சின்னதாகத் தலை சாய்த்து, பெரிய கண்களால் சிரிக்கிறார் அமலா பால். மேல்
வரிசைப் பற்கள் மட்டும் பளீரிடும் மில்லி மீட்டர் புன்னகைக்கு, தென் மேற்கு மலைத் தொடரையே தாரை வார்க்கலாம்!
தமிழ் சினிமாவின் புதிய மைனா, எதிர்ப்படும் எல்லோரிடமும், " 'மைனா' பாத்தீங்களா?" என்று குதூகலமாக விசாரிக்கிறது!
"எப்படி இருக்கு 'மைனா' அனுபவம்?"
"இவ்வளவு சந்தோஷத்தை இதுவரை நான் அனுபவிச்சதே கிடையாது. திடீர்னு ஹோட்டல் கதவைத் தட்டி, 'ரஜினி சார் அனுப்பி வெச்சார்'னு பொக்கே கொடுக்குறாங்க. அட்டையில் 'வாழ்த்துக்கள்'னு ரஜினி கையெழுத்து. கண்ல கண்ணீர் ததும்ப பொக்கேவை அணைச்சுட்டே நிக்கிறேன். முதல் படம் தப்புப் பண்ணிட்டேன். ஆனா, அது எல்லாத்தையும் துடைச்சு, புதுசா பளிச்சுனு ஒரு இன்னிங்ஸ் துவக்கின மாதிரி 'மைனா' கேரக்டர். பிரபு சாலமன் சாருக்கு நன்றி. அங்கே மலைவாழ் மக்களோடு செம ஆட்டம். எல்லோருமே அங்கே ரொம்ப இயல்பா இருக்காங்க. சிரிச்சுப் பழகுறாங்க. 'மைனா' படத்தில் பார்த்த கிராமத்துச் சண்டை எல்லாம் அங்கே நடக்கிற அசல் நிகழ்ச்சிகள். உணர்ச்சிகளை உள்ளே பூட்டிவெச்சு புழுங்கிட்டே இருக்கும் பழக்கமே இல்லை. அதான் வயசே தெரியாமல் கலகலப்பா ஒரு வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்காங்க!"
|