''வயல் பச்சைப்பசேல்னு வெளைஞ்சு நிக்கும்போது வரப்பு மேல நடந்தாலே பயிர் வாசனை நாசியில ஏறும். ராத்திரியெல்லாம் கொட்டுற பனி ஒரு பயிருக்கும் இன்னொரு பயிருக்கும் நடுவில் மணி கோத்த மாதிரி படலமாச் சேர்ந்திருக்கும். அந்தப் பயிர் வாசத்துக்கும் இந்தப் பனி வாசத்துக்கும் மெல்லிசா ஒரு வித்தியாசம் இருக்கு. அப்படி ஓர் அழகான வித்தியாசம்தான் 'களவாணி' '' -ரசனையாகப் பேசுகிறார் அறிமுக இயக் குநர் சற்குணம்.
''யதார்த்த சினிமா லிஸ்ட்டில் இதுவும் ஒண்ணா?''
''ம்ஹ¨ம்... நல்ல படங்களின் லிஸ்ட் டில் வேணும்னா சேர்த்துக்கோங்க. இது யதார்த்த சினிமாவுக்கான காலம். புதுசு புதுசான மனிதர்களின் வாழ்க்கைக் கதை கள் திரையில் வர ஆரம்பிச்சிருக்கு ஆனா, அந்தக் கதைகள் பெரும்பாலும் மதுரையைச் சார்ந்ததாகவே இருக்கு. மதுரையில் மட்டுமே மக்கள் வசிக்க லையே? உளுந்தூர்பேட்டைக்கு ஒரு காதல் இருக்கும். உடுமலைப்பேட்டைக்கு ஒரு கோபம் இருக்கும். பட்டுக்கோட் டைக்கு ஒரு சோகம் இருக்கும். அப்படி ஒரத்தநாடு, மன்னார்குடி பகுதியில் இருக் கிற விவசாயக் கிராமங்களுக்கு இடையில் நடக்கும் காதல் கதை இது!''
''களவாணி எப்படிப்பட்டவன்?''
'' 'களவாணி' ஒரு விறுவிறுப்பான, சுவா ரஸ்யமான யதார்த்த சினிமா. ஒரு ஊரில் இருந்து பக்கத்து ஊருக்குப் படிக்க வர்ற பொண்ணோட மனசைக் களவாடுற கதை. எல்லாருக்கும் பிடிச்ச ஸ்வீட் ராஸ்கல்தான் ஹீரோ. தஞ்சாவூர் பகுதிக் கிராமங்களுக்குன்னு ஒரு மொழி இருக்கு. இதுவரைக்கும் எந்தத் தமிழ் |