அடுத்ததாக உலகத்தில் எதெல்லாம் ஃபேஷனாக மாற வாய்ப்பிருக்கிறது என்று தொலைநோக்கோடு சிந்தித்து அதை டிரெயிலராகக் காட்டுவதுதான் இந்த ஃபேஷன் ஷோ.
இந்த ஃபேஷன் வெப்பமயமாக்கலால் சென்ற வாரம் சூடேறிப்போனது மும்பை.
ஷாரூக், அமீர், சல்மான், ரன்பீர், கரீனா, கரீஷ்மா என பாலிவுட்டின் கான்களும் கபூர்களும் ராம்ப் வாக்கில் ஆஜர் ஆகிக் கலக்கல் காஸ்ட்யூமில் தூள் கிளப்பினார்கள். இந்தியாவின் டாப் மோஸ்ட் ஃபேஷன் டிசைனர்களின் கலெக்ஷன்களை பாலிவுட் நடிகைகள் அணிந்து நடந்து வந்தார்கள். சினிமாவும் மாடலிங்கும் கைகோத்தால் என்ன கிடைக்கும்? படா கிளாமர்!
|