மறக்க முடியாத நாள்: ''ஆத்தி... இப்பம் நெனச்சாலும் மொழங்கை வரைக்கும் முணுக்குனு புல்லரிக்குதுண்ணே. 'தேவர் மகன்' படத்துல என்னோட மொத நாள் சூட்டிங். ஒத்தையில வீரபாண்டித் திருவிழாவுக்குப் போகவே வெவரம் தெரியாதவனை, வெளிநாட்டுல எறக்கிவிட்டா வெலவெலப்பா இருக்கும்ல. அப்படி இருக்கு எனக்கு. அங்கிட்டு சிவாஜி, இங்கிட்டு கமலு, நடுவுல நானு. எம்புட்டுப் பெரிய ஆளுக. என்னிக்காவது இவுக மொகத்த நேர்ல பாத்துப்புட மாட்டமான்னு ஏக்கத்தை ஈரக்குலைல கட்டிக்கிட்டுத் திரிஞ்ச
பயபுள்ளைண்ணே நானு. 'இவருதான் வடிவேலு'ன்னு சிவாஜிட்ட என்னைக் காமிச்சாரு கமலு. 'யார் நீ, பெரிய நடிகரோ'னு சிரிக்கிறாரு சிவாஜி. அப்படியே அவரு கால்ல விழுந்து எந்திரிச்சா... கரகரன்னு கண்ல தண்ணி கொட்டுது. அந்தப் படந்தேன் நம்ம வாழ்க்கையையே மாத்திப் போட்டுச்சு. போட்டோ புடிச்சு மாட்ன மாதிரி அந்த நாளு எப்பவும் மறக்காது அண்ணே!''
|