"நான் வளர்ந்த சூழல் அப்படி. அப்பா எந்த ஒரு விஷயத்திலும் செட்டில் ஆகாம, ஏதாவது புதுசா டிரை பண்ணிட்டே இருப்பார். டான்ஸரா இருந்தார், நடிச்சார், எழுதினார், கேமரா கத்துக்கிட்டார், பாட்டுப் பாடினார், சினிமா டைரக்ட் பண்ணார்.... இப்போ வரை எதையாவது தேடி ஓடிட்டே இருக்கார். அப்படி ஒருத்தர் பக்கத்துல இருக்கும்போது, நான் எப்படி சும்மா இருக்க முடியும்? சினிமாதான் என் கேரியர்னு முடிவு பண்ண பிறகு, ஏற்கெனவே எனக்குத் தெரிஞ்ச மியூஸிக் பண்ணேன். இப்ப, நடிக்கலாம்னு ஆசை வந்துச்சு. நடிக்க ஆரம்பிச்சுட்டேன். பக்கா என்டர்டெயினர் ஆக இருக்கணும். அது மட்டும்தான் என் ஆசை!"
"அப்பாவும் ரஜினியும் நல்ல ஃப்ரெண்ட்ஸ்... நீங்க நடிக்க ஆரம்பிச்ச பிறகு, ரஜினி எதுவும் உங்களுக்கு டிப்ஸ் அல்லது அட்வைஸ் சொன்னாரா?"
" 'உன்னைப் போல் ஒருவன்' ப்ரிவியூ ஷோவில்தான் கடைசியா நான் ரஜினி அங்கிளைப் பார்த்தேன். 'மியூஸிக் பென்டாஸ்டிக். சூப்பர் சூப்பர்'னு பாராட்டினார். அதுக்கு அப்புறம் நான் அவரைப் பார்க்கலை. நான் நடிச்ச படம் ப்ரிவியூ ஷோ பார்த்துட்டும் அவர் 'பென்டாஸ்டிக்... சூப்பர் சூப்பர்'னு சொல்லணும்!"
"கமல்னு சொன்னாலே தேசிய விருது ஞாபகம் வராதவங்களுக்குக்கூட லிப் கிஸ் ஞாபகம் வரும். கமல் பொண்ணுகிட்டயும் லிப் கிஸ் எதிர்பார்ப்பாங்களே. என்ன பதில் வெச்சிருக்கீங்க?"
"ரோட்ல ரெண்டு பேர் சண்டை போட்டா, ஒருத்தர் இன்னொருத்தர் முகத்துல ஓங்கிக் குத்துவாங்க. அப்படித்தானே சண்டைக் காட்சிகளின்போது ஹீரோ வில்லன் முகத்துல பஞ்ச் பண்றார். 'அது எப்படி ஹீரோ என்னை அடிக்கிற மாதிரி நடிக்க முடியும்?'னு வில்லன்கள் யாராவது இதுவரை குரல் கொடுத்திருக்காங்களா? அப்புறம் ஏன் ஹீரோயின்கள்கிட்ட மட்டும் லிப் கிஸ் பத்தி இப்படிக் கேள்வி வருதுன்னு எனக்குப் புரியலை. இல்லை, ரியல் லைஃப்ல யாரும் யாருக்கும் கிஸ் கொடுக்காம இருக்காங்களா? ஆக்ஷனுக்கு ஸ்டன்ட், சென்ட்டிமென்ட்டுக்குக் கண்ணீர் மாதிரி ரொமான்ஸுக்கு கிஸ் ஒரு எலிமென்ட். அதைப் பார்த்து ஏதோ பூதம் மாதிரி பயப்படுற ஆள் நான் இல்லை. அந்த சிச்சுவேஷனுக்குத் தேவைப்பட்டா, எந்த லெவலுக்கும் போகலாம். ஆனா, சும்மா ஹீரோ கனவு கண்டார்னு லிப் லாக் பண்ண முடியாது. இன்னொரு விஷயம், அப்பா எப்பவுமே தேவை இல்லாம படத்துல கிஸ் ஸீன் வெச்சிருக்க மாட்டார். 'மகாநதி' படத்தில் அந்த லிப் கிஸ் உறுத்துதுன்னு ஒருத்தராவது சொல்ல முடியுமா?"
"இப்படி எல்லாம் பேச அப்பாகிட்ட தினமும் டியூஷன் எடுத்துக்குவீங்களா?"
"நான் அப்பாவைப் பார்த்தே முழுசா ரெண்டு வாரம் ஆச்சுங்க. ரெண்டு பேரும் ஷூட்டிங்... ஷூட்டிங்னு ஓடிட்டே இருக்கோம். நான் பெரும்பாலும் மும்பையில்தான் |