விஜயகாந்த்தின் ஆசைகே.கே.மகேஷ், படம் : கார்த்திக்
##~## |
இதன் உரிமையாளர் ஆசைத்தம்பி. ''1976-ல் இந்த ஸ்டுடியோவை ஆரம் பிச்சேன். அப்போ, விஜயகாந்த் பேரு... விஜயராஜ். சொந்தமா ரைஸ்மில் வெச்சிருந்த அழகர்சாமி நாயுடுவின் மகன். மில் வேலையை முடிச்சுட்டு, நண்பர்களோடு அவர் டாப் அடிக்கிற இடம் சேனாஸ் ஃபிலிம்ஸ் ஆபீஸ்.

ரஜினி அப்போ அவ்ளோ ஃபேமஸ் கிடையாது. அதனால அவர் நடிச்ச படங்களை வாங்க யாரும் ரெடியா இல்லை. அப்போ ஹாஜியார்தான் ரிஸ்க் எடுத்து ரஜினி படங்களை ரிலீஸ்செய்தார். படங்கள் தொடர்ந்து ஹிட் ஆனதால், ஹாஜிக்கு நல்ல லாபம் கிடைச்சது. ரஜினியை ஹீரோவா போட்டுப் படம் தயாரிக்கணும்னு ஹாஜி ஆசைப்பட்டார். ஆனா, ரஜினியால் கால்ஷீட் கொடுக்க முடியலை.
அதனால், சினிமா ஆசையோடு தன் பக்கத்துலயே இருந்த விஜயராஜுக்கு, விஜயகாந்த்னு பெயர் வெச்சார். அவரை வளர்த்துவிட முடிவு செஞ்சார். தனக்குத் தெரிந்த தயாரிப்பாளர், இயக்குநர்களிடம்

எல்லாம் விஜயராஜை அறிமுகப்படுத்திவைத்தார். 'சினிமாவில் நுழையணும்னா, முதல்ல போட்டோ ஆல்பம் ஒண்ணு ரெடி பண்ணு’னு சொல்லி, விஜயகாந்த்தை சில ஸ்டுடியோக்களுக்கு அனுப்பிவெச்சார். அங்கே எடுத்த போட்டோக்களில் திருப்தி இல்லாம, என் ஸ்டுடியோவுக்கு வந்தார் விஜயகாந்த். நான் எடுத்துக் கொடுத்த போட்டோ, அவருக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது. 'அண்ணே, என்னை ரஜினிகாந்த் மாதிரி எடுங்கண்ணே’ன்னு கேட்டு, ரஜினி மாதிரி இமிடேட் பண்ணி போஸ் கொடுத்தார்.
தினம் ராத்திரி உட்கார்ந்து ஸ்டில்ஸ் எடுப்போம். அதுல இருந்து 36 ஸ்டில்ஸை செலெக்ட் பண்ணி, பிரின்ட் போட்டுக் கொடுத்தேன். சென்னை லாட்ஜில் தங்கியிருந்தபடி, ஒவ்வொரு சினிமா கம்பெனிக்கும் போட்டோக்களைக் கொடுத்துட்டு இருந்தார் விஜயகாந்த்.
போட்டோ தீர்ந்துடுச்சுன்னா, உடனே லெட்டர் போடுவார். பத்துப் பதினஞ்சு செட் பிரின்ட் போட்டு பாண்டியன் எக்ஸ்பிரஸில் கொடுத்து அனுப்புவேன். அந்த போட்டோக்களைப் பார்த்து, கடையநல்லூர் எம்.ஏ.காஜா, 'இனிக்கும் இளமை’ படத்தில் நடிக்கிறதுக்கு சான்ஸ் கொடுத்தார். புதுமுகம்கிறதால, அந்தப் படத்தை மதுரையில் ரிலீஸ் பண்ண யாரும் ரெடியா இல்லை. விஜயகாந்த்தோட அப்பா அழகர்சாமி நாயுடுதான், அப்போ சென்ட்ரல் தியேட்டர் ஏரியாவுக்கு கவுன்சிலர். தன்னோட செல்வாக்கைப் பயன்படுத்தி, தியேட்டரில் படத்தை ரிலீஸ்

பண்ணினார். இருந்தாலும், 'மூணு நாள்தான் தியேட்டர் கொடுப்போம். படம் ஓடலைன்னா தூக்கிடுவோம்’னு தியேட்டர்காரங்க கறாரா சொல்லிட்டாங்க. அதனால், அழகர்சாமியே கைக்காசு செலவு பண்ணி, நிறைய பேருக்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்தாரு. அந்த டிக்கெட்ல நானும் போய்ப் படம் பார்த்தேன்.
ஆரம்பத்தில் ரஜினிகாந்த்தை இமிடேட் பண்ணினாலும், பின்னர் தனக்குன்னு ஒரு ஸ்டைலை உருவாக்கி வெற்றி பெற்றார் விஜயகாந்த். ஸ்டார் ஆன பின்னாடி மதுரைக்கு வந்த விஜயகாந்த், அப்போ பிரபல சினிமா பத்திரிகையான 'பொம்மை’யில், என்னைப்பற்றியும் என் ஸ்டுடியோ பற்றியும் பாராட்டிச் சொல்லியிருந்தார். அது இன்னிக்கு வரைக்கும் எனக்குச் சந்தோஷமான அனுபவம்'' என்றார் நெகிழ்ச்சியுடன்!