ஸ்பெஷல் -1
Published:Updated:

இது த்ரில் அகராதி!

இது த்ரில் அகராதி!

இது த்ரில் அகராதி!
இது த்ரில் அகராதி!
இது த்ரில் அகராதி!
ரீ.சிவக்குமார்
இது த்ரில் அகராதி!

"தமிழ் சினிமாவில் எப்போதுமே த்ரில்லர் படங்களுக்குத் தனி இடம் உண்டு. த்ரில்லர்

கதைகள்னா, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பளிச்னு ஞாபகத்துக்கு வர்ற பேரு ராஜேஷ்குமார். அவரோட 'இரவு நேர வானவில்' நாவலைத் தழுவி 'அகராதி' படம் இயக்கியிருக்கோம். திகில், த்ரில் ரசிகர்கள் அனைவரையும் இந்தப் படம் நிச்சயம் ஈர்க்கும்!"- உற்சாகமாகப் பேசத் துவங்குகிறார் 'அகராதி' இயக்குநர் நாகா வெங்கடேஷ்.

"ராஜேஷ்குமார் கதைகள் இதுவரை டி.வி. சீரியல்களாகத்தான் வந்திருக்கு. சினிமாவுக்கான எலிமென்ட் அதில் இருந்ததா?"

"ஏராளமா... தாரளமா! தொழில்நுட்பம் வளர வளர... கொலைநுட்பமும் கூடவே வளருது. அண்ணன்-தங்கை உறவுக்குள் பணமே ஒரு குற்றத்துக்குக் காரணமாகும் கதை. டெல்லியில் இருந்து தன் அண்ணன் வீட்டுக்கு வருகிறாள் ஒரு பெண். அண்ணன் வீட்டில் யாரோ முகம் தெரியாத ஆளின் பிணம் இருக்கு. போலீஸ் விசாரணைகளின் போதே கிணற்றுக்குள் அண்ணன், அண்ணி பிணங் களும் தட்டுப்படுது. தொடர்ந்து நடக்கிற கொலை களுக்கு யார் காரணம் என்பது படத்தின் பதை பதைக்கவைக்கும் பயணம்.

இது த்ரில் அகராதி!

"துளி விரசம்கூடக் கலக்காதவை ராஜேஷ்குமார் எழுத்துக்கள். ஆனா, படத்தில் மோனிகா, ஓவியா, கீர்த்தி சாவ்லா, ரகசியா, புவனேஸ்வரின்னு அழகிகள் அணிவகுக்குறாங்களே?"

"எல்லாரும் அவரவர்களின் கேரக்டருக்கு ஏற்ற நியாயங்களோட படத்தில் வருவாங்க. மோனிகா பல காட்சிகளில் டூப் போடாம ரிஸ்க் எடுத்து நடிச்சிருக்காங்க. மோனிகாவின் தோழியா நடிக்க ஓவியாவை ஃபிக்ஸ் பண்ணோம். ஆனா, எங்க படத்துக்கு முன்னாடியே 'களவாணி' ரிலீஸ் ஆகி 'களவாணி' ஓவியான்னு பிரபலம் ஆயிட்டாங்க. சந்தோஷம். ஷூட்டிங் போறதுக்கு முன்னாடி முழு ஸ்க்ரிப்ட்டையும் ராஜேஷ்குமார்கிட்ட காண்பித்தோம். அவருக்கு முழு திருப்தி. படத்தைப் பார்த்த பிறகும் அவரிடம் அதே திருப்தி. ரொம்பவே சந்தோஷம்!"

இது த்ரில் அகராதி!
இது த்ரில் அகராதி!