ஸ்பெஷல் -1
Published:Updated:

ஒழுக்கம் தவறேல்!

ஒழுக்கம் தவறேல்!


ஒழுக்கம் தவறேல்!
ஒழுக்கம் தவறேல்!
ஒழுக்கம் தவறேல்!
பாரதி தம்பி
ஒழுக்கம் தவறேல்!

பாரதியாரின் வரிகள் வரிசையாக சினிமா தலைப்புகள் ஆகின்றன. 'ஆண்மை தவறேல்'

இயக்குநர், தயாரிப்பாளர், ஹீரோ, ஒளிப்பதிவாளர், இசை அமைப்பாளர், எடிட்டர் என முழுக்க முழுக்கப் புது முகங்களின் கூட்டணியில் உருவாகிக்கொண்டு இருக்கும் படம்.

"என்ன பாஸ், இன்னொரு ஆக்ஷன் படமா?" என்று இயக்குநர் குழந்தை வேலப்பனிடம் கேட்டால், படபடவெனப் பேசத் தொடங்குகிறார்.

ஒழுக்கம் தவறேல்!

" 'ஆக்ஷன் படமா?'ன்னு மட்டும் கேட்டா, 'ஆமா'ன்னுதான் சொல்ல முடியும். ஆனா, இது ஒரு டிராவல் ஸ்க்ரிப்ட். சென்னை -கோவா ரூட்டில் கதை பயணிக்கும். இடையில் ஒரு காதல். இரண்டு நாள் சம்பவங்கள்தான் கதை. யாரோ ஓர் அப்பா தன் மகளை விஷ ஊசி போட்டுக் கொல்வது அவரோட பிரச்னை மட்டும் இல்லை. அந்த அப்பா, பல லட்சம் தகப்பன்களின் பிரதிநிதி. அந்தப் பொண்ணு, பல லட்சம் மகள்களின் சாம்பிள். தனி மனித ஒழுக்கம் ஒரு சமூகப் பிரச்னையா மாறிட்டு இருக்கிற தைப்பற்றிய கவலைதான் இந்தப் படம்!"

"சத்தமே இல்லாம புது முகங்களைவெச்சுப் படத்தைக் கிட்டத்தட்ட முடிச்சுட்டீங்கபோல?"

ஒழுக்கம் தவறேல்!

"யூனிட்ல பெரும்பாலானவர்கள் என் நண்பர்கள். நாலஞ்சு வருஷமா இந்தக் கதையைப் பேசிப் பேசி இதுக்குள்ளேயே ஊறிக்கிடக்குறோம். எங்க நட்பு, ஒற்றுமை, திறமையைப் பார்த்துதான் தயாரிப்பாளர் கமல்நயன் இந்த வாய்ப்பைத் தந்தார். படம் கிட்டத்தட்ட ரிலீஸுக்குத் தயார். படத்தின் கடைசி ஒரு நிமிஷம்தான் க்ளைமாக்ஸ். இரண்டரை மணி நேரக் கதையும் அந்த ஒரு நிமிஷத்தை நோக்கித்தான் நகரும். அதனால், அந்தக் கடைசி ஒரு நிமிஷத்தை ஒரு நொடிக்கு ஒரு ஷாட் வீதம் 60 ஷாட்களில் எடுத்திருக்கோம். எல்லோருமே புதுமுகங்கள் என்பதால், பரீட்சை எழுதிட்டுக் காத்திருக்கும் மாணவர்கள் மாதிரி காத்திருக்கோம்!"

ஒழுக்கம் தவறேல்!
ஒழுக்கம் தவறேல்!