இதுக்கு முன்னாடியே ஒரு தடவை, ரஜினி சாரோட திரு மண நாள் விழாவுக்குச் சமைக் கிற வாய்ப்பு எங்களுக்குக் கிடைச்சது. அப்போ பந்தியில் சாப்பிட உட்கார்ந்த ரஜினி, மத்த எல்லா பதார்த்தத்தையும் ஒதுக்கிவெச்சுட்டு, பால் பாயசத் தைத் திரும்பத் திரும்பக் கேட்டு வாங்கிச் சாப்பிட்டார். அந்த ருசி தந்த மயக்கமோ என்னவோ, இப்ப அவரோட மகள் கல்யா ணத்துக்கும் பால் பாயசம் வேணும்னு சொல்லி இருக் கார்.
ரஜினி சார் ஒரு அயிட்டத்தோட திருப்தி அடைஞ்சுட்டார். ஆனா, லதா மேடம் அப்படி இல்லை. வரிசையா இலைகொள்ளாத அளவுக்கு ஏகப்பட்ட அயிட்டங்களை அடுக்கிட்டாங்க. ஆயிரக்கணக்கான பேர் வருவாங்க கல்யாணத் துக்கு. வர்ற ஒவ்வொருத்தருக்கும் நிச்சயம் பிடிக்கிற ஏதோ ஒரு அயிட்டம் இலையில் இருக்கணும். அதே சமயம் பாரம்பரிய சுவையையும் விட்டுக் கொடுத்துரக் கூடாது. கல்யாணத்துக்கு முந்தின நாள் அக்காரவடிசல், தயிர்வடை, சாத்தமதுனு அய் யங்கார் சமையல் வகைகளும் அவசியம் இருக்கணும்'னு சொன்னார்.
கல்யாணப் பொண்ணு சௌந்தர்யா, 'எனக்கு ஃப்ரைடு ரைஸ்தான் ரொம்பப் பிடிக்கும்'னு சொன்னாங்க. மாப்பிள்ளை அஸ்வின் சின்ன வயசுல இருந்தே எனக்குப் பழக்கம். அதனால ரொம்ப உரிமையா, 'அங்கிள் சோன்பப்டி, மால் புவாவைக் கண்டிப்பா மெனுவில் சேர்த்துடுங்க! எங்க பாட்டி ஜாங்கிரி ரொம்பப் பிரமாதமா சுத்துவாங்க. அதைச் சாப்பிட்டுச் சாப்பிட்டுப் பழகிட்டேன். அதனால ஜாங்கிரியும் சேர்த்துக்குங்க'ன்னு சொன்னார்.
|