தெரியுமா? நமீதா இப்போது மலையாளத்திலும் ஹாட் என்ட்ரி கொடுத்திருக்கிறார். படத்தின் பெயர் 'நில்... கவனி... என்னைக் காதலி!'
''ஆக்ஷன், கிளாமர் இரண்டின் காக்டெய்ல்தான் இந்தப் படம். நமீதா படத்துக்கான நான்-வெஜ் விஷயங்களும், மலையாள ரசிகர் களுக்காக யதார்த்த வெஜ்ஜும் சரிவிகிதத்தில் கலந்து இருக்கும். கிளாமர் டால் நமீதாவை நல்ல நடிகையா அறிமுகப்படுத்துறோம். இனிமே நமீக்கு நாங்களும் மச்சான்ஸ்தான்'' என்கிறார்கள் மலை யாள சினிமாவின் இரட்டை இயக்குநர்களான ப்ரமோத் - பப்பன்.
''இந்தப் படத்தை தமிழ், மலை யாளம் இரண்டிலும் பண்றோம். இதில் நமீதாவுக்கு பப் டான்ஸர் கேரக்டர். கலாபவன் மணி, 'அன்பு' பாலா ரெண்டு பேரும் நமீதாவை லவ் பண்ணுவாங்க. கழுவுன மீன்ல நழுவுற மீனா ரெண்டு பேர்ட்ட இருந்தும் நமீ தப்பிச்சுட்டே இருக்குறாங்க. ஒரு கட்டத்துல நமீயோட அப்பா கொலை செய்யப்படுறார். அவரைக் கொன் னது நமீதாவைக் காதலிக்கிற இருவரில் ஒருவர். அது யார்னு நமீதா களத்தில் இறங்கிக் கண்டு பிடிப்பதுதான் கதை'' என்கிறார் ப்ரமோத்.
''அப்போ வழக்கமான நமீதா இதுலே இல்லையா?'' என்றால், ''அதுக்குத்தான் அஞ்சு பாட்டு வெச்சிருக்கோமே. டோன்ட் வொர்ர்ரி... பி ஹேப்பி!'' என்கிறார் பப்பன்!
|