"லண்டன் லைவ் ஆர்க்கெஸ்ட்ரா அனுபவம் எப்படி இருந்தது?"
"நான் ஏற்கெனவே ஒரு ஹாலிவுட் பட கம்போஸிங்குக்காக ஹங்கேரியில் நூற்றுக்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள்கொண்ட ஆர்க்கெஸ்ட்ராவில் பணியாற்றி இருக்கிறேன். அதேபோல் இதுவும் ஓர் அனுபவம். வயலின், பிராஸ், உட்வின்ஸ் என்று பல்வேறு பிரிவுகளில் கிட்டத்தட்ட 120 இசைக் கலைஞர்கள் ஒருசேர வாசித்து முடிக்கும்போது, அதிர்ந்து அடங்குகிறது அந்த வளாகம். கீ-போர்டிலேயே எல்லாவித வாத்தியங்களையும் கேட்டுப் பழகிய காதுகள், அந்த லைவ் ஆர்க்கெஸ்ட்ராவில் லயித்தது. அங்கேயே தங்கிவிடலாம் என்று மனம் ஏங்கியது. இந்த அனுபவத்தை ரசிகர்களும் பெற வேண்டும் என்பதற்காக, அவர்களை முன் தயார்படுத்தவே இந்தத் தகவல் களைப் பகிர்கிறேன். மற்றபடி, இதில் விளம்பரமோ... வியா பாரமோ கிடையாது!"
"பரபரவெனத் தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்த நீங்கள், சற்று இடைவெளிவிட்டது ஏன்?"
"இசை கோப்பது எனது தொழில். இந்த இடைவெளிக்கு நான் காரணம் கிடையாது. புதிய இயக்குநர்கள் கதையோடு வரும்போது, அவர்களது நண்பர்கள், தயாரிப்பாளர் சொல்பவர் என புதிய இசையமைப்பாள ருடன் வருகின்றனர். அந்தக் கூட்டணி வெற்றி அடையும் பட்சத்தில், அடுத்தடுத்த படங்களுக்கும் தொடர்கிறது. புதியவர்கள் சினிமாவுக்கு வருவது நல்ல விஷயம்தானே. என்னுடன் பணியாற்ற வேண்டும் என்று விரும்பும் இயக்குநர்கள் தொடர்ந்து என்னுடன் இருக்கிறார்கள். விஜய்யின் 'காவலன்', கார்த்தியின் 'சிறுத்தை', கரு.பழனியப் பனின் 'மந்திரப் புன்னகை' என்று தமிழில் 10 படங் களிலும், மோகன்லால், ஜெயராம் என மலையாளப் படங்களிலும் பணிபுரிகிறேன். கிட்டத்தட்ட 300 படங்களுக்கு மேல் கம்போஸ் பண்ணியாச்சு. என்றைக்குமே எண்ணிக்கையில் மனம் லயித்தது இல்லை. செய்யும் வேலையைச் சரியாகச் செய்ய வேண்டும் என்பதே என் எண்ணம்!"
"இளம் இசையமைப்பாளர்களில் உங்கள் கவனம் ஈர்த்தவர் யார்?"
|