Published:Updated:

ஒரு மனுசனோட கதை!

ஒரு மனுசனோட கதை!


ஒரு மனுசனோட கதை!
ஒரு மனுசனோட கதை!
ஒரு மனுசனோட கதை!
நா.கதிர்வேலன்
ஒரு மனுசனோட கதை!

" 'அதிகம் படிச்சவர்கள் நிறைஞ்ச மாவட்டமும் இதுதான். அதே சமயம், அதிகக்

குற்றவாளிகள் மலிந்து இருக்கிற மாவட்டமும் இதுதான்' - குமரி மாவட்டத்தைப்பத்தி இப்படித்தான் போலீஸ் ரெக்கார்டு சொல்லுது. குமரி மாவட்ட மக்கள், மொழி, பழக்கவழக்கம் எதுவுமே சினிமாவில் அழுத்தமாகப் பதிவானது இல்லைன்னு எனக்குத் தோணிட்டே இருக்கும். மண்ணும் மனசுமா அந்த மண்ணுலயே வாழ்ந்தவன் நான். அந்த மாவட்டத்தில் வாழ்ந்த ஒரு மனுசனோட கதைதான் 'தம்பி வெட்டோத்தி சுந்தரம்' படம். அந்த மாவட்டத்தின் பல வீடுகளில் கொல்லைப்புறம் கேரளாவிலும், வாசப்படி தமிழ்நாட்டிலும் இருக்கு. எங்கேயும் சேர முடியாமல், அங்கீகாரம் கிடைக்காமல் இருக்கிற ஏரியா. எல்லையைத் தாண்டினால் இளைஞர்களுக்குச் சில வசதி வாய்ப்புகள் இருக்கு. ஆனா, அது குற்றத்தில்தான் முடியும். குமரி மாவட்ட மனிதர்களின் உள்ளும் புறமும் அலசுகிற கதை!" குமரி மாவட்டக் குரலாக ஒலிக்கிறார் வடிவுடையான். மலையாள இயக்குநர் ஷாஜி கைலாஷின் சீடர்!

ஒரு மனுசனோட கதை!

மேலும் படங்களுக்கு...

" 'மலையூர் மம்பட்டியான்' மாதிரியானவனா 'வெட்டோத்தி சுந்தரம்'?"

"அப்படி எந்த அடையாளமும் இல்லாதவன். நீங்க சுந்தரத்தை ஒரு சட்டதிட்டத்தில் நிறுத்தி வரையறுக்க முடியாது. 'நல்லவரா... கெட்ட வரா'ன்னு ஒரு கேள்விக்குள் அவனை அடக் கவும் முடியாது. சுந்தரத்தை யாராலும்வெறுக் கவும் முடியாது. அதே நேரத்தில் புரிந்துகொள் ளவும் முடியாது. அவரது நடவடிக்கைகள் எல்லாமே வெட்டவெளிச்சமாகத்தான் நடந்தன. ஆனாலும், அதிலும் ஒரு புதிர்த்தன்மை ஒளிஞ்சுட்டு இருக்கும். விவரமா இதுதான்னு சொல்லிட முடியாது. ஒரு வாழ்க்கையைப் பார்த்துக் கொண்டாடுகிற அனுபவம் இதனால் தவறிப்போகலாம். எச்சரிக்கையாகவும் பேச வேண்டி இருக்கிறது. அப்படிப்பட்ட கதை!"


ஒரு மனுசனோட கதை!

"இந்தக் கதாபாத்திரத்தின் கனம் தாங்குவாரா கரண்?"

"இதற்கு முன்னால் பார்த்த எந்தச் சாயலும் இல்லாத கரணை இந்தப் படத்தில் பார்க்கலாம். வெட்டோத்தி சுந்தரத்தின் முதுகில் கேமராவைக் கட்டிவிட்டால், எந்த அனுபவம் கிடைக்குமோ, அதுதான் பதிவாகி இருக்கு. பாத்திரத்தின் அருமையை உணர்த்திவிட்டால், யாராலும் அந்த கேரக்டரைச் செறிவாகச் செய்ய முடியும். இத்தனை நாளாகக் காத்திருந்த என் அனுபவத்தை எல்லாம் ஒன்று திரட்டி, அவர் மீது வைத்திருக்கிறேன். எனக்கு நியாயம் செய்திருக்கிறார் கரண். அதை உணர்ந்துதான் இந்த வார்த்தையைச் சொல்ல முடிகிறது என்னால்!"

ஒரு மனுசனோட கதை!

"ஆனா, இனிமேலும் அயிட்டம் ஸாங், கண்ணாமூச்சி காதல் என்று அஞ்சலியை நீங்க வீணடிக்க முடியாதே?"

"நிச்சயமா... நானும் அதை உணர்ந்தே இருக்கேன். ஏற்கெனவே, வசந்தபாலன் அவரை நடிப்பில் மிகச் சிறந்த உயரத்துக்குக் கொண்டுபோய் நிறுத்திவிட்டார். நான் அதில் எந்தக் கெடுதலும் செய்யவில்லை. 'லூர்து மேரி'யாக, கண்களிலேயே அத்தனை உணர்ச்சிகளையும் கொண்டுவந்து கொட்டி இருக்கிறார் அஞ்சலி. தொடர்ந்து, இதுமாதிரி படங்கள் அமையும்போது, காலப்போக்கில் அவர் ஒரு சாவித்திரி அம்மா மாதிரிகூட நடிகையர் திலகம் ஆகிவிடலாம். யார் கண்டது!"

"நீங்க அந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரி.

ஒரு மனுசனோட கதை!

ஆனா, படத்தில் மண் மணம் சேர்க்க நீங்க ஒருத்தர் மட்டும் போதுமா... கோடம்பாக்கத்தில் 'மதுர மச்சான்'களின் ஆதிக்கம்தானே அதிகம்?"

"எனக்கும் அது ஆரம்பத்தில் சின்ன உறுத்தலா இருந்தது. ஆனா, அது அர்த்தம் இல்லாத பயம்னு கவிப்பேரரசு வைரமுத்து உணரவெச்சுட்டார். குமரி மாவட்டத்தின் வார்த்தைகளிலேயே பாடல்கள் எழுதி இருக்கார். இப்படி ஒரு அக்கறையும் ஆர்வ மும் அவருக்குத்தான் வரும். குமரி மாவட்டத்திலேயே பிறந்து வளர்ந்த நானே அறி யாத வார்த்தைகள்கூட சந்தத்தோடு கலந்து விழுந்தன. எனக்கு அவரைக் கட்டித் தழுவிக்கணும்போல இருந்தது. எங்க ஊர் வாத்தியங்களைப் பயன்படுத்தி, பட்டையைக் கிளப்பி இருக்கார் இசையமைப்பாளர் வித்யாசாகர். மதுரை மண்ணுன்னு பேசிக் கொண்டாடுறோம் இல்லையா... அந்த மாதிரியே முதல் தடவையா குமரி மண்ணு பார்வைக்கு வருது!"

ஒரு மனுசனோட கதை!
ஒரு மனுசனோட கதை!