என் விகடன் - திருச்சி
என் விகடன் - மதுரை
என் விகடன் - சென்னை
என் விகடன் - கோவை
ஸ்பெஷல் -1
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

அமீர் கான் மாதிரி ஆகணும்னு ஆசை!

நா.கதிர்வேலன்

##~##

ச்சர்யம்... கோடம்பாக்கத்தின் இயக்குநர்கள், நடிகர்கள் அனைவரின் குட் புக்கிலும் இருக்கிறார் ஜீவா. 'முகமூடி’, 'நீதானே என் பொன்வசந்தம்’ என மோஸ்ட் வான்டட் படங்களின் ஹீரோவிடம் பேசியதில் இருந்து...

 ''எந்த ஆர்ட்டிஸ்ட்கிட்ட கேட்டாலும் 'நல்ல பெர்ஃபார்மர்’னு உங்களைக் கை காட்டுறாங்க... உங்களுக்குப் பிடிச்ச நடிகர் யார்?''

''விஜய், கமர்ஷியல் சினிமாவுக்கான ஸ்பெஷலிஸ்ட். அஜித், தன் இமேஜ்பத்திக் கவலையே இல்லாமல் அடிச்சுப் பட்டையைக் கிளப்புறார். கார்த்தி செலெக்ஷன் எப்பவும் நல்லா இருக்கு. ஆர்யா படங்கள் எப்பவும் கலகல. தனுஷ், தவிர்க்க முடியாத நடிகரா உருவாகிட்டார். தேசிய விருதெல்லாம் ஜஸ்ட் லைக் தட் வாங்குறார். சின்சியரா வேலை பார்த்தா விருது பக்கத்துலனு நம்பிக்கை கொடுத்திருக்கார். இதுக்கு நடுவுல விஷால் சட்டுனு ஆச்சர்யம் கொடுத்துட்டார். கமர்ஷியல், அடிதடி படங்களாப் பண்ணிட்டு, 'அவன் இவன்’ல அப்படி ஒரு கேரக்டர் நடிக்க ரொம்பத் தைரியம் வேணும். பார்க்க

அமீர் கான் மாதிரி ஆகணும்னு ஆசை!

ஈஸியாத் தெரியும்... ஆனா, அது இவ்வளவு ஈஸி கிடையாது. இங்கே யாரையும் தப்புக் கணக்கு போட முடியாது பாஸ்.''

''நல்ல கம்போசிஷன் இருக்கே உங்க படங்களில்... நடிக்கும் படங்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறீங்க?''

''சினிமாவுக்கு வந்த 11 வருஷங்களில் 20 படங்கள் நடிச்சிட்டேன். அதுல ஆறேழுதான் சொல்லிக் கிற மாதிரி இருக்கும். எனக்கு இப்போ அமீர் கான் மாதிரி ஆகணும்னு ஆசையா இருக்கு. 'தாரே ஜமீன் பர்’, 'லகான்’, 'மங்கல் பாண்டே’, 'தில் சாஹ்தா ஹை’, 'கஜினி’... என்னா மனுஷங்க அவர்? இத்தனைக்கும் அவரோட பல படங்கள் சோதனை முயற்சிதான். ஆனா, அதில் பணமும் அள்றார்... மனசையும் அள்றார். யாருக்கு சார் கிடைக்கும் இந்த மதிப்பு? மூணு கோடிக்குப் படம் பண்ணிட்டு 30 கோடிக்கு சாமர்த்தியமாக வித்தா, அது அநியாயம். யாரும் படம் பார்த்துத் திட்டக் கூடாது. ஒருவேளை படம் கையைச் சுட்டாலும் சரி, அடுத்த படத்தில் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்னு விநியோகஸ்தர்கள் சொல்றது மாதிரி இருக்கணும். ஒரு நடிகனுக்கு அதுதான் நியாயமான எல்லை. இதை எல்லாம் மனசுல வெச்சுதான் நான்

அமீர் கான் மாதிரி ஆகணும்னு ஆசை!

படங்களைத் தேர்ந்தெடுக்கிறேன். ராஜேஷோட 'எஸ்.எம்.எஸ்.’ பண்ணலாம்னு தீர்மானிச்சது நல்ல மூவ். ஆனா, சமயங்களில் சில நல்ல கதைகளைத் தவிர்த்து இருக்கேன். என் ஜட்ஜ்மென்ட் தப்பாவும் ஆகி இருக்கு.''

''எந்த டைரக்டர்கிட்ட வேலை செய்ய ஆசை?''

''ஏங்க... எனக்கு என்ன குறைச்சல்? ராம், அமீர், கே.வி.ஆனந்த், ஷங்கர், மிஷ்கின், கௌதம் மேனன்... நச் இயக்குநர்களோட நல்ல நல்ல படங்கள் பண்ணி இருக்கேன். அடுத்து, இந்தியாவே கொண்டாடுற ரவி.கே.சந்திரனோட ஒரு படம், கமர்ஷியல் கிங் ஹரி சாரோட படம் பண்ணப் பேசிட்டு இருக்கேன். சுராஜ் கூடப் படம் பண்ணுவேன். பெர்சனலா செல்வராகவன், 'மௌனகுரு’ சாந்தகுமார், 'ஆரண்ய காண்டம்’ குமாரராஜா இவங்ககிட்ட எல்லாம் நடிக்க ஆசையா இருக்கு. 'மௌனகுரு’ நான்தான் செஞ்சிருக்க வேண்டியது. கதையைக் கேட்டப்போ என்னமோ பயந்துட்டேன். என் ஜட்ஜ்மென்ட் தப்பும்னு சொன்னேன் இல்லையா... அதான் இது.''

''சண்டை மறந்து சிம்புகூட நட்பு ஆகிட்டீங்களா?''

''என்னைக்குக் கட்டி உருண்டோம்? நான் யார்கிட்டயும் மோதுறது இல்லை. ஜாலியா இருக்கிறதுதான் என் குணம். அவர்கிட்ட பெரிசா தொடர்பு கிடையாது. அவ்வளவுதான்.''