சினிமா
Published:Updated:

கொஞ்சம் சமந்தா... கொஞ்சம் நயன்தாரா... பின்னே தனுஷ்!

க.ராஜீவ் காந்தி

##~##

“இந்தப் படத்துக்கு முதல்ல 'சொட்டவாளக்குட்டி’னுதான் பேர் வெச்சோம். தஞ்சை வட்டார வழக்குல அதுக்கு துறுதுறுனு தீயா திரியிற பையன்னு அர்த்தம் வரும். ஆனா, டெல்டா தவிர, மத்த பெல்ட்காரங்களுக்கு அந்த வார்த்தைக்கு அர்த்தமே புரியலை. அதான் பேரை 'நையாண்டி’னு மாத்திட்டோம். இது முழுக்க முழுக்க தனுஷின் 'நையாண்டி’. முதன்முறையா என் படத்துல ஒரு டூயட்டுக்காக வெளிநாடு போறேன். தனுஷ§க்குனு ஒரு கலர் இருக்குல்ல!'' - கலகலவெனச் சிரிக்கிறார் சற்குணம். 'களவாணி’யில் கவனம் ஈர்த்து 'வாகை சூட வா’-வில் தேசிய விருது கவர்ந்தவர், வாஞ்சையோடு தஞ்சைத் தமிழ் பேசுகிறார்...

''தனுஷ் சற்குணம்... ரெண்டு பேருமே தேசிய விருது ஜெயிச்சவங்க. என்ன எதிர்பார்க்கலாம் இந்தக் கூட்டணியிடம்?''

''என்டர்டெயின்மென்ட்! கும்பகோணத்துல குத்துவிளக்குக் கடை வெச்சிருக்கிற குடும்பத்துப் பையன், சின்னவண்டு. பல் டாக்டருக்குப் படிக்கிற பொண்ணு, வனரோஜா. இவங்களுக்கு நடுவுல வர்ற காதல்தான் படம். அந்தக் காதலைக் காமெடியா மட்டுமே சொல்றோம். சும்மா பேசிட்டு இருக்கிறப்போ, 'களவாணி’, 'வாகை சூட வா’ ரெண்டுமே தனுஷ§க்குப் பொருத்தமா இருக்கும்னு என் அசிஸ்டென்ட்ஸ் சொல்வாங்க. 'அட... ஆமால்ல’னு எனக்கும் தோணுச்சு. அப்புறம் தனுஷ் சாருக்காகவே ஒரு படம் பண்ணலாம்னு, அவர்கிட்ட கதை சொன்னேன். உடனே, ஸ்க்ரிப்ட் கொடுங்கனு கேட்டார். ஷூட்டிங் வரும்போது அந்த ஸ்க்ரிப்ட்டை மூணு தடவை படிச் சுட்டேன்னு சொன்னார். எப்பவும் அவர் கையில ஸ்க்ரிப்ட் ஒரு காப்பி இருக்கும். அடுத்த நாள் எந்த சீன், என்ன ஷாட்னு கேட்டுக் கிட்டு செமத்தியா ஹோம் வொர்க் பண்ணிட்டுத்தான் வர்றார்.  

50 நாள்ல படத்தை முடிக்கணும்னு திட்டம் போட்டுத்தான் ஆரம்பிச்சேன். தனுஷ§ம் கேமராமேன் வேல்ராஜும் செம ஸ்பீடா வேலை பார்த்துக் கொடுத்ததுல, அதைச் சாதிச்சுட்டோம். 'இந்த மாதிரிப் படம் எடுத்தா, நான் வருஷத்துக்கு அஞ்சு படம் பண்ணுவேன்’னு தனுஷே ஆச்சர்யப் பட்டார்!''

கொஞ்சம் சமந்தா... கொஞ்சம் நயன்தாரா... பின்னே தனுஷ்!
கொஞ்சம் சமந்தா... கொஞ்சம் நயன்தாரா... பின்னே தனுஷ்!

'' 'வாகை சூட வா’-ல ஒரு கிளாஸிக் ஃபீல் இருந்துச்சு. ஆனா, இனி நீங்களும் கமர்ஷியல் சவாரி மட்டும்தான் பண்ணுவீங்களா?''

'' 'வாகை சூட வா’ மாதிரி நிறையப் படங்கள் பண்ண ஆசைதான். ஆனா, அப்படியான படங்கள் பண்ணணும்னா, நாம முதல்ல இங்கே நிலைச்சு நிக்கணும். அதுக்காகச் சில படங்கள் என்டர்டெயினரா பண்ண வேண்டியிருக்கு. தனியாளா நடு ரோட்ல நின்னு புரட்சி பண்ண முடியாதுங்கிற மாதிரிதான். 'களவாணி’ இல்லைன்னா 'வாகை சூட வா’ இல்லை. அதுக்காக 'களவாணி, நையாண்டி’ எல்லாம் நல்ல படங்கள் இல்லைனு சொல்ல முடியாது. இதுலயும் மெசேஜ் இருக்கும். ஆனா, பொழுதுபோக்குக்கு இடையில்தான் அது வரும். 'இவன் இது மாதிரிதான் எடுப்பான்’னு எந்த வட்டத்துக்குள்ளயும் சிக்கிக்க நான் விரும்பலை!''

கொஞ்சம் சமந்தா... கொஞ்சம் நயன்தாரா... பின்னே தனுஷ்!

'' 'வாகை சூட வா’வுக்கு அப்புறம் ஏன் இவ்ளோ பெரிய இடைவெளி?''

''எல்லா ஹீரோக்கள் கையிலும் எப்பவும் நாலஞ்சு படங்கள் இருக்கே. நான் தனுஷ் சார்கிட்ட கால்ஷீட் கேட்டப்ப, அவர் செம பிஸி. கதை அவருக்குப் பிடிச்சுப் போய்ட்டதால கால்ஷீட்டை உறுதிப்படுத்திட்டு வந்து நடிச்சுக்கொடுத்தார். ஹீரோயின் நஸ்ரியா, பரீட்சை முடிச்சுட்டு வர கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. நான் அவங்களை முதல்முறை பார்த்தப்ப, தமிழ்ல ஒரு படம்தான் புக் ஆகியிருந்தாங்க. ஆனா, இப்போ தமிழ்நாட்டுல அதுக்குள்ள அவங்களுக்கு ஏகப்பட்ட ஃபேன் க்ளப்ஸ். சமந்தா, நயன்தாரா கலந்து செஞ்ச பொண்ணு மாதிரி இருக்காங்க. இந்தப் பொண்ணு எங்கேயோ போகப்போகுதுனு நினைச்சேன். அதே மாதிரி நடந்துடுச்சு. ரசிகர்களுக்கு அறிமுகமான ஒரு ஹீரோ, ஹீரோயினை வெச்சுப் படம் பண்ண கொஞ்சம் காத்திருக்கத்தான் வேணும்!''