என் விகடன் - புதுச்சேரி
ஸ்பெஷல் -1
Published:Updated:

ரகசிய ரவுண்ட்ஸ்.. டின்னர் விவாதம்!

ரஜினியின் அரசியல் கியர்இரா.வினோத்

##~##
2011
தேர்தலும் வந்தாச்சு. 'ரஜினி வாய்ஸ் கொடுப்பாரா..?’ என்று ஒரு கட்டுரை இல்லாமல் தேர்தல் சீஸனை எப்படித் துவக்குவது?

'உங்கள் நெருங்கிய நண்பர் யார்?’ என்று ரஜினியிடம் கேட்டால், 'ராஜ்பகதூர்!’ என்பார். யெஸ், 'ரானா’ பட வேலைகளில் மூழ்குவதற்கு முன், தனது பால்ய கால நண்பர்களுடன் பெங்களூரில் ஒரு ஜாலி ட்ரிப் அடித்தார் ரஜினி. கையேந்தி பவன் சாப்பாடு, பிளாட்ஃபார அரட்டை, மாறு வேஷ நகர்வலம் என்று ட்ரிப் முழுக்கவே செம லூட்டி. சுற்றுலா முழுக்க ரஜினியுடன் இருந்த ராஜ்பகதூரைப் பிடித்தோம்.

ரகசிய ரவுண்ட்ஸ்.. டின்னர் விவாதம்!

''நாங்க எங்களுக்குள்ளே ரொம்ப உரிமையா பேசிக்குவோம். ஆனா, பேட்டியில் நான் ரஜினியை மரியாதை இல்லாம பேசக் கூடாது. 'அவர் இவர்’ன்னே பேசுறேன். அதுக்கே அவன் கோச்சுக்குவான்!'' என்று சிரிக்கிறார்.

''பிப்ரவரி மாசம் ஆரம்பத்துல திடீர்னு வந்து நின்னு, 'உடனே கௌம்பு... நாம டூர் போறோம்’னு சொல்லிக் கிளப்பிக் கூட்டிட்டுப் போயிட்டார். சின்ன வயசுல நாங்க ரவுண்ட் அடிச்ச ஹனுமந்த நகர், ஜெய் நகர், குட்டள்ளி பகுதிகளில் ஒருநாள் முழுக்கச் சுத்தினோம். பழைய வேட்டி, காட்டன் சட்டை, தலையில ஒரு துண்டு. 'நான்தான் ரஜினி’ன்னு அவரே சொன்னாலும் நம்ப முடியாத அளவுக்கு இருப்பார். அங்கே இருக்கிற சுப்பிரமணி கோயில், ரவி கங்காதர், ராகவேந்திரர் கோயில் பூசாரிகளுக்கு ரஜினியை சின்ன வயசுல இருந்தே நல்லா தெரியும். ஆனா, அவங்களாலயும் அவரை அடையாளம் கண்டுபிடிக்க முடியலை. தினமும் ரெண்டு வேளை தியானம். மத்தியானம் குட்டித் தூக்கம். சாயங்காலம் ரோட்டோரக் கடையில் வடை, போண்டா, பஜ்ஜி வாங்கிட்டு பிளாட்ஃபாரத்திலேயே உட்கார்ந்து நண்பர்களோட அரட்டை. 'அப்போலாம் ஏரியாவுல எப்படி இருந்தோம்... இல்லம்மா?’ன்னு பழைய கதையையே திரும்பத் திரும்ப ஆச்சர்யமாப் பேசிட்டே இருப்பார். அவர் பெங்களூரு வந்ததுமே... கைமா, போட்டி, தலைக்கறி வறுவல்னு ரெடி பண்ணிடு வோம். நான்-வெஜ் இல்லாம லஞ்ச், டின்னர் சாப்பிட மாட்டார். ராத்திரி டின்னர் முடிச்சதும், தமிழ்நாட்ல இருக்குற முக்கியமான நண்பர்களுக்கு போன்ல பேச ஆரம்பிச்சிடுவார். சத்தம் போட்டுச் சிரிச்சு பல விஷயங்கள் பேசிட்டு, அப்படியே வெறும் தரையில் படுத்துத் தூங்கிடுவார்.

ரகசிய ரவுண்ட்ஸ்.. டின்னர் விவாதம்!

இந்த தடவை தர்ம ஸ்தலா, மந்த்ராலயம் போனோம்.  ரோட்டோரம் வண்டியை நிறுத்தி கட்டுச்சாதம் சாப்புடுறது, அப்படியே மரத்தடியில் படுத்துத் தூங்குறதுன்னு ஒரு காமன் மேன் வாழ்க்கை வாழ்ந்துட்டுப் போனார். முன்னலாம் ஒரு நாளைக்கு நாப்பது '555’ சிகரெட் பிடிப்பார். ஆனா, இப்போ ஒரு பாக்கெட்கூடப் பிடிக்கிறது இல்லை. அதுவும் இமயமலைக்குப் போகும்போது நான்-வெஜ், சிகரெட்னு எல்லாப் பழக்கத்துக்கும் லீவு!''

''இந்தத் தேர்தலில் ரஜினி வாய்ஸ் கொடுப்பாரா..? எதிர்காலத்திலாவது அரசியலில் ஈடுபடுவாரா?''  

''மனசுக்குத் தோணிய விஷயத்தை மறு நிமிஷமே பட்டுனு உடைச்சு சொல்லிருவார். ஆனா, அரசியல் என்ட்ரி அப்படி இல்லையே. ரொம்பத் தீவிரமான சிந்தனையில் இருக்கார்னு எனக்குத் தோணுது. ஒருநாள்... விட்டல், சுதாகர், நட்ராஜ், முரளின்னு எல்லாரையும் கூப்பிட்டு தனி அறையில் உக்காரவெச்சார். 'எல்லாரும் மனசைத் திறந்து சொல்லுங்க. என்கூட நீங்க எவ்வளவு வருஷமா இருக்கீங்க. என்னை நல்லாப் புரிஞ்சு வெச்சிருப்பீங்க! இப்போ சொல்லுங்க... நான் அரசியலுக்கு

ரகசிய ரவுண்ட்ஸ்.. டின்னர் விவாதம்!

வருவேனா... மாட்டேனா?’ன்னு கேட்டார். 'நீ கண்டிப்பா அரசியலுக்கு வருவே’னு ரெண்டு மூணு பேர் அடிச்சு சொன்னதைக் கேட்டு சிரிச்சார். 'நீ கண்டிப்பா வர மாட்டே!’ன்னு சிலர் சொன்னதுக்கும் அதே சிரிப்பு. நான் 'நீ காவி டிரெஸ் போட்டுக்கிட்டு இமயமலைக்குப் போயிடுவே!’ன்னு சொன்னேன். அதுக்கு எல்லாத்தையும்விட பெரிய சிரிப்பு. கடைசியா நாங்கள்லாம் ஒரே பிடியாப் பிடிச்சு, 'நீ என்ன தான் சொல்றே?’னு கேட்டோம். சிரிச்சுட்டே மழுப்பி, 'எனக்கு எதுவும் தெரியாது. எல்லாம் கடவுள் கையில!’ன்னு சொன்னார். நான் உடனே, 'டேய் மகனே... இந்த உடான்ஸ்லாம் எங்ககிட்ட வேணாம். வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டுனு பதில் சொல்லுடா!’னு சட்டையைப் பிடிச்சேன்.  கடைசி வரை கையை மேல மேலே காட்டிக்கிட்டே இருந்தாரே தவிர, ஒரு வார்த்தை பேசலையே... என் மகன் சரியான கல்லுளிமங்கன்!''