விகடன் பொக்கிஷம்
ஸ்பெஷல் -1
அனிமல் விகடன்
சினிமா
தொடர்கள்
Published:Updated:

சரோஜாவுக்காக சொப்பன சுந்தரியைத் தேடுனோம்!

சரோஜாவுக்காக சொப்பன சுந்தரியைத் தேடுனோம்!

சரோஜாவுக்காக சொப்பன சுந்தரியைத் தேடுனோம்!
ம.கா.செந்தில்குமார், படங்கள்: பொன்.காசிராஜன்
சரோஜாவுக்காக சொப்பன சுந்தரியைத் தேடுனோம்!
சரோஜாவுக்காக சொப்பன சுந்தரியைத் தேடுனோம்!
பிரேம்ஜி அமரனின் ஏடாகூட பேட்டி!
சரோஜாவுக்காக சொப்பன சுந்தரியைத் தேடுனோம்!
சரோஜாவுக்காக சொப்பன சுந்தரியைத் தேடுனோம்!
சரோஜாவுக்காக சொப்பன சுந்தரியைத் தேடுனோம்!
சரோஜாவுக்காக சொப்பன சுந்தரியைத் தேடுனோம்!

'மினி லிட்டில் சூப்பர் ஸ்டார்!' இது பிரேம்ஜி அமரனுக்கு சிம்பு வைத்திருக்கும் செல்லப் பெயர். வாரத்தில் எட்டு நாட்களும்(!) 'பார்ட்டி பார்ட்டி' என்று பார்ட்டி சுற்றிக்கொண்டு இருப்பதால், இவருக்கு வீட்டில் விடாப்பிடியாகப் பெண் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். மேரேஜ் ஃபீவரில் இருக்கும் பிரேம்ஜியிடம் ஒரு ஏடாகூடப் பேட்டி!

''திடீர்னு தமிழ்நாட்ல எல்லா பார்ட்டிகளையும் தடை பண்ணிட்டா என்ன பண்ணுவீங்க?''

''கேள்வி கேட்டதுமே ஜுரம் வந்த மாதிரி உதறுது சார். பார்ட்டி இல்லாம இந்தப் பூமி எப்படி சுத்தும்னு தெரியலை. ஒரு சனிக்கிழமைகூட எண்ணெய் தேய்ச்சுக் குளிச்சது இல்லை. ஆனா, 'வேர் இஸ் த பார்ட்டி டுநைட்?'னு எல்லா சனிக்கிழமையும் விடாமக் கிளம்பிருவேன். நீங்க கேக்குறதுக்கு எல்லாம் சான்ஸே இல்லைங்க. மெர்சல் ஆக்காதீங்க!''

''ஏன் காக்டெயில்னு பேர் வந்துச்சு?''

''கேள்வி எல்லாம் ஒரே ராவா வருதே... 'காக்'னா சேவல், 'டெயில்'னா வாலு. சேவல் வாலு மாதிரி வேற வேற கலர்ல இருக்குற சரக்குகளை மிக்ஸ் பண்ணி அடிக்கிறதால இந்தப் பேர் வந்திருக்கும்னு என் சொந்த மூளையைக் கசக்கிக் கண்டுபிடிச்சிருக்கேன். கை தட்டுங்க பாஸ்!''

''தமிழ் சினிமாவுல மட்டும் ஏன் போலீஸ் கடைசியிலேயே வருது?''

''ஏன்னா, முதல்லயே போலீஸ் வந்தா வில்லனை அரெஸ்ட் பண்ணிருவாங்க. படம் பத்து நிமிஷத்தில் முடிஞ்சிரும். நீங்க இன்டர்வெல்ல பாப்கார்ன் வாங்க முடியாது. வில்லன் இல்லைன்னா ஹீரோ யாரைப் போட்டு அடிப்பாரு... ஹீரோயினை யார் ரேப் பண்றது... போலீசும் எப்படி 'யூ ஆர் அண்டர் அரெஸ்ட்'னு விலங்கைச் சுத்த முடியும்? அதான் தியேட்டருக்கு வெளியவே வெயிட் பண்ணி கடைசியா வர்றாங்க!''

''கிளுகிளுப்பு, கிலுகிலுப்பை என்ன வித்தியாசம்?''

''கிளுகிளுப்பு ஆண்களுக்கான கிலுகிலுப்பை. கிலுகிலுப்பை குழந்தைகளுக்கான கிளுகிளுப்பு. நாங்கள்லாம் சிம்பு சிஷ்யனுங்க. அடி பின்னுவோம்ல!''

'''கரகாட்டக்காரன்' படத்துல சொப்பனசுந்தரி வெச்சிருந்த காரை இப்ப யார் வெச்சிருக்காங்க?''

''ஆக்சுவலா 'சரோஜா' படத்துக்காக நாங்களும் அந்தக் காரைத் தேடினோம். ஆனால், அது கிடைக்கலை. அந்த சொப்பனசுந்தரி கார் விலைக்கு வந்தா, கண்டிப்பா ரேட் பத்திக் கவலைப்படாம வாங்கிருவேன். அந்தக் காரையும் சொப்பன சுந்தரியையும் இப்ப யார் வெச்சிருக்காங்கன்னு தெரியலை நண்பா!''

சரோஜாவுக்காக சொப்பன சுந்தரியைத் தேடுனோம்!

''ஒரு ஃபுல்னா எத்தனை மில்லி?''

''எந்திரிக்க விடாம அடிக்கிறீங்களே. நம்புங்க, நான் நல்லவன்தான். என் குடிகார ஃப்ரெண்ட் ஒருத்தன்தான் ஒரு குவார்ட்டர்னா 3 லார்ஜ், ஆஃப்னா 6, ஃபுல்லுனா 12ன்னு சொல்லிக் கொடுத்தான். மத்தபடி ஒரு லார்ஜுக்கு எவ்வளவு சார்ஜ் பண்றாங்கன்னுல்லாம் எனக்குத் தெரியாது. எனக்கு ஜுவாலஜி வர்ற அளவுக்கு சோஷியாலஜி வராது!''

''உலக அழகிப் போட்டியில ஜெயிக்கிற அழகிகள் ஏன் ரெண்டு கன்னத்துலயும் கைய வெச்சுக்கிட்டு வாயைப் பிளக்குறாங்க?''

''எனக்கு 'உலக அழகன்' பட்டம் கொடுங்க. நானும் ஃபீல் பண்ணி பார்த்துச் சொல்றேன். ஒரு பொம்பளை மனசு இன்னொரு பொம்பளைக்குத்தான் தெரியும். ப்ளீஸ் ஃபார்வேர்டு திஸ் கொஸ்டீன் டு உள்ளூர் அழகி குண்டு ஆர்த்தி!''

''க்ரீமி லேயர்னா என்ன?''

''கிருமிகள் கூட்டமா வந்தா அப்படிப் பேர் வைப்பாங்களோ என்னவோ... இந்தக் கொஸ்டீனை சாய்ஸ்ல விட்டுறேனே... ப்ளீஸ்!''

''ஒருவிரல் கிருஷ்ணாராவுக்கு ஏன் அந்தப் பேரு வந்துச்சு?''

''இந்த உண்மையை உலகத்துக்கு அறிவிச்சே ஆகணும் பாஸ். அவர்தான் 'ஊறுகாயை ஒரு விரல்ல தொட்டு நக்கணும். அள்ளிச் சாப்பிட்டா அம்பேல் ஆகிருவோம்'னு கண்டுபிடிச்சுச் சொன்னவர். அதனால அவரைச் சிறப்பிக்கும் வண்ணம் அந்தப் பட்டம் கொடுத்திருக்காங்க. எப்பூடி?''

''உங்க அப்பாவுக்கு ஏன் கங்கை அமரன்னு பேர் வந்துச்சு?''

''குட் கொஸ்டீன்... பட் எனக்குப் பதில் தெரியலை. அப்பாவோட ஒரிஜினல் பேரு அமர்சிங். ஒருவேளை அவரு எப்போதும் தண்ணிலயே இருந்ததால 'கங்கை'ன்னு சேர்த்துக்கிட்டாரான்னு தெரியலை. ஐயையோ! உளறிட்டேனா. ச்சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன். அப்பா ஒரு பற்றற்ற சாமி. ரொம்ப நல்லவரு!''

சரோஜாவுக்காக சொப்பன சுந்தரியைத் தேடுனோம்!

'' 'நிச்சயம் சேட்டை காரணமா யாரும் நம்மளை மரியாதையாக் கூப்பிட மாட்டாங்க'ன்னுதான் நீங்களே உங்க பேருக்குப் பின்னாடி 'ஜி' சேர்த்துக்கிட்டீங்களா?''

''எக்ஸாட்லி... நம்மளைத் திட்டுனாக்கூட மரியாதையா திட்டட்டும்னுதான் என் இனிஷியல் 'ஜி'யை பிரேமுக்குப் பின்னாடி ஃப்ரேம் பண்ணிட்டேன். பாஸ்! ஒருவேளை நான் ஹிந்தி படம் பண்ணா எல்லாரும் என்னை எப்படிக் கூப்பிடுவாங்க... பிரேம்ஜிஜின்னா?''

''கம்போடியாவுல ஒரு சரக்குக் கப்பல் தரை தட்டிருச்சாம்... ஏன்?''

''அது சரக்குக் கப்பல். எப்பவும் ஃபுல் தண்ணியில மிதக்கும். மப்பு ஓவராகி வாந்தி எடுக்குறதுக்காக வாஷ் பேசினைத் தேடி கரைக்கு வந்திருக்கும். நிதானம் தெரியாம தரை தட்டியிருக்கும். எவ்வளவோ சொல்லிட்டேன். இதைச் சொல்ல மாட்டேனா?''

 
சரோஜாவுக்காக சொப்பன சுந்தரியைத் தேடுனோம்!
சரோஜாவுக்காக சொப்பன சுந்தரியைத் தேடுனோம்!