ஸ்பெஷல் -1
Published:Updated:

மறுபடியும் மகேஷ்!

மறுபடியும் மகேஷ்!

மறுபடியும் மகேஷ்!
மறுபடியும் மகேஷ்!
மறுபடியும் மகேஷ்!
கி.கார்த்திகேயன்
மறுபடியும் மகேஷ்!

'அழகிய தமிழ் மகன்' தொடங்கி 'சுறா' வரை அடுத்தடுத்து ஃப்ளாப்கள். சட்டென்று

முடிவெடுத்து, ஒரு வருடம் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருக்கிறார் விஜய். அந்த இடைவெளிக்குப் பிறகு இயக்குநர், ஹீரோயின் தொடங்கி, ஸ்டன்ட் மாஸ்டர் வரை படா படா ஆட்களைப் பிடித்துப் போட்டு, ஒரு பிரமாண்ட பட்ஜெட் படத்தில் நடிக்கிறார். முழுதாக மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு, அந்தப் படம் வெளிவருகிறது. எப்படி இருக்கும் எதிர்பார்ப்பு?

அப்படியான ஓர் எதிர்பார்ப்புடன் ஆந்திராவில் வெளிவந்து இருக்கும் தெலுங்குப் படம் 'மகேஷ் கலீஜா'. 'பிரின்ஸ்' மகேஷ் பாபு ஹீரோ. 'கில்லி', 'போக்கிரி' என்று விஜய்யின் மாஸ்டர் ஹிட் படங்களின் ஒரிஜினலில் நடித்தவர். அதனால்தான் முதல் பத்தியில் ஒரு ஒப்பீட்டுக்கு 'இளைய தளபதி'யைத் துணைக்கு அழைத்தது! 'ஒக்கடு' (கில்லி), 'அத்தடு', 'போக்கிரி' என்று அடுத்தடுத்து மெகா ஹிட்கள் கொடுத்தவரை 'வசூல் சக்ரவர்த்தி' என்று தயாரிப்பாளர்களும் 'பிரின்ஸ்' என்று ரசிகர்களும் கொண்டாடிக்கொண்டு இருந்தார்கள். ஆனால், 'போக்கிரி'க்குப் பிறகு, இரண்டு படங்கள் அடுத்தடுத்து மரண அடி வாங்க, ஒரு வருடம் சினிமாவுக்கே லீவு விட்டுவிட்டார் மகேஷ். பிறகு, 'கலீஜா' என்ற படத்தில் நடிக்கத் தொடங்கி, இரண்டு வருடங்களுக்குப் பிறகு, படம் கடந்த வாரம் வெளியானது. 'எக்ஸ்ட்ரா கிளாமர்' அனுஷ்கா, ஹிட் மசாலா ஃபார்முலா இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ், பிரகாஷ்ராஜ், காமெடியன் பிரம்மானந்தம், மெகா பட்ஜெட் என்று சரமாரி பில்ட்-அப் எதிர்பார்ப்பு! ரிசல்ட்?

மறுபடியும் மகேஷ்!

'மகேஷ் பாபு பிச்சுட்டார்... சான்ஸே இல்லை!' என்று மகிழ்கிறார்கள் ரசிகர்கள். 'ஆவரேஜுக்கும் கீழேதான் படம். ஆனால், சில வருடங்கள் கழித்து மகேஷ் நடித்த படம் என்பதால், பிரமாதமான ஓப்பனிங். இதுவே இயல்பான சூழலில் வெளியாகி இருந்தால், நிச்சயம் படம் ஃப்ளாப்!' என்கிறார்கள் விமர்சகர்கள்.

கால் டாக்ஸி டிரைவர் மகேஷ், அனுஷ்கா வுடன் ஒரு பாலைவன கிராமத்துக்குச் செல்கிறார். அங்கு உள்ள மக்கள் அவரை 'தங்கள் துன்பங்களில் இருந்து மீட்க வந்த கடவுள்' என்று கொண்டாடுகிறார்கள். அதற்கேற்ப அவருக்குள்ளும் சில சக்திகளை உணர்கிறார். கிராமத்தினருக்கு என்ன பிரச்னை, அதை மகேஷ் எவ்வாறு தீர்த்தார் என்பதுதான் படம்.

மகேஷ் முன்னைக் காட்டிலும் அழகாக, ஸ்டைலாக நடித்திருக்கிறார். டைட்டில் கார்டு தவிர, படத்தில் அவர் இல்லாத ஃப்ரேமே இல்லை. மற்றபடி, வேறு யாருக்கும் எந்த ஸ்கோப்பும் இல்லை. 'ஆயிரத்தில் ஒருவன்', 'மஹதீரா', 'போக்கிரி' என்று பல படங்களின் சாயல் கொண்ட மிகவும் பலவீனமான, நீளமான திரைக் கதை. 'கலீஜா' என்றால், தைரியம் என்று அர்த்தமாம். மகேஷின் இந்தப் பட ரீ-மேக்கில் நடிக்கும் தைரியம் நம்ம 'இளைய தளபதி'க்கு இருக்குமா?

மறுபடியும் மகேஷ்!
மறுபடியும் மகேஷ்!