சென்னை சோழா ஷெரட்டன் ஹோட்டலின் 317-ம் நம்பர் அறையில் நேஹா துபியா உடலில் எங்கே திரி இருக்கிறது என்று கண்டுபிடிக்க கண்களால் மேய்ந்துகொண்டு இருந்தேன். பின்னே, அவரைத்தான் பாலிவுட்டில் 'செக்ஸ்பாம்' என்கிறார்களே! ஹிந்தி சினிமாக்களில் ஒரு பாடல் இடையழகி லிஸ்ட்டில் நேஹாவுக்குத் தவிர்க்க முடியாத இடம் உண்டு. இந்த முன்னாள் மிஸ் இந்தியாவைச் சந்திக்க அப்பாயின்மென்ட் கேட்கும்போதே, 'ஸ்பைஸியான கேள்விகள் மட்டும்தான் கேட்கணும்!' என்பது கண்டிஷன்.
''ஆண்கள்கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம்?''
''எனக்கு எல்லாரும் நோ பிராப்ளம் பாய்ஸ்தான்.
அவங்களுக்குத் தேவை ஒரே ஒரு விஷயம்தான். அது கிடைச்சுட்டா திருப்தி ஆகிடுவாங்க!''
''தொடர்ந்து கிளாமராவே நடிக்கிறீங்களே?''
''இரும்பு சூடா இருக்கும்போதே அதை அடிச்சு மடக்கிரணும்!''