Published:Updated:

“ஹீரோ படம் பண்ண இயக்குநர்கள் எங்கே?”

க.ராஜீவ் காந்தி

##~##
“ஹீரோ படம் பண்ண இயக்குநர்கள் எங்கே?”

கரு.பழனியப்பன்... 'பார்த்திபன் கனவு’, 'பிரிவோம் சந்திப்போம்’ என மென் ரசனை சினிமாக்காரர். இப்போது 'ஜன்னல் ஓரம்’ என்று தலைப்பிலேயே கவிதை பிடித்துவருகிறார்.

'' 'ஜன்னல் ஓரம்’, 'ஆர்டினரி’ மலையாளப் படத்தின் ரீமேக். முதல்முறையா ஒரு ரீமேக்... ஏன்?''

''ஒரு வகையில் என் எல்லாப் படங்களுமே ரீமேக்தான். 'பார்த்திபன் கனவு’ பார்த்தால், அதில் 'கோபுரங்கள் சாய்வதில்லை’ சாயல் இருக்கும். அதில் ராதா, சுஹாசினினு ரெண்டு  ஹீரோயின்கள். அந்த ரெண்டு பேருமே ராதாவா இருந்தா எப்படி இருக்கும்னு யோசிச்சேன். சினேகா டபிள் ஆக்ட்ல நடிச்சாங்க. அப்படி நான் இயக்கிய எல்லாப் படங்களுமே ஏற்கெனவே வந்த ஏதோ ஒரு படத்தின் தாக்கம்தான். அதை எல்லாம் சொல்லாமப் பண்ணினேன். இப்போ ஜன்னல் ஓரத்தை சொல்லிட்டுப் பண்றேன்.

பண்ணைக்காடு டு பழநி வரையிலான பேருந்துப் பயணம்தான் 'ஜன்னல் ஓரம்’ கதை. பண்ணைக்காடுக்குப் போக, அந்த ஒரு பேருந்து மட்டும்தான். அந்தப் பேருந்தின் கண்டக்டரா விமல். டிரைவரா பார்த்திபன். பொதுவா, ஒரு ஊருக்கு வேலை நிமித்தமா ரெகுலரா வந்து போற பஸ் டிரைவரோ, வாத்தியாரோ, போஸ்ட்மேனோ... அவங்க மனசுக்குள்ள தானும் அந்த ஊர்ல ஒருத்தன்கிற எண்ணம் வந்துடும். ஆனா, அவங்களுக்கு ஒரு சிக்கல் வரும்போது, அந்த ஊர் தெளிவா சொல்லிடும்... 'நீ வேற ஊர்க்காரன்’னு!

“ஹீரோ படம் பண்ண இயக்குநர்கள் எங்கே?”

அப்படி ஒரு சிக்கல் விமல், பார்த்திபனுக்கு வருது. அவங்க எப்படி அதிலிருந்து மீண்டு, திரும்ப அந்த ஊர்ல ஒருத்தரா ஆகுறாங்கங் கிறதுதான் கதை. ஆனா, கதை இவங்க ரெண்டு பேர் மேல் மட்டும் பயணிக்காது. எல்லாருமே இந்தக் கதையில் முக்கியமாத் தெரிவாங்க. படத்தில் கதாநாயகன், கதா நாயகினு பார்த்தா... விமல், மனீஷா மட்டும் தான். ஆனா, படத்தில் அவங்களைவிட அதிகமான ஸ்பேஸ், விதார்த், பூர்ணா, பார்த்திபனுக்கு இருக்கு. இவங்க எல்லாருக்குமே இப்போ ஒரு பிரேக் தேவைப்படுது. இவங்க எல்லாரையும்விட பிரேக் தேவைப்படற ஒரு ஆள் நான்!''

“ஹீரோ படம் பண்ண இயக்குநர்கள் எங்கே?”

''ஆனா, இப்போ காமெடிப் படங்கள் டிரெண்டாஆகிருச்சே..?''

''அடுத்த வெள்ளிக்கிழமை 'பார்த்தாலே பசி தீரும்’ ரிலீஸானாக்கூட ஜெயிக்கும். நல்லா எடுக்கிற படம், ஜெயிக்கிற படம். அவ்வளவுதான். தவிர, சக்சஸ் ஃபார்முலா, டிரெண்ட்னு எதுவுமே கிடையாது. நேர்த்தியா, நேர்மையா எடுக்கக்கூடிய படங்கள் ஜெயிக்கும். சுயமா சிந்திக்கத் தெரியாதவன்தான் டிரெண்ட்னு சொல்லித் தன்னைத்தானே ஏமாத்திக்குவான். மத்தபடி சினிமாவில் எப்பவும் புதுப் பசங்க வந்துட்டே இருப்பாங்க. இது சினிமாவுக்கு நல்லது.''

''நீங்க ஸ்டார் ஹீரோக்கள் பக்கம் போறதே இல்லையே... ஏன்?''

''ஸ்டார் ஹீரோக்கள் என் படத்துல இருக்கணும்னு நான் முடிவுபண்ண முடியாது. ஒரு படத்தோட

“ஹீரோ படம் பண்ண இயக்குநர்கள் எங்கே?”

வியாபாரம் 20 கோடிக்கு மேல இருக்குன்னா, அந்த ஹீரோதான் யார் டைரக்டர்னே முடிவுபண்ண முடியும். ஒரு டைரக்ட ருக்கே நல்ல வியாபாரம் இருந்தா, ஹீரோ யார்னு அவர் முடிவுபண்ணலாம். ஸ்டார் ஹீரோக்களை முடிவுபண்ணக் கூடிய இடத்தில் நான் இன்னைக்கு இல்லை. நான் ரொம்ப நாள் சினிமாவில் இருக்கணும்னு ஆசைப் படுறேன். அதனால், ஹீரோ படம் பண்ண ஆசைப்படலை. டைரக்டர் படம் பண்ண மட்டும்தான் ஆசை. நான் என் வட்டத்தைவிட்டு வெளியே வர விரும்பலை. பாலசந்தரோ, பாரதிராஜாவோ வட்டத்தை விட்டு வெளியே வரவே இல்லையே? அதுவும் போக ஹீரோ படம் பண்ண இயக்குநர்கள்லாம் காணோமே?''

''திரும்பவும் ஹீரோவா நடிக்கிறீங்கபோல?''

''ஆமாம்! இப்போ நான் ஹீரோவா நடிக்கப்போறது என் இயக்கத்தில் இல்லை. என் அசிஸ் டென்ட் அமல்ராஜ் இயக்கும் 'மிஸ்டர் அண்ட் மிசஸ் கல்யாணம்’ படத்தில்தான் நடிக்கப்போறேன். கல்யாணக் குணங்கள்கொண்ட நாயகன், நாயகி ரெண்டு பேரும் சந்திக்கிறாங்க. கல்யாணம் பண்ணிக் கிறாங்க. கல்யாணத்துக்குப் பிறகான கதைதான் படம். நிஜத்துல எல்லாரோட கதையுமே கல்யாணத்துக்கு அப்புறம்தானே ஆரம்பிக்குது!''