எனக்கு இல்லை யேன்னு நான் ஏக்கப்பட்டு இருக்கேன். பிரியத்தைத் தவிர, எதுவும் தராத ஒருத்தி சட்டுனு இல்லாமப் போயிட் டால், நான் என்ன ஆவேன்?
என்னைவிட அவங்க அம்மாவோட கஷ்டத்தை எப்படிச் சொல்றது? ஸ்கூல், காலேஜ், வேலைன்னு ஸ்வேதா ஒவ்வொரு கட்டமாகப் போனபோது, அவளோட கூடவே இருந்தது சீதா தான். என்னால முடியலை... சீதா வோட கண்ணீரைப் பார்க்கிற சக்தி எனக்கு இல்லை. நினைவுகளைத் தவிர, இனிமே... எங்ககிட்ட என்ன இருக்கு? செட்டி நாடு வித்யாஷ்ரம் ஸ்கூல்ல ஸ்வேதாவைக் கொண்டுபோய் விட்டு வந்த முதல் நாளோட அந்த நிமிஷம், கண்ணுக்கு உள்ளே அப்படியே இருக்கு. இப்போ, இறந்த பிறகு அவ வேலை பார்த்த இன்ஃபோசிஸ்ல இருந்து... ஸ்வேதாவோட வேலை பார்த்தவங்க எல்லோரும் வந்திருந்தாங்க. 'ஸ்வேதா எங்ககிட்ட எவ்வளவு நல்லாப் பழகினா... எவ்வளவு சொல்லிக்கொடுத்தா... எப்படிப் பேசுவா... எவ்வளவு நல்லவ தெரியுமா'ன்னு அவங்க சொல்லச் சொல்ல... எனக்கு கண்ணீர் நின்னுருச்சு.
'என் ஸ்வேதா இப்படி எல்லாம் இருந்தாளா... இவ்வளவு அற்புதமா இருந்தாளா... என் பொண்ணைப் பத்தி இன்னும் கொஞ்சம் சொல்லுங்களேன்'னு கேட்கத் தவிப்பா இருந்துச்சு.
ஸ்வேதா... இந்த அப்பன் இன்னும் கொஞ்சம் உன்கூட இருந்திருக்கக் கூடாதா?!"
|