'இயற்கை', 'ஈ' படங்கள் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஜனநாதனிடம் வேறு ஏதோ விசாரிக்கச் சென்று பேசிக்கொண்டு இருந்த போது, அனைவருக்கும் டீ எடுத்து வரும்படி கூறினார்.
''காலையில எழுந்ததும் பல தமிழர்களுக்கு... ஏன் இந்தியர்களுக்கே... டூத் பிரஷ், பேஸ்ட்கூடத் தொடாம டீ குடிக்கிறதுதான் பழக்கம். ஆனா, ஒவ்வொரு சிங்கிள் டீக்குப் பின்னாடியும் எவ்வளவு பெரிய சோகக் கதை புதைஞ்சுகிடக்கு தெரியுமா?'' என்று பீடிகை போட்டார். டீ வருவதற்கு முன்னரே சுறுசுறுப்பானோம். அவரே தொடர்ந்தார்...
''நாம நெனைச்சுட்டு இருக்கிற மாதிரி டீ தயாரிக்கப் பயன்படும் தேயிலைங்கிறது செடி கிடையாது. 100 வருஷத்துக்கு மேல வளர்ந்த மரம். அந்தத் தேயிலை இந்தியாவில் பயிரான வரலாறு சோகம் நிறைந்தது.
பிரிட்டிஷ் இந்தியா காலத்துல வெள்ளைக்காரங்க இந்திய வெயிலைத் தாக்குப்பிடிக்க முடியாம, அவங்க நாட்டு க்ளைமேட்டுக்கு ஏத்த இடங்களாப் பார்த்து மலைவாசஸ்தலங்களில் செட்டில் ஆனாங்க. அங்க அவங்களுக்கு ஒரு 'லிவிங் அட்மாஸ்பியர்' தேவைப்பட்டுச்சு. மலையின் அடர்ந்த காடுகளை அழிச்சு தேயிலைத் தோட்டங்கள் போட ஆரம்பிச்சாங்க. அந்தத் தோட்டங்களை அவங்க இல்லா தப்போ கண்காணிக்க சிலரைக் கங்காணிகளா நியமிச்சாங்க. அந்த கங்காணி கையிலதான்வெள்ளைக் காரத் துரைக்கு அடுத்தபடியான சர்வ அதிகாரமும். ஜீப்புல கங்காணி போகும்போதே, தேவதூதர்களைப் பார்க்குற மாதிரி தேயிலைத் தோட்டத் தொழிலா ளர்கள் கையெடுத்துக் கும்பிடுவாங்க.
தேயிலைத் தோட்டத்துக்கு ஆள் எடுக்கிறதுக்காக அந்தக் காலத்துல வித்தியாசமான, வேடிக்கையான சில வேலைகளை எஸ்டேட் முதலாளிகளும் அந்த கங்காணிகளும் செஞ்சிருக்காங்க. மலைக்குக் கீழ சமவெளிப் பகுதியில வசிக்கிறவங்க குடியிருப்புகள்ல குடுகுடுப்பைக்காரர்களைவிட்டு, 'நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது! மகராசனுக்கு மலை மேல வேலை காத்திருக்கு'ன்னு குறி சொல்லச் சொல்வாங்க. வேலை தேடி மலையேறி வரும் அப்பாவி மக்களுக்குச் |