எகனாமிக்ஸ் படிக்க ஆசை. வீட்ல காமர்ஸ் சேர்த்துவிட்டாங்க. படிக்கப் பிடிக்கலை. சினிமா பத்தி எதுவுமே தெரியாது. ஆனா, சினிமா ஆசை மட்டும் உண்டு. கிளம்பி பி.சி.ஸ்ரீராம் சார்கிட்ட வந்து நின்னேன். 'ஒளிப்பதிவு பத்தி ஒண்ணும் தெரியாது. இதுவரை ஒரு ஸ்டில் போட்டோகூட எடுத்தது இல்லை. உங்ககிட்டே அசிஸ்டென்ட்டா வொர்க் பண்ணணும் சார்'னு கேட் டேன். என்ன மூடுல இருந்தாரோ, என்னைச் சேர்த்துக்கிட்டார். அது ஏன்னு இப்ப வரை தெரியலை. 'எதுவுமே தெரியாதவனை ஈஸியா மோல்டு பண்ணிடலாம்'னு அவர் நினைச்சிருக்கலாம். நானும் ஒரு ஒளிப்பதிவாளர் ஆகிட்டேன்!"
"ஒரு படத்தை ஒப்புக்கொள்ள ஏதாவது அளவுகோல் வெச்சிருக்கீங்களா?"
"சினிமா ஒரு கூட்டு முயற்சி. காலையில் 10 மணிக்குப் போய் சாயங்காலம் 6 மணிக்குத் திரும்புகிற ரெகுலர் வேலை கிடையாது. மனசும் உடம்பும் லயிச்சு இயங்கணும். பணத்துக்காக வேலை செஞ்சா சோர்வுதான் மிஞ்சும். படத்தின் இயக்குநர் நமக்கு செட் ஆகணும். கதை சுமாரா இருந்தாலும், திரைக்கதை கச்சிதமா செட் ஆகணும். இந்த ரெண்டு விஷயம் பக்காவா இருந்தா, வேற யோசனை இல்லாம படத்தில் கமிட் ஆகிடுவேன். இந்த வேவ்லெங்த்தான் என்னையும் இயக் குநர் விஜய்யையும் 'மதராசபட்டினம்' பண்ணவெச்சது. படம் இவ்வளவு பிரமாண்ட பாராட்டுக்கள் குவிக்கும்னு நாங்களே எதிர்பார்க்கலை. அந்தப் படத்துக்காக 25 தடவைக்கு மேல் மும்பைக்குப் பயணம் செஞ்சோம். விளையாட்டுபோல ஆரம்பிச்சது பெரிய விருட்சமா தழைச்சு நிக்குது. இந்த திருப்திதான் அடுத்த பயணங் களுக்கான எரிபொருள்!"
|