என் விகடன் - திருச்சி
என் விகடன் - மதுரை
என் விகடன் - சென்னை
என் விகடன் - கோவை
ஸ்பெஷல் -1
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

ஹிட் ஹீரோயின்ஸ்!

ஆர்.சரண்

##~##

ட... ஒரு ஃப்ளாஷில் திரும்பிப் பார்த்தால் இந்தி சினிமா ஹீரோயின்கள் 'பிரமாண்ட பிராண்ட்’ ஆக வளர்ந்து நிற்கிறார்கள் வருடங்கள் செல்லச் செல்ல... சினிமா ஹீரோயின்களின் க்ரேஸும் மவுஸும் கற்பூரமாகக் கரையும் என்பது சும்மா. அதிலும் ஹீரோக்களுக்கு இணையான, சில ஹீரோக்களைத் தாண்டிய மார்க்கெட்டைக் கையில் வைத்திருக்கிறார்கள் இந்தி ஹீரோயின்கள். கவர்ச்சியை மட்டுமே நம்பினால், இளமை கரையும்போதே மவுஸும் மறைந்துபோயிருக்கும். ஆனால், முப்பதுகளைத் தாண்டிய பிறகுதான் இவர்களின் இண்டஸ்ட்ரி மதிப்பு மில்லியன்களில் எகிறுகிறது. எப்படி இந்த அதிசயம்?  

 ஹீரோயின்களின் ஹீரோயின்!

ஹிட் ஹீரோயின்ஸ்!

பிரியங்கா சோப்ரா... இப்போது பாலிவுட் குயின்! 'பிசி’ என்று செல்லமாக அழைக்கப்படும் அவர், நிஜத்தில் செம பிஸி. 2000-ல் உலக அழகிப் பட்டம் வென்ற ஜோரில் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தவருக்கு, 2008 வரை ஹிட் ராசி கிடைக்கவில்லை. 'ஃபேஷன்’ படத்துக்குப் பிறகுதான் பிரியங்காவை ஒரு 'பெர்ஃபார்மன்ஸ் ஆக்டர்’ ஆகப் பார்க்கத் தொடங்கியது பாலிவுட். அந்த ஹிட் ஓப்பனிங்கை இன்று வரை பிரியங்கா தக்கவைத்துக்கொண்டு இருப்பது உண்மையிலேயே ஆச்சர்யம். அதன் பிறகு 'காமினே’, '7 கூன் மாஃப்’, 'டான்-2’ என ஒவ்வொரு படத்திலும் வெரைட்டி விருந்து வைத்திருக்கிறார் பிசி. 'ஃபேஷன்’ படத்துக்காகத் தேசிய விருது வென்றவருக்கு விளம்பர உலகிலும் அபார வரவேற்பு. 'கேர்ள் திங்’ விளம்பரங்கள் அனைத்துக் கும் பிரியங்காதான் இப்போது ஒரே சாய்ஸ். காரணம், பிரியங்காவின் எனர்ஜி. பார்ட்டிகளில் அனைவரிடமும் நட்பு பாராட்டுவது பிரியங்கா ஸ்பெஷல். 'பர்ஃபி’ படத்தில் ஆட்டிஸம் பாதித்த பெண்ணாக பிரியங்காவின் நடிப்பு டிரெய்லரிலேயே அசத்துகிறது. அடுத்தடுத்தும் பெயர் சொல்லும் புராஜெக்ட்களைக் கையில் வைத்து இருக்கும் பிரியங்காவை 'ஹீரோயின்களின் ஹீரோயின்’ என்று கொண்டாடுகிறது பாலிவுட்!

சைஸ் ஜீரோ ஏஞ்சல்!

ஹிட் ஹீரோயின்ஸ்!

ரீனா கபூர் நடிக்கும் 'ஹீரோயின்’ படத்துக்கு உலக இந்தியர்களி டையே உற்சாக எதிர்பார்ப்பு. 'ஃபேஷன்’ இயக்குநர் மதூர் பண்டார்க்கர் இயக்கும் இந்தப் படம் 'ஃபேஷன்’, 'தி டர்ட்டி பிக்சர்’ ஆகிய படங்களின் மசாலா மிக்ஸாக இருக் கும் என்பது பிசினஸை யும் எகிறவைத்து இருக் கிறது. டிரெய்லருக்கே 'ஏ’ சான்றிதழ். 'ஹீரோயின்களின் இன்னொரு உலகத்தை ரசிகர்களுக்கு இந்தப் படத்தில் பளிச்சென்று காட்டுவார் மதூர். எனக்கே இந்த ரோலில் நடிக்க ஆரம்பத்தில் தயக்கமாக இருந்தது. ஆனால், ஐஸ்வர்யாவே நடிக்கவிருந்த கேரக்டர். கர்ப்பம் காரணமாக அவர் விலகிக்கொள்ள, எனக்குக் கிடைத்தது போனஸ்’ என்று சிலாகிக்கிறார் கரீனா. இவர் நடிக்கத் தொடங்கிய போது அவரோடு நடித்த பல ஹீரோக்களுக்கே இன்று மார்க்கெட் அவுட். ஆனால், ஃபீல்டில் இன்றும் கில்லியாக வலம் வருகிறார் கரீனா. சமீப காலமாக, சஃயீப்புடன் ஆன காதல் காரணமாக மட்டுமே செய்திகளில் அடிபடும் தனக்கு, இந்தப் படம் மீண்டும் ஹிட் அந்தஸ்து அளிக்கும் என்ற நம்பிக்கையில், இதுவரை இல்லாத அளவுக்குப் படுக்கையறைக் காட்சிகளில் நெருக்கம் காட்டி நடித்திருக்கிறார் கரீனா.

டர்ட்டி பியூட்டி!

ஹிட் ஹீரோயின்ஸ்!

றிமுகமான படத்தில், 'ஆன்ட்டி லுக்’கில் இருக்கிறார் என்று கமென்ட் வாங்கிய வித்யா பாலன், இப்போது டர்ட்டி லுக்கில் பட்டையைக் கிளப்புகிறார். இத்தனைக்கும் தமிழில் 'ரன்’, 'மனசெல்லாம்’ படங்களில் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டு, பிறகு கழற்றிவிடப்பட்டவர். ஐஸ்வர்யா நடித்த படத்தில் சின்ன குணச்சித்திர வேடத்தில் நடித்துக்கொண்டு இருந்தவருக்கு 'தி டர்ட்டி பிக்சர்’ கொடுத்தது சர்வதேச ரீச். அந்தப் படத்துக்காகத் தேசிய விருது பெற்றவர், தொடர்ந்து அப்படியான ஒரு கிளாமர் படத்தில் நடிக்காமல், 'கஹானி’ படத்தில் நடித்தது மாஸ்டர் செக். காணாமல்போன கணவனைத் தேடும் கர்ப்பிணியாக அந்தப் படத்தில் வித்யா நடித்தது, அவருக்கு மிகப் பெரிய மைலேஜைக் கொடுத்தது. ஆனால், ஸ்க்ரீனுக்கு வெளியே வித்யா எந்த இமேஜும் பார்ப்பது இல்லை. பார்ட்டி, விருது விழாக்களுக்கு மிகச் சாதாரண காட்டன் சேலைகளில் வந்து 'மிக மோசமான டிரெஸ்ஸிங் சென்ஸ் கொண்டவர்’ என்றெல்லாம் விமர்சனம் வாங்குவார். 'சினிமாவுக்கு வெளியே நான் சாதாரணப் பெண். லிப்ஸ்டிக், பவுடர்கூடப் போட்டுக்கொள்ளாத சராசரி இந்தியப் பெண்ணாக இருப்பதையே நான் விரும்புகிறேன்’ என அதையும் காலி செய்துவிடுகிறார் வித்யா.  

அழகு குட்டிச் செல்லம்!

ஹிட் ஹீரோயின்ஸ்!

ழகி கேத்ரீனா கைஃப் பளீர் வெற்றியை ருசித்து நாளாகிவிட்டது. சல்மான் காதலியாகப் பரபரக்கப்பட்டவர். அவரைவிட்டுப் பிரிந்தவுடன், 'உலகின் செக்ஸியான பெண்’ என்ற பெருமையோடு மட்டும் அவ்வப்போது செய்திகளில் அடிபடுவார். இணையத்தில் அதிகம் 'டவுன்லோடு’ செய்யப்படும் இந்த அழகிக்கு, 'ஷீலா கி ஜவானி’ பாடலுக்காக மட்டுமே சமீப வருடங்களில் பரவலாகக் கவனிக்கப்பட்டார். உடனடி ஹிட் தேவைப்படும் நிர்பந் தத்தில் இருக்கும் கேத்ரீனா, இத்தனை நாட்களாக சல்மானைப் பார்ப்பதைக்கூடத் தவிர்த்துவந்தார். ஆனால், விதிகளைத் தளர்த்தி, 'ஏக் தா டைகர்’ படத்தில் சல்மானோடு ஜோடியாக நடித்திருக்கிறார். இவர்களின் 'ஹிட் ஹிஸ்ட்ரி’ இண்டஸ்ட்ரி பிரபலம். அதனால், படம் வெளியாவதற்குக் காத்திருக்கும் நேரத்தில், வேறு புதுப் படங்களில் கமிட் ஆகாமல் இருக்கிறார் கேத்ரீனா.

இப்போது இந்தச் செய்திகள் எல்லாம் எதற்கு என்று கேட்கிறீர்களா? கோலிவுட் ஹீரோயின்கள் கவனத்துக்குத்தான்!