ஸ்பெஷல் -1
Published:Updated:

கமல் என்னைத் திருத்தினார்! சர்ப்ரைஸ் த்ரிஷா

கமல் என்னைத் திருத்தினார்! சர்ப்ரைஸ் த்ரிஷா

கமல் என்னைத் திருத்தினார்! சர்ப்ரைஸ் த்ரிஷா
கமல் என்னைத் திருத்தினார்! சர்ப்ரைஸ் த்ரிஷா
கமல் என்னைத் திருத்தினார்! சர்ப்ரைஸ் த்ரிஷா
எஸ்.கலீல்ராஜா
கமல் என்னைத் திருத்தினார்! சர்ப்ரைஸ் த்ரிஷா

மும்மொழி தேசங்களுக்குப் பறந்து பறந்து நடித்தாலும், செம்மொழி தேச அழகி

ஃப்ரெஷ்ஷாகவே இருக்கிறார். 'மன்மதன் அம்பு' உற்சாகம் த்ரிஷாவுக்கு இன்னும் அழகு சேர்த்து இருக்கிறது!

"கமல் சாருடன் நடிக்கணும்கிறது எனக்குப் பல வருஷக் கனவு. 'தசாவதாரம்' படத்தில் கமல் சார் நடிக்கக் கூப்பிட்டு இருந்தார். அப்போ என் கையில் டேட்ஸ் இல்லை. அடுத்து 'மர்மயோகி' வாய்ப்பு. எக்கச்சக்க ஹோம் வொர்க் பண்ணிக் காத்திருந்தேன். ப்ச்... என்ன காரணமோ, அந்தப் பட வேலைகள் நின்னுருச்சு. 'இதுக்கு மேல் அவரோட நடிக்க வாய்ப்பு வராது'ன்னு நினைச்ச நேரத்தில், சர்ப்ரைஸா 'மன்மதன் அம்பு' பாய்ந்தது. ஒரு விஷயத்தை இத்தனை விதங்களில் அணுக முடியுமாங்கிற பிரமிப்பை கமல் சார் தந்துட்டே இருக்கார். என் தமிழ் உச்சரிப்பு அவ்வளவு பெர்ஃபெக்ட்டா இருக்காது. என் உச்சரிப்பைத் திருத்தி னார். இப்போ நான் அட்சர சுத்தமா தமிழ் பேச ஆரம்பிச்சுட்டேன். கமல் சாருக்கு என் நன்றிகள்!"

கமல் என்னைத் திருத்தினார்! சர்ப்ரைஸ் த்ரிஷா

"இந்தியில் நீங்க நடிச்ச 'கட்டா மிட்டா' சரியாப் போகலையாமே?"

"ஆரம்பத்தில் எனக்கு சினிமா ஆசையே இல்லை. அப்போ, 'ஒரே ஒரு படத்தில் நடி. பிடிக்கலைன்னா... கன்டினியூ பண்ணாதே!'னு பிரியதர்ஷன் சார்தான் சினிமாவுக்கு என்னைக் கூட்டிட்டு வந்தார். 'லேசா லேசா' முடிஞ்சதும் அவரே நிறையப் படங்கள் நடிக்கக் கூப்பிட்டார். மத்த படங்களில் பிஸியா இருந்ததால், அவரோட சேர்ந்து வொர்க் பண்ண முடியலை. 'கட்டா மிட்டா' கால்ஷீட் ஒரு வருஷத்துக்கு முன்னாடியே வாங்கிவெச்சுட்டார். அவருக்காகத்தான் அந்தப் படம் பண்ணினேன். ஒரு படத்தில் நடிப்பது மட்டுமே என் வேலை. அதன் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கிற பொறுப்பு எனக்குக் கிடையாது. நான் எல்லா விஷயங்களிலும் பாஸிட்டிவ் சங்கதி களை மட்டும் பார்க்கிற கேரக்டர். 'கட்டா மிட்டா' மூலம் மும்பையில் எனக்கு நிறைய ஃப்ரெண்ட்ஸ் கிடைச் சாங்க. இந்த விஷயத்தை நான் இப்படித் தான் பார்ப்பேன்!"

"நீங்களும் ஸ்ரேயாவும் நல்ல ஃப்ரெண்ட்ஸாமே?"

"ரொம்பவே க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ். 'எனக்கு 20 உனக்கு 18' பட போட்டோ செஷனில்தான் ஸ்ரேயா அறிமுகம். ஈகோ இல்லாமப் பழகினாங்க. ஏழு வருஷமா ஃப்ரெண்ட்ஸா இருக்கோம். ஸ்ரேயா எப்போ சென்னைக்கு வந்தாலும், நேரா என் வீட்டுக்கு வந்துடுவாங்க. நான் மும்பை போனா, அவங்க வீட்டில் சாப்பிடாமத் திரும்ப மாட்டேன். ஒரு தடவை ஸ்ரேயா வித்தியாசமான கற்கள் பதிச்ச செருப்பு போட்டு இருந்தாங்க. 'ரொம்ப நல்லா இருக்கு'ன்னு பாராட்டினேன். ஒரே வாரத்தில் அதே மாதிரி ஒரு ஜோடி செருப்பு வாங்கி பார்சல் அனுப்பிவெச்சிருந்தாங்க. அப்பப்போ சர்ப்ரைஸ் கிஃப்ட் அனுப்பிட்டே இருப்பாங்க. ஐ லவ் ஸ்ரேயா!"

கமல் என்னைத் திருத்தினார்! சர்ப்ரைஸ் த்ரிஷா

"உங்க ஃபிட்னெஸ் ரகசியம் என்ன?"

"என் உயரம் 5.7 அடி, எடை 58 கிலோ. என் உயரத்துக்கேத்த எடையில், ஒரு கிலோ வரை அதிகரிக்கலாம். அதுக்கு மேலே ஒரு கிராம் கூடினாலும், உடனே ஜிம்முக்குக் கிளம்பிருவேன். கொஞ்சம் அதிகமா வெயிட் போட்டுட்டாலும் என் உடம்பின் வடிவமே மாறிடும். அதனால், அதில் எப்பவும் நான் உஷார். யோகா கத்துட்டு இருக்கேன். யோகாவினால், என் கோபம் எல்லாம் குறைஞ்சு ரொம்ப சாந்தமாகிட்டேன். இப்போ உடம்பும் மனசும் அவ்ளோ ஃப்ரீ!"

"உங்களுக்கு கனவு கேரக்டர் எதுவும் இருக்கா?"

"நான் உங்ககிட்ட பேசும்போது ரொம்ப மரியாதையாப் பேசுவேன். நல்ல பிள்ளையா நடந்துப்பேன். ஆனா, எனக்குள் மோசமான இன்னொரு த்ரிஷா இருக்கலாம். துரோகம், வன்மம், குரோதம், சுயநலம், வெறுப்புன்னு ஒவ்வொரு மனுஷனுக்கும் இன்னொரு முகம் இருக்கே. அது மத்தவங்களுக்குத் தெரியவரும்போது அதிர்ச்சியா இருக்கும். அப்படி ஒரு கேரக்டரில் நடிக்கணும். ஸ்க்ரீனில் அழகான த்ரிஷா தெரியவே கூடாது. 'இவளா இப்படி?'ன்னு பார்க்கிறவங்க எல்லாம் மிரளணும். ஆனா, இதுவரை அப்படி ஒரு வாய்ப்பு வரவே இல்லை!"

"எப்போ கல்யாணம்?"

கமல் என்னைத் திருத்தினார்! சர்ப்ரைஸ் த்ரிஷா

"கல்யாணம்னா என்னது? தமிழ் சினிமாவில் 'டாப் மோஸ்ட் நடிகை'ன்னு பேர் வாங்கணும். 'எப்படா நல்ல படம் பண்ணுவோம்?'னு காத்துட்டு இருந்தப்போ, 'அபியும் நானும்' வாய்ப்பு. அப்புறம்தான் என் மேல சின்ன நம்பிக்கைவெச்சு 'விண்ணைத் தாண்டி வருவாயா' கிடைச்சது. இப்போ 'மன்மதன் அம்பு'!

என் எட்டு வருஷ கேரியரில் இப்போதான் நடிக்க வாய்ப்பு உள்ள படங்கள் பண்ண ஆரம்பிச்சிருக்கேன். ஃபீல்டில் எனக்குன்னு நல்ல அங்கீகாரம் கிடைச்சுஇருக்கு. அதுக்குள்ள இந்தக் குட்டிப் பாப்பாவுக்கு ஏன் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ஆசைப்படுறீங்க!" - உதடு குவித்து, கண்கள் மினுமினுக்கும்போது... த்ரிஷா குட்டிக் குட்டிப் பாப்பாதான்!

கமல் என்னைத் திருத்தினார்! சர்ப்ரைஸ் த்ரிஷா
கமல் என்னைத் திருத்தினார்! சர்ப்ரைஸ் த்ரிஷா