ஸ்பெஷல் -1
Published:Updated:

பசங்களுக்கு மரியாதை!

பசங்களுக்கு மரியாதை!


பசங்களுக்கு மரியாதை!
பசங்களுக்கு மரியாதை!
பசங்களுக்கு மரியாதை!
நா.கதிர்வேலன்
படம்.கே.ராஜசேகரன்
பசங்களுக்கு மரியாதை!

குறும்புச் சிப்பாய்களாக கோடம்பாக்கத்தைத் திரும்பிப் பார்க்கவைத்த 'பசங்க' படைக்கு

இப்போது தேசிய கௌரவம்!

'அன்புக்கரசு' கிஷோரும், 'ஜீவா' ஸ்ரீராமும் சிறந்த குழந்தை நட்சத்திரங்களுக்கான தேசிய விருதினை வென்று இருக்கிறார்கள். 'எங்கே இருக்கீங்க?' என விசாரித்தால், "சசியண்ணனும் பாண்டி அண்ணனும் எங்களைப் பாராட்டிச் சீராட்டி, தாலாட்டிட்டு இருக்காங்க. வந்து பாருங்க!" எனக் குதூகலிக்கிறார்கள் குட்டிப் பசங்க.

"நான்தான் ஃபர்ஸ்ட்.. நான்தான் ஃபர்ஸ்ட்!" என்று இழுத்துப் பிடித்துப் பேசுகிறான் ஸ்ரீராம். "அப்பா போன்ல, 'டேய் உனக்கும் கிஷோருக்கும் தேசிய விருது கிடைச்சிருக்குடா'ன்னு பதற்றமா தகவல் சொல்றார். அழ ஆரம்பிச்சுட்டேன். அம்மா தான் சமாதானப்படுத்தினாங்க. 'கற்றது தமிழ்'தான் என் முதல் படம். இரண்டாவது படத்திலேயே தேசிய விருது. தினமும் ஷூட்டிங் போயிட்டு இருக்கிறதால, இப்போ வீட்லயே டியூஷன் படிக்கிறேன். இனி, சினிமாதான் என் எதிர்காலம்னு முடிவு பண்ணிட்டேன். என் அப்பா சிவராம், ஐ.வி. சசி சாரிடம் அசிஸ்டென்ட் டைரக்டரா இருந்தார். இப்ப தனியா முயற்சி பண்றார். அவரும் என்னை உற்சாகப்படுத்துறார். கமல் சார் ரொம்ப இஷ்டம். ஆனா, ரஜினி சார் மாதிரி ஆகணும்னு ஆசை. இப்ப 14 வயசு. அஞ்சாறு வருஷம் ரெண்டுங்கெட்டான் பருவத்தை சமாளிச்சுட்டா, ஹீரோவா அதிரடி பண்ணிர வேண்டியதுதான்!" - ஸ்ரீராம் வார்த்தைகளிலும் கண்களிலும் அத்தனை நம்பிக்கை.

பசங்களுக்கு மரியாதை!

மாறாக, கிஷோர் குரலில் அத்தனை சாந்தம். "என் அப்பா பிசினஸ்மேன். ஸ்ரீராம் மாதிரி சினிமாதான் இனிமேல்னு சொல்ல முடியலை. இப்போதைக்குப் படிக்கணும். அவ்வளவுதான். ஆனா, பாண்டிராஜ் அண்ணன் 'இது நல்ல சினிமா. நடிடா'ன்னு சொன்னா, நடிப்பேன். எங்கே போனாலும் 'நீதானே அன்புக்கரசு'ன்னு கை குலுக்குறாங்க. இப்பவே எனக்கு மெடிக்கல் காலேஜ்ல படிக்கிற மூணு கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. 'துரோகி' படத்துல பூனம் பஜ்வாவுக்கு முத்தமும் கொடுத்துட்டேன். ப்ளஸ் ஒன் படிக்கிறப்பவே, இவ்வளவு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த அன்பு அண்ணன் பாண்டிராஜுக்கு என் வணக்கம்!" என்று அவர் காலில் விழுகிறான் கிஷோர். இயக்குநர் பாண்டிராஜ் தன் பங்குக்கு, "சசிகுமார் அண்ணே..." என ஆரம்பிக்க, "நீ வளர்ந்துட்டப்பா!" எனக் கட்டிக்கொண்டு சிரிக்கிறார் சசி!

குறும்புப் பசங்க!

பசங்களுக்கு மரியாதை!
பசங்களுக்கு மரியாதை!