பா...' (தமிழில் அப்பா) படம்தான் பாலிவுட்டின் லேட்டஸ்ட் ஃபீவர். படத்தைப் பார்க்க பாலிவுட்டே நகம் கடித்தபடி காத்திருக்கிறது. பல படங்களில் அப்பா, மகனாகத் தலைகாட்டிய அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் இருவரும் இந்தப் படத்திலும் அப்பா - மகனாக நடித்திருக்கிறார்கள். ஒரு சின்ன வித்தியாசம் - இதில் அமிதாப்... மகன். அபிஷேக்... அப்பா!
லண்டனில் வித்யாபாலனைச் சந்திக்கிறார் அபிஷேக். இருவரும் காதல்கொண்டு ஊர் சுற்றித் திரிகிறார்கள். ஒரு சந்தர்ப்பத்தில் வித்யாபாலன் அபிஷேக்கிடம் தன்னை இழந்துவிட, கர்ப்பமாகிறார். அரசியல் கனவுகளோடு சுற்றித் திரியும் அபிஷேக் பச்சனுக்குக் குடும்பம், குட்டி என்று கமிட்மென்ட் வாழ்க்கையில் விருப்பம் இல்லை. வித்யாபாலனை ஏமாற்றிவிட்டு இந்தியா பறந்து வருகிறார். ஒரு கட்சியில் சேர்ந்து அரசியல்வாதியாக வளர்கிறார்.
லண்டனில் வித்யாபாலனுக்குக் குழந்தை பிறக்கிறது. அந்தக் குழந்தைக்கு ப்ரோஜெரியா (pro-geria) என்னும் விசித்திரமான நோய் தாக்குகிறது. இந்த நோய் தாக்கினால், இளம் வயதிலேயே முகத்தில் சுருக்கங்கள் விழுந்து, உடல் சுருங்கி, எலும்புகள் வலுவிழந்து, வயதானவர்களைப் போலவே வாழ ஆரம்பிப்பார்கள். இந்த ப்ரோஜெரியா நோய் தாக்கிய குழந்தையாக நடிக்கிறார் அமிதாப்.
ஆறு வயதிலேயே 60 வயதுத் தோற்றத்தில் உடல் சுருங்கி வளர்கிறார் அமிதாப். நீண்ட வருடங்கள் கழித்து மனசாட்சி உறுத்த, காதலி வித்யாபாலனைத் தேடி வருகிறார் அபிஷேக். அப்போது அமிதாப்புக்கு வயது 13. ஓடிப்போன அப்பா, தனிமையான அம்மா, வயதான தோற்றத்தில் பையன் இந்த மூன்று பேருக்கும் இடையே நடக்கும் நெகிழ்ச்சியான கதைதான் 'பா'.
படத்தில் அமிதாப்தான் காமெடி போர்ஷனுக்குக் குத்தகை. படத்தில் அமிதாப் |