விகடன் பொக்கிஷம்
ஸ்பெஷல் -1
அனிமல் விகடன்
சினிமா
தொடர்கள்
Published:Updated:

சினிமா விமர்சனம்: திருதிரு... துறுதுறு...

சினிமா விமர்சனம்: திருதிரு... துறுதுறு...

சினிமா விமர்சனம்: திருதிரு... துறுதுறு...
சினிமா விமர்சனம்: திருதிரு... துறுதுறு...
சினிமா விமர்சனம்
சினிமா விமர்சனம்: திருதிரு... துறுதுறு...
திருதிரு... துறுதுறு...
சினிமா விமர்சனம்: திருதிரு... துறுதுறு...
சினிமா விமர்சனம்: திருதிரு... துறுதுறு...

கேர்லெஸ் ஹீரோ, பெர்ஃபெக்ட் ஹீரோயின் இருவரையும் துறுதுறு குழந்தை ஒன்று திருதிருவென முழிக்கவைத்தால்... அதுதான் படம்!

மௌலி நடத்தும் விளம்பர நிறுவனத்தில் பணிபுரிகிறார் அஜ்மல். பங்சுவாலிட்டி என்றால் 10 அடி தள்ளி நிற்பார். அதே கம்பெனியில் வேலை பார்க்கும் சின்சியர் சிகாமணி ரூபா மஞ்சரி. நஷ்டத்தில் ஓடும் விளம்பர நிறுவனத்துக்குப் பெரிய ஆஃபர் ஒன்று வருகிறது. அதற்கு உடனடித் தேவை ஓர் அழகான குழந்தை. கொழுகொழு குழந்தையைத் தேடி அலையும் அஜ்மலின் கையில் சிக்குகிறது அமுல் பேபி ஒன்று. ஆனால், அது எங்கிருந்தோ கடத்தப்பட்ட குழந்தை. இதை மௌலிக்குத் தெரியாமல் அஜ்மல் சாமர்த்தியமாகச் சமாளிக்க, தோள் கொடுக்கிறார் தோழி ரூபா. இருவரும் குழந்தையின் பெற்றோர் யார் என்று தேட ஆரம்பிக்கிறார்கள். இவர்களுக்குள் ஏற்படும் சின்னச் சின்ன ஈகோ பிரச்னைகள், இருவரும் சேர்ந்து எதிர்கொள்ளும் சவால்கள், சங்கடங்களை ஜாலியாகச் சொல்கிறது படம்.


அழகான காதல்+காமெடி+த்ரில்லர் படத்தைத் தந்திருக்கும் அறிமுக இயக்குநர் நந்தினிக்கு வாழ்த்துக்கள். முதல் 10 நிமிடங்கள் தொய்வாகச் செல்கிறது படம். இன்னுமொரு ஹீரோ, ஹீரோயின் ஈகோ படமா என்று அலுப்பு வரும்போது குறுக்கிடுகிறது அந்தக் குழந்தை. அதற்கப்புறம் சவடால்கள், சண்டைகள் இல்லாமல் வேகமெடுத்துப் பறக்கிறது திரைக்கதை!

பேஸ்ட்டைத் தலைகீழாக பிரஷ்ஷில் தடவுவதில் இருந்து, போதையில் ஜட்டி யைப் பிரிஜ்ஜுக்குள் வைத்துத் தேடி அலைவது என அலட்சியமான கேரக்டரை அலட்டாமல் செய்திருக்கிறார் அஜ்மல். ரூபாவோடு சதா வம்பிழுக்கும் அஜ்மல், பிற்பாடு அவரோடு நட்பாகி, காதலாகிக் கசிந்துருகுவது அழகுக் கவிதை.

தமிழுக்கு க்யூட் ஹீரோயின் வரிசையில் நல்வரவு ரூபா மஞ்சரி. அஜ்மல் வீட்டில் தங்குவதற்காக பெற்றோரிடம் பொய் சொல்லும்போது ரூபா மஞ்சரி முகத்தில் செஞ்சுரி எக்ஸ்பிரஷன்கள்.

ஒரு சென்டிமென்ட் கதாபாத்திரம். ஆனால், அழுது வடியக் கூடாது. இரண்டையும் பேலன்ஸ் செய்து சமாளித்திருக்கிறார் மௌலி. ஞாபக மறதியால் பெயர்களைத் தப்புத்தப்பாக அவர் உச்சரிப்பது சுவாரஸ்யம். ஆனால், அது மீண்டும் மீண்டும் ரிப்பீட் ஆவது அலுப்பு.

பக்கத்து ஃப்ளாட்காரர்களிடம் குழந்தையை மறைக்க அஜ்மல் படும்பாடு, மர்மமான அந்த ஹாஸ்பிடல் கம்பவுண்டர் என அவ்வப்போது சுவாரஸ்ய முடிச்சுப் போட்டு, அதைக் காமெடியாக அவிழ்க்கிறார்கள். வில்லி நர்ஸை அஜ்மலும் ரூபாவும் 'மயிலிறகு, ஐஸ்கட்டி' என விதவிதமாக 'டார்ச்சர்' செய்யும் காட்சி சுவாரஸ்யம். ஆனால், போலீஸை இவ்வளவு தூரம் காமெடி பீஸ் ஆக்கிஇருக்க வேண்டாம். அஜ்மலும் ரூபாவும் பாண்டிச்சேரியில் செய்யும் சாகசங்களை போலீஸ் ஃப்ரெண்ட் மூலமாகவே முடித்திருக்கலாமே? குழந்தையின் பெற்றோர் யார் என்பதுதான் முழுப்

சினிமா விமர்சனம்: திருதிரு... துறுதுறு...

படத்துக்குமான கேள்வி. அந்தக் கேள்விக்குப் பதில் கிடைத்த பின்னும் கதை முடிவுக்கு வராமல் இழுத்தடித்திருக்க வேண்டாமே?

மணிசர்மாவின் இசையில் 'அதிரிபுதிரி ஆரம்பம்', 'டாக்டர் மாப்பிள்ளை ஓ.கே-வா' பாடல்கள் மனதில் தங்குகின்றன. சுதீர் கே.சவுத்ரியின் ஒளிப்பதிவு படத்துக்கு அழகு சேர்த்திருக்கிறது.

துறுதுறு குழந்தைகளைப் பார்க்கும்போதெல்லாம் கவலைகள் பறந்துவிடும். இது அப்படி ஒரு துறுதுறு குழந்தை!

 
சினிமா விமர்சனம்: திருதிரு... துறுதுறு...
-விகடன் விமர்சனக் குழு
சினிமா விமர்சனம்: திருதிரு... துறுதுறு...