"உங்களுக்குப் பிறகு, மூன்றாவது தலைமுறை ஹீரோக்களும் உருவாகிவிட்டார்கள். ஆனாலும், இன்னும் அசராமல் அசத்திக்கொண்டு இருக்கிறீர்களே?"
"அதென்ன இன்னும்? எனக்கு அப்படியென்ன வயசாகிடுச்சு? (மூக்குக் கண்ணாடியைக் கழற்றிச் சிரிக்கிறார்). அமிதாப் என்ற தனி மனிதனுக்குக் கொஞ்சம் வயதாகி இருக்கலாம். ஆனால், எனது கேரக்டர்கள் என்னை என்றும் இளமையாகவே வைத்திருக்கின்றன!"
"ஒரு குடும்பத்தின் அத்தனை உறுப்பினர்களும் 'மீடியா டார்லிங்ஸ்' ஆக இருப்பது உங்களுடையதுதான்... சமயங்களில் கஷ்டமாகவும் இருக்குமா?"
"அப்படியா சொல்றீங்க? எங்களுக்கு அப்படி ஒண்ணும் தெரியலை. ரொம்ப கூலா நகர்ந்துட்டு இருக்கோம். எங்களுக்காக உழைக்கிறோம்... எங்களுக்காக வாழ்கிறோம். வீ லவ் ஈச் அதர்!ஷூட்டிங் அது இதுன்னு ரொம்பத் தள்ளி வந்துட்டாலும், மனசு எப்பவும் எங்க வீட்டு டிராயிங் ரூமுக்குள்தான் உல விட்டு இருக்கும்... ரொம்ப சந்தோஷமா!"
" 'ராவண்' விமர்சனங்களை ஐஸ்வர்யா எப்படி எடுத்துக்கிட்டாங்க?"
"அதுபத்தி நான் அவங்ககிட்ட கேட்கவே மாட்டேன். சினிமா வாழ்க்கையில் ஐஸ்வர்யா எத்தனையோ உயரங்களையும் துயரங்களையும் பார்த்திருக்காங்க. ஆனாலும், ஐஸ்வர்யா இப்பவும் எங்களுக்கு உலக அழகிப் பட்டம் ஜெயிச்சுட்டு ஆச்சர்ய சந்தோஷம் காட்டும் ஒரு குட்டிப் பொண்ணுதான். நானும் ஜெயாவும், அபிஷேக்கையும் ஐஸ்வர்யாவையும் சின்னக் குழந்தைகளாகத்தான் பார்க்கிறோம். எங்கே இருந்தாலும் எப்பவும் என் குழந்தைங்ககிட்டே பேசிடுவேன். வீ ஆர் ஆல்வேஸ் இன் டச்!"
"மறுபடியும் பால்கி, இளையராஜாவுடன் இணையுறீங்களாமே?"
"என் கேரியர்ல என்னை ஆச்சர்யப்படவெச்ச டைரக்டர்களில் பால்கி முக்கியமானவர். அப்புறம், இளையராஜாவைப்பத்திக் கேட்கவே வேணாம். மறுபடியும் அந்த சந்தோஷமான தருணங்கள் அமைஞ்சா, நான் ரொம்ப அதிர்ஷ்டக்காரன்!"
"அம்பானி சகோதரர்கள், அமர் சிங் உடன் இப்போலாம் உங்களைப் பார்க்க முடிவது இல்லையே?"
"நோ பாலிடிக்ஸ். என் சினிமா ஷெட்யூல் பிஸியாப் போயிட்டு இருக்கு!"
"மணிரத்னத்தின் விஷயத்தில் நீங்க..."
(வேகமாக இடைமறித்து) "ஓ.கே... டேக் கேர்!" எனச் செல்லமாகத் தோள் தட்டி நகர்கிறார் அமிதாப்!
( வட போச்சே!)
|