இது சிம்புவுக்குத்தான் உண்மையான டமால் டுமீல் தீபாவளி!
சும்மாவா... பையன் புதிதாக வாங்கிய ஒரு கோடி ரூபாய் காரில் அல்லவா ஊ...லலல்லா ஊர்வலம் வருகிறார். பி.எம்.டபிள்யூ எக்ஸ் 6. தமிழ்நாட்டில் இப்போதைக்கு சிம்புவிடம் மட்டுமே இருக்கும் கார். கிட்டத்தட்ட சாலையில் நழுவும் சொர்க்கம். ஸ்டைல், வசதி, வேகம் என ஸ்போர்ட்ஸ் கார் பிரியர்களின் அத்தனை தேவைகளையும் சிங்கிள் க்ளிக்கில் ஓ.கே. செய்யும் கார்.
''நிறையப் பேர் என்னை பார்ட்டி, பப்னு திரியும் ஆளுன்னு நினைச்சுட்டு இருக்காங்க. ஆனா, நான் கார், பைக்னு டாப் கியர்ல பறக்கும் பையன். ரோட்ல வேகமாகப் பறக்கும் கார், பீச் மணலில் சிக்கித் திணறும். அதில் ஓடுற வண்டி ஹில்ஸ்ல ஏற முடியாம முனங்கும். பெர்ஃபார்மன்ஸ் இருந்தா லுக் இருக்காது. இது எல்லாமே சேர்ந்த காம்பினேஷன்ல ஒரு கார் தேடிட்டே இருந்தேன். அப்பதான் பி.எம்.டபிள்யூ எக்ஸ் 6 காரை லாஞ்ச் பண்ணாங்க. ஆர்வத்தில், இந்த காரைப்பத்தி விசாரிச்சா, நான் எதிர்பார்த்ததுக்கும் மேலே சங்கதிகள் இருந்தன. இதை எஸ்யூவி காருன்னோ, ஸ்போர்ட்ஸ் கூபே காருன்னோ சொல்ல முடியாது. இரண்டும் கலந்த ஸ்டைலிஷ் காக்டெயில் கார். உடனே புக் பண்ணிட்டேன். போன வருஷமே புக் பண்ணிட்டாலும், அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகி, இப்போதான் கைக்குக் கிடைச்சுது!'' என்பவர், கார் ஸீட்டில் இருக்கும் ஒரு பட்டனைத் தட்டுகிறார்.
|