ஸ்பெஷல் -1
சென்டிமென்ட் விகடன்
விகடன் பொக்கிஷம்
சினிமா
Published:Updated:

மணிரத்னம் 25!

மணிரத்னம் 25!

மணிரத்னம் 25!
நா.கதிர்வேலன்
மணிரத்னம் 25!
மணிரத்னம் 25!
மணிரத்னம் 25!
மணிரத்னம் 25!
மணிரத்னம் 25!
மணிரத்னம் 25!

நவீன தமிழ் சினிமாவின் 'நான் கடவுள்'. ஒளியையும் மொழியையும் மாற்றி புதிய கதவைத் திறந்தவர். சில மணித் துளிகள் இங்கே...

உலகின் நூறு சிறந்த படங்களில் ஒன்றாக 'நாயகன்' டைம்ஸ் பத்திரிகையால் தேர்வு செய்யப்பட்டது. மிகப் பெரிய கௌரவத்தைக் கொண்டாட விழா எடுக்க நினைத்தபோது, அதைத் தடுத்தவர் மணிரத்னம்!

தீபாவளிக்கு முதல் நாள் தன் உதவியாளர்கள், ஊழியர்கள், உறவினர்கள் அனைவரையும் ஒரு கல்யாண மண்டபத்தில் கூட்டி சைவ விருந்து அளிப்பார். பாட்டும் ஆட்டமும் அவசியம் உண்டு!

கைக்கடிகாரம் அணிகிற வழக்கம் இல்லை. ஆனால், கடிகாரத்தை பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்து, நேரம் அறிய விரும்பும்போது பார்ப்பார்!

மணிரத்னம் சென்னைக்காரர் என்றே நினைக்கிறார்கள். மாப்ளே, மதுரைக்காரர். ஜூன் 2... பிறந்த தேதி!

தன்னை யார் புகழ்ந்தாலும் இகழ்ந்தாலும் ரியாக் ஷன் காட்டவே மாட்டார். இரண்டையும் புறம்தள்ளிவிடுகிற இயல்புடையவர்!

கதை விவாதத்துக்கு எப்போதும் துணை சேர்க்கவே மாட்டார். எல்லாமே அவரது எண்ணங்களாகத்தான் இருக் கும். சந்தேகம் இருந்தால் மட்டும், ராக்கெட்டோ ஜாக் கெட்டோ சம்பந்தப்பட்டவர்களைத் தொடர்புகொள்வார்!

முழு ஸ்க்ரிப்ட்டையும் பென்சிலில்தான் எழுதுவார். பேனா உபயோகிக்க மாட்டார். தவறாக எழுதியிருந்தால் திருத்தி எழுத வசதியாச்சே. பென்சிலில் இருந்து நேரடியாக ஸ்க்ரிப்ட் கம்ப்யூட்டர்மயமாகி விடும்!

படம் ரிலீஸான தினத்தன்று கொஞ்சம்கூட டென்ஷன் ஆக மாட்டார். தியேட்டர் நிலவரம் விசாரிக்க மாட்டார். நிதானமாக அன்றைக்கு அடுத்த படத்தின் வேலையை ஆரம்பிப்பார்!

நந்தனுக்குப் பரீட்சை என்றால் அன்று அலுவலகத்துக்கு விடுமுறை போடுவார். மகனுக்கு சொல்லிக்கொடுக்கத்தான் இந்த விடுமுறை!

நல்ல படமாகவும் இருக்க வேண்டும், அது வெற்றிகரமான படமாகவும் இருக்க வேண்டும். அந்தவிதத்தில் '16 வயதினிலே' படத்தைத்தான் பிடித்த படம் என அடிக்கடி குறிப்பிடுவார்!

காரில் ஏறி உட்கார்ந்ததும் முதல் வேலையாக ஸீட் பெல்ட் போட்டுக்கொள்வார். எல்லோரையும் அவ்விதம் செய்யத் தூண்டுவார்!

படத்துக்கு பூஜை, கேமராவுக்கு முன்னாடி தேங்காய் உடைத்துத் தீபாராதனை காட்டுவது, பூசணிக்காய் உடைப்பது, ராகுகாலம், எமகண்டம் இப்படி எதையும் பார்க்க மாட்டார். தன் உழைப்பு ஒன்றையே நம்புவார்!

பாலாவின் 'பிதாமகன்', 'நான் கடவுள்' படங்களை டிக்கெட் எடுத்து தியேட்டருக்கே போய் மக்களோடு இருந்து பார்த்திருக்கிறார். பாலாவின் படங்களின் மீது மட்டும் ஸ்பெஷல் மரியாதை!

தன்னிடம் இருந்து எந்த அசிஸ்டென்ட் வெளியே வாய்ப்பு தேடிப் போனாலும், அவர்களுக்கு ஒரு தொகையைக் கொடுத்து, வாய்ப்பு கிடைக்கும் வரை பயன்படுத்திக்கொள்ளச் சொல்வார்!

மனைவியை எப்போதும் 'ஹாசினி' என்றே அழைப்பார். சுஹாசினியும் இவரை சிம்பிளாக 'மணி'!

பெண் குழந்தை ரொம்பவும் பிடிக்கும். அநேகமாக அவரின் பல படங்களில் ஹீரோ ஹீரோயினைப் பார்த்து 'எனக்குப் பெண் குழந்தை பிடிக்கும்' எனச் சொல்லும் ஸீன் இருக்கும்!

மணிரத்னம் முதல் ஐந்து படங்கள் முடியும் வரை கார் வாங்கவே இல்லை. 'தளபதி' படம் முடிந்த பிறகுதான் கார் வாங்கினார். அவரின் திருமணமும் அப்புறம்தான் நடந்தது!

மணிரத்னம் தான் இயக்கிய படங்களில் தனக்கு மிகவும் பிடித்ததாகவும், சிரமப்பட்டு எடுத்த படமாகவும் கருதுவது 'இருவர்'. பேச்சின் ஊடாக அதை அடிக்கடி குறிப்பிடுவார்!

நடிகர்களிடம் இப்படித்தான் நடிக்க வேண்டும் என நடித்துக் காட்ட மாட்டார். அவர்களை இயல்பாக நடிக்கவிட்டு, தேவையான கரெக்ஷன்களை மட்டுமே கொடுத்துப் படமாக்குவதையே விரும்புவார்!

மணிரத்னத்தின் படங்களில் மழையும் ரயிலும் நிச்சயம் இடம்பெறும். கூர்ந்து கவனிக்கும் ரசிகர்களுக்குப் புரிபடும் இந்த உண்மை!
தேனிமை விரும்பி. அவரைத் தெரிந்துகொண்டவர்கள் அதை அனுசரித்து நடப்பார்கள்!

மணியின் மானசீக குரு, அகிரா குரோசோவா. அவரது படங்களைத் திரையிட்டுக் காண்பதை அதிகம் விரும்பும் மனசு!

கொடைக்கானலில் மணியின் கனவு இல்லம் கிட்டத்தட்டத் தயார். பெரிய தியேட்டரும் உள்ளே உண்டாம்!

மணிரத்னத்தின் நெருங்கிய நண்பர்களாக 'ரியல் இமேஜ்' ஜெயேந்திரா, பி.சி.ஸ்ரீராம்,சந்தோஷ்சிவன் மூவரைச் சொல்லலாம். மாதம் ஒரு தடவையாவது சந்தித்துச் சிரிப்பது வழக்கம்!

உடை தேர்வில் அவ்வளவாக ஆர்வம் காட்ட மாட்டார். சிம்பிளாக பருத்தி ஆடைகள் போதும். எவ்வளவு கிராண்ட் ஃபங்ஷனாக இருந்தாலும் கவலையேபடாமல் எளிமையின் வடிவில் வருவார்.

 
மணிரத்னம் 25!
மணிரத்னம் 25!