்க சினிமால நடிக்கக் கூப்பிட்டா, 'மாட்டேன்’னு மறுத்துடுறீங்களாமே?''  

''நிஜ வாழ்க்கைல நடிக்கிறதாலயோ என்னவோ, சினிமா நடிப்புல இப்போ எனக்கு ஈர்ப்பே இல்லாமப் போயிருச்சு தம்பி!''- கனிவாகச் சிரிக்கிறார் கங்கை அமரன்.