காப்பாற்ற குஹசீவா, தன்னுடைய மகள், மருமகனிடம் பல்லைக் கொடுத்து இலங்கைக்கு அனுப்பிவைக்கிறார். இலங்கை ராஜா குஹசீவாவின் குடும்பத்தை ராஜ மரியாதையோடு வரவேற்று, பல்லை வாங்கிக்கொள்கிறார். இன்றும் புத்தரின் பல் இலங்கை கண்டியில் உள்ள புத்த மதக் கோயிலில் பத்திரமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இதுதான் புத்தரின் பல் வரலாறு. சரி, அதற்கு என்ன என்கிறீர்களா? 'இந்த பல் கதையைத்தான் மிஷ்கின் இயக்க, கமல் நடிக்க இருக்கிறார்' என கோடம்பாக்கம் முழுக்கக் கதைகள். கமல் இந்தக் கதையில் என்ன வேஷத்தில் நடிக்கப் போகிறார் என்பது சஸ்பென்ஸ்!
எதுவாக இருந்தாலும், 'புத்தம் சரணம் கச்சாமி!'
|