"எல்லா இயக்குநர்களும் நடிக்க வர்றாங்கன்னு நீங்களும் நடிக்கிறீங்களா?"
"ஒரு திருத்தம். நான் நடிக்கத்தான் சினிமாவுக்கு வந்தேன். யதேச்சையாதான் இயக்குநர் ஆனேன். அதனால், இது மற்றவங்களைப் பின்பற்றிச் செய்யுறது இல்லை. விரும்பி, ஆர்வமா நடிச்சிருக்கேன். இந்தக் கதைக்கு நான் நிச்சயம் பொருத்தமா இருப்பேன். நாம் வாழும் வாழ்க்கையை மேலும் அழகாக்கிக்கொள்ளும் முயற்சிதான் இந்தப் படம். ஒரு குயிலின் சத்தம் எப்படி ஒரு வனத்தையே அழகாக்குகிறதோ, அதுபோல 'மகிழ்ச்சி' படம் வாழ்க்கையை அழகாக்கும்!
முதலில் இந்தப் படத்தை பிரகாஷ்ராஜ் சார் தயாரிக்கிறதா இருந்துச்சு. அது முடியாமப்போச்சு. அதனாலேயே, இதில் தானா முன்வந்து நடித்தார். அண்ணன் சீமான், கோபம் நிறைந்த ஒரு பாத்திரத்தில் நெருப்பா வர்றார். 'செவந்த பெருமாள்' என்ற பாத்திரத்தில் நடிச்சிருக்கும் சம்பத்தும், குழலியாக நடித்திருக்கும் அஞ்சலியும் அசத்தி இருக்காங்க!" என்கிறார் கௌதமன்!
மேலும் படங்களுக்கு...
|