சினிமா
Published:Updated:

அர்த்தம் சொன்னால், அருமையான முத்தம்!

அர்த்தம் சொன்னால், அருமையான முத்தம்!


அர்த்தம் சொன்னால், அருமையான முத்தம்!
அர்த்தம் சொன்னால், அருமையான முத்தம்!
அர்த்தம் சொன்னால், அருமையான முத்தம்!
எஸ்.கலீல்ராஜா
அர்த்தம் சொன்னால், அருமையான முத்தம்!

தெலுங்குத் திரையுலகம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் 'கொமரம் புலி'யின் பெண் புலி...

நிகேஷா படேல்.

கென்யா அப்பா, குஜராத் அம்மா என்று குளோபலைசேஷனுக்கு நிகேஷா... ஓர் அழகிய உதாரணம். பாலிவுட்டில் புதுமுகமாகக் கதவைத் தட்டி, டோலிவுட்டில் அறிமுகம் ஆகும் நிகேஷாவுடன் 'கால் மேல் கால்' போட்டுப் பேசியதில் இருந்து...

"நிகேஷா, நீங்க இந்தியா வந்து சேர்ந்த கதை சொல்லுங்க..."

"இங்கிலாந்தின் வேல்ஸில் பிறந்து வளந்தவள் நான். அம்மா இந்தி சினிமாவின் தீவிர ரசிகை. நிலாச் சோறு ஊட்டுற மாதிரி எனக்கு அமிதாப், மாதுரி தீட்சித் நடிச்ச படங்களைப் போட்டுக்காட்டி சோறு ஊட்டினார். 2006 'மிஸ்.வேல்ஸ்' இறுதிப் போட்டி வரை வந்தேன். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி எனக்கு 19 வயசாகும்போது 'நான் இந்திய சினிமாவில் நடிக்கப்போறேன்'னு மும்பைக்குக் கிளம்பினேன். அம்மா வாழ்த்தினாங்க. அப்பா பணம் கொடுத்து அனுப்பினார். பாலிவுட் என்னை ஏத்துக்கலை. அப்போதான் 'கொமரம் புலி' பத்தி கேள்விப்பட்டு எஸ்.ஜே.சூர்யாவுக்கு என் படங்களை அனுப்பிவெச்சேன். படங்களைப் பார்த்ததுமே, உடனே வரச் சொன்னார் சூர்யா சார். இப்போ நான் ஹீரோயின்!"

அர்த்தம் சொன்னால், அருமையான முத்தம்!

"எங்க ஊரு எஸ்.ஜே.சூர்யா எப்படி இருக்கார்?"

"வேலைன்னு வந்துட்டா, அவர் ஒரு டெரரிஸ்ட். படத்தில் போலீஸ் எஸ்.பி-யா வர்றேன். அடிதடியும் உண்டு. அதிரடி கிளாமரும் உண்டு. அவருக்கு ஸீன் ஓ.கே. ஆகும் வரைக்கும் நகர விட மாட்டார். ஒரு ஸீனில் எப்படி நடிக்கணும்னு அழகா நடிச்சுக் காட்டுவார். அவர் எதிர்பார்க்கிற மாதிரி நடிச்சாதான் டேக் ஓ.கே. ஆகும். ஹீரோ பவன் கல்யாண்... நடிப்பு பத்தி, இந்திய சினிமா பத்தி நிறைய டிப்ஸ் கொடுத்தார். போகப்போக நடிப்பில் தேறி நல்ல பேர் வாங்கிட்டேன்!"

அர்த்தம் சொன்னால், அருமையான முத்தம்!
அர்த்தம் சொன்னால், அருமையான முத்தம்!

"அதுசரி... நிகேஷான்னா என்ன அர்த்தம்?"

"தெரியலை. 'ஸ்டைலா இருக்குதேன்னு வெச்சேன். மத்தபடி அர்த்தம் எனக்குத் தெரியாது'ன்னு அம்மாவே கை விரிச்சிட்டாங்க. யாருக்காவது அர்த்தம் தெரிஞ்சா சொல்லுங்க. ஒரு ஃப்ளையிங் கிஸ் தர்றேன்!"

அர்த்தம் சொன்னால், அருமையான முத்தம்!
அர்த்தம் சொன்னால், அருமையான முத்தம்!