ஸ்பெஷல் -1
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

மறுபடியும் ஒரு ஷோபா!

மறுபடியும் ஒரு ஷோபா!


சினிமா
மறுபடியும் ஒரு ஷோபா!
மறுபடியும் ஒரு ஷோபா!
 
மறுபடியும் ஒரு ஷோபா!
மறுபடியும் ஒரு ஷோபா!
மறுபடியும் ஒரு ஷோபா!
மறுபடியும் ஒரு ஷோபா!

''மாநிறத்துல ஒரு ஜோதிகா, மறுபடி ஒரு ஷோபா... எக்ஸ்பிரஷன்ல பின்னுது பொண்ணு!'' - 'பூ' படம் பார்த்தவர்கள் அத்தனை பேரும் முதல் பூங்கொத்து நீட்டுவது ஹீரோயின் பார்வதிக்குத்தான்! சவேரா ஓட்டல் லாபி... 'ஒன் மெசேஜ் ரிசீவ்டு' என டிங்டாங்கிக்கொண்டே இருக்கிற மொபைல் பார்த்து மலர்கிறது பார்வதிப் பூ.

''பார்வதி... சிறுகுறிப்பு வரைக?''

''நான் கோழிக்கோடு. பி.ஏ. இங்கிலீஷ், ஃபிரெஞ்ச் லிட்டரேச்சர்னு டபுள் டிகிரி ஹோல்டர். படிக்கும்போதே கிரண் சேனலில் தொகுப்பாளினியா இருந்தேன். அப்புறம் தேடி வந்தது சினிமா. மலையாளத்தில் 'அவுட் ஆஃப் சிலபஸ்' படத்தில் அறிமுகம். அடுத்தது, 'நோட்புக்'. நாலு ஹீரோயின்களில் ஒருத்தியா வந்தாலும் நல்ல அடையாளம் கிடைச்சுது. 'நான் கடவுள்' படத்தில் நடிக்கக் கூப்பிட்டாங்க. அப்போ பார்த்து, எனக்கு செமஸ்டர். நல்ல வாய்ப்பை இழந்த வருத்தத்தில் இருந்தப்போ, சசி சாரின் அழைப்பு. 'பூ' படத்துக்காக ஆடிஷனுக்கு அழைத்தவர், முதல் ரவுண்டிலேயே 'நீதான் என் மாரி!'ன்னு டிக் பண்ணிட்டார். 'பூ'வில் என் கேரக்டர் பத்தி சசி சார் சொல்லும்போதே, இது என் கேரியரில் முக்கியமான படமா இருக்கும்னு புரிஞ்சுது. அது நல்லபடியா நடந்தாச்சு!''

''அப்பிடியே தமிழ்நாட்டுக் கிராமத்துப் பொண்ணு மாரியா மாறின அதிசயம் எப்படிச் சாத்தியமாச்சு?''

'' 'தமிழ்ச்செல்வன் எழுதின, 'வெயிலோடு போய்' சிறுகதையைத்தான் படமாக்குறேன்'னு சசி சொன்னார். 'முதல்ல அந்தக் கதையைப் படிச்சுர்றேன்'னு என் தமிழ் ஃப்ரெண்டு மூலமா படிக்கச் சொல்லிக் கேட்டேன். 'பூ'-வுக்கு முன்னாடி எனக்குத் தெரிஞ்ச இரண்டே தமிழ் வார்த்தைகள் 'ஆமா, இல்லை'தான். ஒரே மாசத்தில் தமிழ் பேச, படிக்கக் கத்துக் கிட்டேன். ஷூட்டிங்குக்கு ராஜபாளையம் போறதுக்கு முன்னாடி, அந்த ஊர் மனிதர்களின் லைஃப் ஸ்டைல், பேச்சு, டிரெஸ்ஸிங் எல்லாத்தையும் வீடியோவா எடுத்துக் கொடுத்துட்டார் சசி சார். அதைப் பார்த்துப் பேச,சிரிக்க, நடக்க, முறைக்க... இப்படி நிறைய ஹோம் வொர்க் செய்தேன். ஷூட்டிங்தான் புது அனுபவம். வீட்லயே செருப்புப் போட்டுத் திரியுற என்னை முள்ளுக் காட் டில் வெறுங் காலோட அலையவிட்டாங்க. 'மேக்கப் பாக்ஸ்ல கை வெச்சா கொன்னுருவேன்'னுட்டார் டைரக்டர். பூ கட்டவே தெரியாத எனக்குப் பட்டாசு ஃபேக்டரியில் சரம் சரமா வெடி கட்டுற வித்தையை அந்தக் கிராம மக்கள் சொல்லிக் கொடுத்தாங்க. தேங்க்ஸ் டு சசி!''

மறுபடியும் ஒரு ஷோபா!

''தமிழ்நாடு, தமிழ் சினிமா பிடிச்சிருக்கா?''

''ரொம்ப! 'பூ' பட ஷூட்டிங் ஸ்பாட் செம ஜாலியா இருக்கும்னு நினைச்சேன். ஆனா சசி, ஸ்ரீகாந்த் எல்லாரும் படத்தைப் பத்தி படுசீரியஸா டிஸ்கஸ் பண்ணிட்டே இருப்பாங்க. அவங்க ஜோக்கடிச்சு சிரிக்கிறதுகூட சினிமாவைப் பத்திதான் இருக்குது. அப்புறம் 'மாரி கேரக்டரில் பிரமாதமா நடிச்சிருக்கீங்க'ன்னு ஆர்யா, கரண், சந்தியா, டைரக்டர் வெங்கட் பிரபுன்னு பல பேர் போன் பண்ணி பாராட்டினாங்க. இன்னும் நிறையப் பேர் பாராட்டினாங்க. என்னால நிறையப் பேரை ஞாபகம் வெச்சுக்க முடியலை. எந்த ஈகோவும் இல்லாம இந்த ஜூனியரைப் பாராட்டின, வாழ்த்தி வரவேற்ற என் சீனியர்களுக்கு தேங்க்ஸ்!''

''அடுத்ததா என்ன மாதிரியான கேரக்டர்கள் பண்ற ஐடியா?''

''சிட்டி கதையோ, பட்டி கதையோ மாரியைத் தோற்கடிக்கிற மாதிரியான கேரக்டர் பண்ணணும்.

நான் இதுவரைக்கும் பண்ணின மூன்று படங்களுமே ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தந்த கதைகளா இருந்தது என் அதிர்ஷ்டம். இனிமேலும், அப்படியே இருக்கிற மாதிரி பார்த்துப் பார்த்துப் படங்கள் செய்யணும். எனக்கு கிளா மரில் உடன்பாடு கிடையாது. நான் மக்களுக்கு என் நடிப்பை மட்டுமே வெளிப்படுத்த விரும்புகிறேன்... உடம்பை அல்ல!''

 
மறுபடியும் ஒரு ஷோபா!
மறுபடியும் ஒரு ஷோபா!