என் விகடன் - திருச்சி
என் விகடன் - மதுரை
என் விகடன் - சென்னை
என் விகடன் - கோவை
ஸ்பெஷல் -1
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

மாணிக்கம் என் பாய் ஃப்ரெண்ட்!

க.நாகப்பன்

##~##

ல்லோரும் 15 வயசுல நடிக்க வந்துட்டியானு கேட்குறாங்க. ஆமா, ஏன்னா, தமிழ் எனக்கு அவ்வ்வ்ளோ பிடிக்கும்'' - விழிகள் படபடக்கப் பேசுகிறார் லட்சுமி மேனன் மிக அழகாக.

''என் அப்பா ராமகிருஷ்ணன் ஒரு ஆர்ட்டிஸ்ட். இப்போ துபாய்ல இருக்கார். அம்மா உஷா, டான்ஸ் டீச்சர். சென்னை கலாஷேத்ராவுல டான்ஸ் கத்துக்கிட்டாங்க. பாட்டி இந்திரா, சின்னப் பாட்டி சுசீலா ரெண்டு பேரும் மியூஸிக் டீச்சர்ஸ். இந்தக் கலைக் குடும்பத்துக்கு ஒரே செல்லம் நான்தான். எனக்கு பரதம், கதகளி தெரியும். என் டான்ஸ் பார்த்த வினயன் சார் 'ரகுவின்டே சொந்தம் ரசியா’ படத்தில் ஒரு சின்ன ரோல் தந்தார். இப்போ தமிழ் ஹீரோயின் ஆகிட்டேன்!''

''படிப்பு முக்கியம்னு தோணலையா?''

''எனக்குத் தமிழ்ப் படங்கள்னா ரொம்பப் பிடிக்கும். 'சேது’, 'பிதாமகன்’, 'வாரணம் ஆயிரம்’, 'மைனா’ பார்த்துப் பார்த்து ரசிச்சவ நான். அந்த மாதிரி தமிழ்ப் படங்கள்ல நடிக்க வாய்ப்பு வந்தா  எப்படி விட முடியும்? அதனால, இப்போதைக்கு லீவு. ஆனா, இங்கிலீஷ் லிட்ரேச்சர் நிச்சயம் படிக்கணும்.''

மாணிக்கம் என் பாய் ஃப்ரெண்ட்!

''எப்படி இருக்கு தமிழ் அறிமுகம்?''

'' 'கும்கி’யில் மலைவாசிப் பெண் அல்லியா நடிக்கிறேன். தேனி குரங்கனி, ஜோக் ஃபால்ஸ், ஆந்திரா அரக்குவேலி மலை, ஒடிசா பார்டர்னு பல இடங்கள்ல 'கும்கி’ ஷூட்டிங் போனது பயங்கர த்ரில்லா இருந்தது. சிவாஜி சார் பேரன், பிரபு சார் பையன்னு பெரிய லெஜன்ட் பின்னணி விக்ரம் பிரபுவுக்கு இருக்கு. பெரிய இடத்துக்கு வருவார்னு எல்லோரும் சொல்றாங்க. எனக்கு நல்ல சேட்டன். பிரபு சாலமன் சார், என்கிட்ட இருக்கும் எல்லாத் திறமைகளையும் வெளியே கொண்டுவந்து இருக்கார்.''

''லட்சுமி மேனன் நிஜத்தில் எப்படி?''

''சும்மாவே என்னால இருக்க முடியாது. துறுதுறு... லொடலொடதான் என் அடையாளம். எல்லார்கிட்டயும் நல்லாப் பேசுவேன். பேய், ரத்தக்காட்டேரி படங்கள்னா விரும்பிப் பார்ப் பேன். ஆனா, ரொம்ப சாஃப்ட்டான பொண்ணு. எனக்கு சினிமாவுல பாடணும்னு ஆசை இருக்கு. கூடிய சீக்கிரம் நிறைவேறிடும்.''

''உங்க பெஸ்ட் ஃப்ரெண்ட் யாரு?''

''மாணிக்கம். ஆரம்பத்துல அவனோட பழக ரொம்பப் பயமா இருந்துச்சு. அப்புறம் பயம் போயிடுச்சு. என்னைத் தாங்குதாங்குனு தாங்குறான். நான் அவனுக்கு அப்பப்போ முத்தம் கொடுப்பேன். மாணிக்கம் யார்னு கேட்குறீங்களா? என்கூட நடிச்ச யானை!''