"எப்படி இவ்ளோ நல்லா தமிழ் பேசுறீங்க?"
"நான் பிறந்தது, வளர்ந்தது, படிச்சது எல்லாமே சென்னைதானே தலைவா. பத்மா சேஷாத்ரி, வேளாங்கண்ணி ஸ்கூல், தி.நகர் அரசாங்கப் பள்ளி, நியூ காலேஜ், கோடம்பாக்கம், டிரஸ்ட்புரம் கிரிக்கெட் கிரவுண்ட், சஃபையர் தியேட்டர் திருட்டு சினிமா, ஹோட்டல் ஹாலிவுட், பெசன்ட் நகர் சுண்டக் கஞ்சி, 12 பி பஸ் கானா கச்சேரி... அப்பப்பா! சென்னையில் இருந்த 24 வருஷ வாழ்க்கை எனக்கு நிறையக் கத்துக்கொடுத்திருக்கு தலைவா!"
"இப்பவும் தமிழ் சினிமா பார்ப்பீங்களா?"
"ஒரு படம் விட மாட்டேன். கமல் சார், பாரதிராஜா சார் படங்களுக்கு ஸ்கூல் பையனா இருக்கும்போதே அடிமை. இப்போ, சூர்யாவைப் பிடிச்சிருக்கு. சில படங்கள் ரொம்பப் பிடிச்சிருந்தா, கன்னடத்தில் ரீ-மேக் பண்ணி நடிச்சிருவேன். அப்படித்தான் 'தில்லுமுல்லு', 'அமர்க்களம்', 'பத்ரி' பட ரீ-மேக்கில் நடிச்சேன். 'ஜோகையா' ஸ்டில்ஸ் பார்த்துட்டு,
'நான் கடவுள்' மாதிரியே இருக்கே... அதோட ரீ-மேக்கா?'ன்னு விஜய், சூர்யா கேட்டாங்களாம். ஏற்கெனவே, நான் நடிச்ச மெகா ஹிட் படம் 'ஜோஹி'யின் இரண்டாம் பாகம்தான் 'ஜோகையா'. சும்மா பப்ளிசிட்டிக்காகப் பண்ணது அந்த அகோரி கெட்டப்!"
"இவ்வளவு ஆசை இருந்தா, நீங்க நேரடியாவே ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்கலாமே?"
"நடிக்கக் கூடாதுன்னு எந்த எண்ணமும் இல்லை. கன்னடத்தில் அறிமுகமாகி, ஒரு நிலையான இடத்தைப் பிடிச்ச பிறகு, வேற மொழிப் படங்களில் நடிக்க முடியலை. ஆனா, இப்பவும் மணிரத்னம் சார் படத்தில் நடிக்கணும்னு ரொம்பவே ஆசை. பார்ப்போம்!"
|