கடவுளைப் போலக் கேள்வி கேட்டாலும் சாத்தானைப் போல்தான் பதில் வருகிறது, இந்த வாரம் நம் ஏடாகூட வலையில் சிக்கிய நண்டு ஜெகனிடம் இருந்து!
''கடவுளுக்கும் சாத்தானுக்கும் என்ன வித்தியாசம்?''
''கூட்டத்துல ஃபிகர் மையமா லுக் விடும்போது 'மச்சான்... அவ உன்னைப் பாக்குறாடா'ன்னு சொன்னா, அவன் கடவுள். 'மச்சான்... அவ என்னையவே பார்க்குறாடா'ன்னு சொன்னா, மவனே அவன்தான் சாத்தான்!''
''பொங்கல் - தீபாவளி என்ன ஒற்றுமை?''
''மதியத்துக்குள்ளே டாஸ்மாக்ல பீர் தீர்ந்திரும். அதான் ஒற்றுமை!''
''கடல் தண்ணியெல்லாம் திடீர்னு பீரா மாறிட்டா என்னவாகும்?''
''கடல் பீரை 'குடிபீரா' மாத்துற திட்டத் துக்கு செம ரெஸ்பான்ஸ் இருக்கும்!''
''உகாண்டா நாட்டு தலைநகர் எது?''
''ஜிப்ளிமோட்ரிளிக்கி... எங்ககிட்டயேவா?!''
''ஜீரோவுல ஒண்ணு போகுமா?''
''வாய்க்குள்ளே பன்னு போகும்போது ஜீரோவுல ஒண்ணு போகாதா? சென்னை வெயில் ரொம்ப ஓவரா இருக்குதே!''
''ஆடி மாசத்துல மட்டும் ஏன் கூழ் காய்ச்சி ஊத்துறாங்க?''
''சாராயம் காய்ச்சி ஊத்துனா போலீஸ் பின்னிப் பெடலெடுத்திடுவாங்க... அதனாலதான். பேட்டி முடிஞ்சுதா தலைவா?''
''சிம்புவுக்கும் நயன்தாராவுக்கும் ஏன் கெமிஸ்ட்ரி வொர்க்-அவுட் ஆகலை?''
''நயன்தாரா ஜாதகத்துல ரெண்டாவது கட்டத்தில் லக்கினபிரபு டான்ஸ் ஆடுறாராம்!''
''மத்தியான வெயில்ல சிக்னல்ல நிக்கும்போது, போன் போட்டு 'பெர்சனல் லோன் வேணுமா?'னு டார்ச்சர் பண்றவங்களை எப்படிச் சமாளிக்கிறது?''
''ரொம்ப சிம்பிள் பாஸ். போன் வந்த உடனேயே, 'உங்களைத்தான் மேடம் தேடிட்டு இருந்தேன். நேத்துதான் எனக்கு வேலை போச்சு. கையில சுத்தமா காசு இல்லாம நடு ரோட்டுல நிக்கும்போது தெய்வமாட்டம் போன் பண்ணீங்க. எங்கே வரணும்னு மட்டும் சொல்லுங்க. உடனே வந்து பணத்தை வாங்கிக்கிறேன்'னு பேசிப் பாருங்க. பேசி முடிக்கிறதுக்குள்ள லைன்கட்டாயிடும்.''
''ஒரு பாட்டுக்கு ஆடும் நடிகைகள் மாதிரி ஒரு பாட்டுக்கு ஆடுற நடிகர்கள் ஏன் இல்லை?''
''நடிகர்கள் டூ-பீஸ் போட்டுக்கிட்டு 'டாடி மம்மி வீட்டில் இல்லை, தடை போட யாருமில்லை'னு ஆடினா எவன் பார்ப்பான்?''
''எல்லோரும் ஏன் லெக்பீஸையே விரும்பிச் சாப்பிடுறாங்க?''
'' 'தொடைக்கறி திங்காதான் வாழ்க்கை - ஆங்கொருவன் வடகறிக்கே வதை படுவான்'னு அப்போதே சொல்லிட்டார் அய்யன் திருவள்ளுவர்.''
''விஜய்க்கும் சூர்யாவுக்கும் இருக்கு. அஜீத்துக்கு இல்லை, அது என்ன?''
''ஏதோ வில்லங்கமா கேட்குறீங்கன்னு நினைக்குறேன். தலைவா, நானே இப்பதான் ஃபீல்டுல ஃபார்ம் ஆகிட்டு வர்றேன். பொழைப்புல மண் அள்ளிப் போட்ராதீங்க.''
''விஜய்க்கும் சூர்யாவுக்கும் அவங்க பேரில் டி.வி. சேனல் இருக்கு. ஆனா, அஜீத் பேரில் சேனல் எதுவும் இல்லை. சரி, நமீதா இதுவரை எத்தனை படங்களில் நடித்திருக்கிறார்?''
''36-28-154. நன்றி... வணக்கம்!''
|