சினிமா
Published:Updated:

“சிரிப்பு தொத்திக்கும்... பயம் பத்திக்காது!”

க.நாகப்பன்

##~##

ரு ஹிட் படம்... அதன் தொடர்ச்சியான பாகங்கள். ஹாலிவுட்டில் இதை சீக்வல் (sequel) என்பார்கள் அமெரிக்கன் பை, ஸ்கேரி மூவி, ஈவில் டெட், ஸ்பைடர் மேன், ஹேங்ஓவர்... இவையெல்லாம் முந்தைய பாகத்தின் கதாபாத்திரங்களுடனோ அல்லது அதே கதை அம்சத்துடனோ தயாரான சீக்வல் படங்கள். தமிழில் 'நாளைய மனிதன்’, 'அதிசய மனிதன்’ படங்களை மட்டுமே அப்படி சீக்வலுக்கு நெருக்கமாகச் சொல்லலாம். இப்போது... 'பீட்சா-2 வில்லா’!

இருட்டு அறையில் முரட்டுத்தனமாக ரசிகர்களை அலறவைத்த 'பீட்சா’வின் இரண்டாம் பாகத்தை இயக்குபவர்... 26 வயது தீபன் சக்கரவர்த்தி.

“சிரிப்பு தொத்திக்கும்... பயம் பத்திக்காது!”

''குறும்பட உலகத்தில் இருந்து புரொமோஷன் கிடைச்சிருக்கு... வாழ்த்துக்கள் தீபன்...''

''அதைச் சுலபமாக்கிய சீனியர்களுக்கு என் நன்றிகள். நான் கோயம்புத்தூர்க்காரன். சினிமா ஆர்வம் ப்ளஸ் வெறி. ஆனா, வீட்ல இன்ஜினீயரிங் படிக்கவெச்சாங்க. ஹெச்.சி.எல். வேலை. அஞ்சு வருஷம் அப்படியே ஓடுச்சு. 'நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சி அறிவிப்பு வந்ததும் ஒரு குறும்படம் எடுத்தேன். நிச்ச யிக்கப்பட்ட திருமணம் பண்ணவங்க முதன் முதலா எப்படிப் பேசுவாங்க, அவங்க முதல் சந்திப்பில் எந்த மாதிரியான அன்பு இருக் கும்னு தீம் பிடிச்சு, 'கண்ட நாள் முதலாய்’னு குறும்படம் இயக்கினேன். ஆனா, எனக்கே அது பிடிக்கலை. இருந்தாலும், படத்தோட ஸ்க்ரிப்ட் நல்லா இருக்குனு பார்த்த வங்க சொன்னாங்க. 'ஸ்க்ரிப்ட் வர்றவ னுக்கு டைரக்ஷன் வராதா?’னு அடுத்தடுத்து பத்து குறும்படங்கள் இயக்கினேன். நண்பர்கள் பாராட்டினாங்க. அப்பா, அம்மா என்

“சிரிப்பு தொத்திக்கும்... பயம் பத்திக்காது!”

மேல் நம்பிக்கை வெச்சாங்க. தயாரிப் பாளர் சி.வி.குமார் வாய்ப்பு கொடுத்தார். 'பீட்சா-2 வில்லா’ படம் இப்படித்தான் உருவாச்சு!''

''பீட்சாவுக்கும் வில்லாவுக்கும் எவ்வளவு ஒற்றுமைகள்?''

'' 'வில்லா’ன்னா வீடு. ஒரு வீட்டுக்குள் நடக்கும் பிரச்னைகள், சம்பவங்கள்தான் கதை. ஃபேன்டஸி த்ரில்லர். மத்தபடி பீட்சா, வில்லா கதைகள் வித்தியாசமானவை. இப்போ காமெடிப் படம்னா, தியேட்டர்ல பக்கத்துல இருக்கிறவங்க சிரிக்கும்போதே நமக்கும் அந்தச் சிரிப்பு தொத்திக்கும். ஆனா, திகில் படத்தில் பயத்தை அந்த மாதிரி பாஸ் செய்ய முடியாது. அதுதான் த்ரில்லர் படம் பண்ணுவதில் இருக்கும் சவால். எல்லா மதங்களிலும் இருக்கிற சில பழக்கங்களுக்குப் பின்னாடி நிறைய அர்த்தம், காரணம் இருக்கும். அதைப் பத்தி நாம யோசிச்சிருக்க மாட்டோம். இந்தப் படத்தில் அப்படியான சில பழக்கங்களைப் பத்தித் துணிச்சலாப் பேசியிருக்கோம்!''

“சிரிப்பு தொத்திக்கும்... பயம் பத்திக்காது!”

''பீட்சா ஹிட் எதிர்பார்ப்பை அதிகமா வெச்சிருக்குமே... எப்படிச் சமாளிப்பீங்க?''

''சிரிக்கிறது, அழுகிறது, பயப்படுறதுனு ஒவ்வொரு சீன்லயும் என்ன நடக்கும்னு ரசிகர் கள் பல்ஸ் பார்த்துதான் காட்சிகளை உருவாக்கி இருக்கேன். இப்போ சினிமாவில் ஒவ்வொரு 20 நிமிஷத்துக்கும் நிமிர்ந்து உட்கார்ற மாதிரி ட்விஸ்ட் எதிர்பார்க்கிறாங்க. அந்த எதிர்பார்ப்பை நிறைவேத்திட்டாலே போதும். வேற எதையும் மனசுல வெச்சுக்க வேண்டாம்!''  

''பத்து குறும்படங்கள் இயக்கியது மட்டும்தான் சினிமாவுக்கான உங்க அனுபவமா?''

''பத்து குறும்படங்கள் பண்ண பிறகும் நான் யார்கிட்டயாவது அசிஸ்டென்ட்டா சேரத்தான் ஆசைப்பட்டேன். ஆனா, 'சூது கவ்வும்’ நலன் குமரசாமிதான் 'உங்க படங்கள்ல நல்ல மேக்கிங் தெரியுது. இது போதும். நீங்க சில்வர் ஸ்க்ரீன் சினிமாவுக்கு ஸ்க்ரிப்ட் பண்ண ஆரம்பிச்சிடுங்க’னு தைரியம் கொடுத்தார்.  இருந்தாலும் ஒளிப்பதிவு, ஆர்ட் டைரக்ஷன் பத்தி நிறைய ஹோம் வொர்க் பண்ணித் தெரிஞ்சுக்கிட்டேன். லைட்டிங், எடிட்டிங் துறைகளின் அடிப்படையையும் கத்துக்கிட்டேன். ஒரு சினிமா இயக்குநரா என்னை முழுசாத் தகுதிப்படுத்திக்கிட்டுதான் ஷூட்டிங்

“சிரிப்பு தொத்திக்கும்... பயம் பத்திக்காது!”

கிளம்பினேன். முதல் நாள் ஷூட்டிங்ல பயமாத்தான் இருந்தது. ஆனா, எல்லாரும் ஃப்ரெண்ட்லியா இருந்ததால் சமாளிச்சுட்டேன். குறும்படம் பண்றப்போ லொகேஷன் அனுமதி, நடிகர்களுக்குச் சாப்பாடுனு எல்லா வேலையையும் நாமதான் பார்க்கணும். ஆனா, சினிமாவில் ஒவ்வொரு வேலைக்கும் தனித் தனி ஆள் இருக்கிறதால மேக்கிங்ல மட்டும் கவனம் செலுத்தினாப் போதும். அதனால குறும்படத்தைவிட, சினிமா ஈஸியாத்தான் இருக்கு!''