விகடன் பொக்கிஷம்
ஸ்பெஷல் -1
அனிமல் விகடன்
சினிமா
தொடர்கள்
Published:Updated:

அஜீத் 25 - நா.கதிர்வேலன்

அஜீத் 25 - நா.கதிர்வேலன்

அஜீத் 25	 - நா.கதிர்வேலன்
நா.கதிர்வேலன்
அஜீத் 25	 - நா.கதிர்வேலன்
அஜீத் 25	 - நா.கதிர்வேலன்
அஜீத் 25	 - நா.கதிர்வேலன்
அஜீத் 25	 - நா.கதிர்வேலன்

சினிமா வட்டாரத்தில் 'மிஸ்டர்.ஸ்டைலிஷ்', 'கிராண்ட் ஓப்பனிங் மாஸ்டர்', ரசிகர்களுக்கு செல்லமாக 'தல'... 'அசல்' நாயகன் அஜீத் பற்றிய அமர்க்கள அணிவரிசை இதோ...

அஜீத்தின் மொபைலுக்கு அழைத்தால் அவர் குழந்தை அனோஷ்கா மழலைக் குரலில் பாடியிருக்கும் 'ஜன கண மன' பாடல்தான் ரிங்டோனாக ஒலிக்கும்!

தீவிரமான சாய்பாபா பக்தர். கார், பைக் என எந்தப் பொருள் வாங்கினாலும் பாபாவுக்குச் சமர்ப்பணம் செய்துவிட்டுதான் பயன்படுத்துவார்!

வெளி இடங்களில் தண்ணீர், பழரசம் போன்றவற்றை அருந்த வேண்டியிருந்தால், இடது கையால்தான்கிளாஸைப் பிடித்துக்கொள்வார். பெரும்பாலான வலது கைக் காரர்கள் பயன்படுத்தியபோது உதடுகள் பட்ட பகுதியைத் தவிர்ப்பதற் காகத்தான் இந்த முன்னெச்சரிக்கை!

முதன்முதலில் ஆசைப்பட்டு வாங்கிய கார் எக்ஸ்ப்ளோரர். வண்டி எண் ஜிசிகீ 650. இன்னமும் அதைப் பிரியமாகப் பாதுகாத்து வருகிறார்!

எங்கேயும், எப்போதும் ஜீன்ஸ், டி-ஷர்ட் என அஜீத்தைப் பார்க்க முடியாது. எந்த விழா என்றாலும் அதன் மூடுக்கு ஏற்ப உடைகளைத் தேர்வு செய்து அணிவார்!

அஜீத் 25	 - நா.கதிர்வேலன்

சினிமாவில் நடிப்பதற்கு முன் வேலை பார்த்த ஏற்றுமதி-இறக்குமதி வணிகத்தின் நிலவரங்களை இப்போதும் அடிக்கடி அப்டேட் செய்துகொள்கிறார்!

வீடு, அலுவலகம் என எங்கு ரசிகர்களைச் சந்தித்தாலும், 'உங்க குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுங்க. மன்றப் பணிகளை நேரம் இருந்தா பார்த்துக்கலாம்!' எனப் பாசமாக வலியுறுத்துவார்!

உள்ளூர் அரசியல் பற்றித்தான் கருத்துச் சொல்ல மாட்டார். ஆனால், உலக அரசியலின் இன்றைய நிலவரம்பற்றி எந்த நிமிடமும் அவரிடம் பேச, விவாதிக்க அவ்வளவு விஷயம் இருக்கும்!

சாய்பாபாவுக்குப் பிறகு அஜீத்துக்குப் பிடித்த தெய்வம் திருப்பதி வெங்கடாஜலபதி. சென்னையில் இருந்தே இதுவரை இரண்டு தடவை நடந்தே சென்று திருப்பதி சாமி தரிசனம் செய்திருக்கிறார்!

ரேஸ் போட்டிகளில் அஜீத்துக்கு ரோல் மாடல் பிரபல ரேசர் அயர்டன் சென்னா. அஜீத்தின் பிறந்த நாளான மே 1-ம் தேதிதான் அயர்டன் ஒரு கார் விபத்தில் இறந்தார். அதை நினைத்து தன் பிறந்த நாளன்றும் உருகி வருந்துவார் அஜீத்!

ரசிகர்களின் திருமணங்களுக்குத் தன்னுடைய பெயர், படம் போட்டு ஃப்ளெக்ஸ் பேனர்கள் அடிப்பதை விரும்பவே மாட்டார். 'கல்யாணம் ரொம்ப பெர்சனல் விஷயம்ல!' என்பார்!

மனைவியை மிக மரியாதையுடன் நடத்துகிற மனிதர். ஷாலினியைச் செல்லமாக 'டார்லிங்' என்றே அழைப்பார்!

தனது மொபைல் போனில் குழந்தை அனோஷ்கா பிறந்ததில் இருந்து இப்போது வரை நடப்பது, பேசுவது, ஓடுவது, சிரிப்பது என எல்லாமே குட்டிக் குட்டி வீடியோ கிளிப்பிங்குகளாக இருக்கின்றன. படப்பிடிப்பு இடைவேளைகளில் அவற்றைப் பார்த்து ரசித்துக்கொண்டு இருப்பார்!

அஜீத் 25	 - நா.கதிர்வேலன்

'இது நான் பேச உங்களுக்கு உகந்த நேரமா?' என கேட்டுவிட்டுத்தான் தொலைபேசி, அலைபேசிகளில் பேச ஆரம்பிப்பார்!

பொதுவாக, சுயசரிதை நூல்கள் வாசிப்பது பிடிக்கும். ரஜினி பரிசளித்த 'ஹிமாலயன் மாஸ்டர்ஸ்' புத்தகத்தை அடிக்கடி வாசிப்பார். வீட்டில் மினி நூலகமே உண்டு!

அஜீத்தின் விமான ஆசை கிளை விரித்தது ஆசான் மெமோரியல் பள்ளியில். அங்கே அவர் பாடமாகப் படித்த ஏரோ மாடலிங்தான் இன்றைய ரிமோட் விமானம், பைலட் அசோசியேஷன் நடவடிக்கைகள் வரை வளர்ந்து நிற்கிறது!

உருளைக்கிழங்கு பொரியல், சாம்பார், சிக்கன் பிரியாணி சமைப்பதில் எக்ஸ்பர்ட். சூட்டிங் இல்லாமல் வீட்டில் இருப்பதாகத் தெரிந்தால், நண்பர்கள் வீட்டில் குவிந்து, பிரியாணி சமைக்கச் சொல்லி அஜீத்தை வம்பிழுப்பார்கள்!

எந்த ஹோட்டலுக்குச் சென்றாலும் புதுவித உணவு வகைகளாக ஆர்டர் செய்வார். அந்த உணவு அருமையாக இருந்தால், அதைத் தயாரித்தவர்களை நேரில் அழைத்துப் பாராட்டித் தள்ளிவிடுவார்!

தங்க நகைகளை விரும்பவே விரும்பாத அஜீத்தின் ஆள்காட்டி விரலில் சமீபமாக ஒரு மோதிரம் மின்னிக்கொண்டு இருக்கிறது. 'என்ன இது புதுசா?' என்ற கேள்விக்குச் சிரிப்பு மட்டுமே பதில்!

தன்னைப்பற்றிய செய்திகள், புகைப்படங்கள், விமர் சனங்கள் வந்தால்... அந்தப் பத்திரிகை அலுவலகங் களுக்கு அடுத்த நாள் 'நன்றியுடன்-அஜீத்' என பொக்கே அனுப்பிப் புன்னகைப்பார்!

அஜீத் 25	 - நா.கதிர்வேலன்

படிக்கிற காலத்தில் தீவிர கிரிக்கெட் பிரியர். ஆனால், இப்போது 'கிரிக்கெட்டுக்கான முக்கியத்துவம் எல்லா விளையாட்டுகளுக்கும் தேவை' என்கிறார்!

மனித முகங்களைப் படம் பிடிப்பதில் கேமராமேன் அஜீத்துக்கு அத்தனை ஆர்வம். நண்பர்களின் கேமரா பழுதடைந்தால் பைசா செலவில்லாமல் ரிப்பேர் சரி செய்து தரும் அளவுக்கு கேமராக் காதலர் இவர்!

அனோஷ்கா, தந்தையை 'அஜீத் குமார்' என்றுதான் அழைப்பாள். அப்படி ஒவ்வொரு முறை அனோஷ்கா அழைக்கும்போதும் பூரிப்பில் முகம் இன்னும் சிவக்கும் அஜீத்துக்கு!

மினியேச்சர் ஹெல்மெட்களைச் சேகரிப்பது அஜீத்தின் பொழுதுபோக்கு. விதவித நாணயங்கள், தபால் தலைகளைக் காட்டிலும் அபூர்வமான கலெக்ஷன்ஸ் இது!

தான் நடித்த படம் ரிலீஸ் ஆன பிறகு ரிசல்ட் கேட்டு அதைப்பற்றிய விமர்சனத்தில் ஈடுபடவே மாட்டார் அஜீத். 'சந்தைக்கு வந்திருச்சு. இனி ரசிகர்கள்தான் தீர்மானிக்கணும். நம்ம பங்கு முடிஞ்சுபோச்சு!' என்பார்!

 
அஜீத் 25	 - நா.கதிர்வேலன்
அஜீத் 25	 - நா.கதிர்வேலன்