என் விகடன் - திருச்சி
என் விகடன் - மதுரை
என் விகடன் - சென்னை
என் விகடன் - கோவை
ஸ்பெஷல் -1
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

"எதுவும் இல்லாதவன் வாழ்க்கை எப்படி இருக்கும்?"

நா.கதிர்வேலன்

##~##

வ்வளவு அன்போடு கரம் கொடுக்கிறார் விஜய் ஆண்டனி. அதிரடி, மென் மெலடி ஹிட்டுகளுக்குச் சொந்தக்காரரான விஜய் ஆண்டனி இப்போது ஹீரோ. 'நான்’ திரையைத் தொட ரெடியாக இருக்கிறது.

 '' 'ஒரே ஒரு வாழ்க்கைதான். பாதி வாழ்க்கை முடிஞ்சாச்சு. அடடா, ஒரு ஹீரோவா வந்திருக்கலாமேனு பின்னாடி நினைச்சு வருத்தப்படக் கூடாது’ - ஜீவா சாரோட அசிஸ்டென்ட் ஜீவா சங்கர் இதைச் சொன்னப்போ, இதில் நாமளே நடிச்சிரலாம்னு தோணுச்சு. முடிவு செஞ்சதுக்கு அப்புறம் திரும்பிப் பார்க்கிற வழக்கம் எனக்குக் கிடையாது.''

'' 'நான்’ படத்தில் நீங்கள் யார்?

''நீங்களும் நானும் உட்கார்ந்து நாகரிகத் தோட பேசிக்கிறது ஒரு முகம். இன்னும் வீட்டுக்குப் போய் கொஞ்சம் கோபமா, அதிகாரமா இருக்கிறது இன்னும் வெளிப்படையான இன்னொரு முகம். இன்னும் வெளிப்படாத முகம் எல்லோருக்கும் இருக்கவே இருக்கு. அது உங்களுக்கு மட்டுமே தெரிஞ்ச முகம். உலகத்தோட அதிகபட்ச நல்லவனுக்குக்கூட அந்த முகம் இருக்கு. எல்லாம் இருக்கிறவன் யாருக்கும் எந்தக் கெடுதலும் பண்ணாமல் தன் வேலைகளைச் செய்வான். அதுவே எதுவும் இல்லாதவன் வாழ்க்கை எப்படி இருக்கும்? எதாவது ஒண்ணை அடையணும்கிற பதற்றத்தில் வரிசையாத் தப்பு பண்ண ஆரம்பிப்பான். நாம் எப்போ கெட்டவன் ஆகிறோம்கிற கேள்விக்குப் பதில்தான்... 'நான்’. ஒரு மியூஸிக் டைரக்டர்தானே நடிக்கிறார்னு பார்க்க வந்தா, உங்களுக்கு நிச்சயம் அதிர்ச்சி காத்திருக்கும். அவ்வளவு தன்னம்பிக்கையோடு சொல்றேன்.''

"எதுவும் இல்லாதவன் வாழ்க்கை எப்படி இருக்கும்?"

''நீங்க நடிகரா இருப்பீங்களா, இசையமைப்பாளராத் தொடர்வீங்களானு எல்லோருக்கும் குழப்பம் வரும்தானே?''

''எதிலும் முழுமையா இறங்கி வேலை செஞ்சா தோல்விக்கு இடம் இல்லைங்கிறது என் அபிப்ராயம். நிறையப் பேர் ஒரு மாதம் வெளிநாடு போய் ரிலாக்ஸ் பண்ணிட்டு வர்றாங்க. அது மாதிரி, நடிப்பு எனக்கு ரிலாக்ஸ். இளையராஜா மலபார் ஜுவல்லர்ஸுக்கு மூன்று நாள் கால்ஷீட் கொடுத்து நடிக்கிறார். வந்தே மாதரத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் அஞ்சு நாள் கால்ஷீட் கொடுக்கிறார். நான் 50 நாள் கால்ஷீட் கொடுக்கிறேன். அவ்வளவுதான் வித்தியாசம். நிச்சயம் என் இசை தொடரும்.''

''நடிப்பு அவ்வளவு எளிதா?''

''பொருத்தமான கதாபாத்திரமும் அதற்கு நாம் தகுதியோடும் இருந்தால் நிச்சயம் செய்ய முடியும்!''

"எதுவும் இல்லாதவன் வாழ்க்கை எப்படி இருக்கும்?"

''திறமை இருந்தும் இசையில் பெரிய இடத்துக்கு வர முடியலையேனு வருத்தம் இருக்கா?''

''இவ்வளவு தூரத்துக்கு நான் வந்தது எல்லாமே என் சொந்த முயற்சி. நல்லாப் படிக்கிறவன், திறமையானவனாக இருந்தும் படிப்பில் 24 அரியர்ஸ் வெச்சேன். படிப்பு நம்மைக் காப்பாத்தப்போறது இல்லைனு எனக்கு அப்பவே தெரிஞ்சிருச்சு. என்னோட பலம், பலவீனம் எனக்குத் தெரியும். இங்கே வெள்ளம் போற போக்குல போறவங்கதான் அதிகம். நான் எதிர்நீச்சல் போடுறவன். கொஞ்சம் வர நேரம் ஆகும்தான். ஆனா, நிச்சயம் வருவேன்.''

"எதுவும் இல்லாதவன் வாழ்க்கை எப்படி இருக்கும்?"

''ராஜா மட்டும்தான் இசையமைப்பாளர். மத்தவங்க எல்லாம் வெறும் கம்போஸர்தான்னு ஒரு செய்தி வந்ததே?''

''அது டைரக்டர் பால்கி சொன்னது.அதுல 70 சதவிகிதம் உண்மை இருக்கு. ராஜா அளவுக்கு டைரக்டரை மீறி படத்தைக் கொண்டு போனவங்க குறைச்சல். இளையராஜா இந்திய சினிமாவின் மைல்கல்!''

''திடுதிடுனு கே, சத்யா, ஜிப்ரான்னு வந்துட்டாங்க. எப்படி உணர்றீங்க?''

''ஒவ்வொரு விதத்தில் ஒவ்வொருத்தரும் விளையாடுறாங்க. நாங்க எல்லோருமே ஒருத்தருக்கு ஒருத்தர் ரசிச்சுக்கிட்டு, 'வெரிகுட்’னு சொல்லிட்டு இருக்கோம். என் பாடல் வெளீயிட்டு விழாவுக்கு ராஜா, ரஹ்மான், யுவன் தவிர, அத்தனை பேரும்  வர்றாங்க. யாருக்குக் கிடைக்கும் இந்த பாக்கியம்!''