ஸ்பெஷல் -1
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

ஷாரூக்கின் புதுப் பொண்ணு!

ஷாரூக்கின் புதுப் பொண்ணு!


சினிமா
ஷாரூக்கின் புதுப் பொண்ணு!
ஷாரூக்கின் புதுப் பொண்ணு!
 
ஷாரூக்கின் புதுப் பொண்ணு!
ஷாரூக்கின் புதுப் பொண்ணு!
ஷாரூக்கின் புதுப் பொண்ணு!
ஷாரூக்கின் புதுப் பொண்ணு!

''என்னது, இந்தப் பொண்னு ஷாரூக்கோடஹீரோ யினா?'' என்று அதிர்ச்சியானார்கள் பாலிவுட்டில்!

''நம்புங்கப்பா... பெங்களூரூ மாடலாம். ஷூட்டிங் முடிஞ்சு படம் டிசம்பர் 12 ரிலீஸ் ஆகப்போகுது!''

'பாலிவுட் பாட்ஷா' ஷாரூக்கானின் பட ஹீரோயின் குறித்துதான் இந்தப் பேச்சு. 'ஓம் சாந்தி ஓம்' மெகா ஹிட்டுக்குப் பிறகு, ஷாரூக்கின் புதிய படம், 'ரப் நே பனா டி ஜோடி.' ஹீரோயின் அனுஷ்கா ஷர்மா என்ற புதுப் பொண்ணு. 'ஓம் சாந்தி ஓம்' ஹீரோயின் தீபிகா படுகோன் பாணியில், பெங்களூரில் சாதாரண மாட லாக இருந்தவருக்கு ஷாரூக் ஹீரோயின் வாய்ப்பு.

''தன் படத்தில் பிரபல ஹீரோயின்கள் நடித்தால், மீடியா கவனம் சரிபாதியாக அவர்கள் மீதும் விழும் என்பதாலேயே, ஷாரூக் தன் ஒவ்வொரு படத்துக்கும் புதுப் புது பெண்களை ஹீரோயின் ஆக்குகிறார்.இந்தப் படத்தில் டான்ஸ் ஆடத் தெரியாத ஷாரூக்குக்கு ஹீரோயின்தான் டான்ஸ் சொல்லிக் கொடுப்பது போலக் காட்சிகள் இருக்கின்றன. ஏற்கெனவே பிரபலமான ஹீரோயின்கள் தனக்கு டான்ஸ் ஆடச் சொல்லித் தருவதா என்ற ஈகோ காரணமாகவே, ஷாரூக் அந்தப் பெண்ணை அறிமுகப்படுத்துகிறார். ஆனால், படத்துக்கு மைலேஜ் ஏற்றுவதற்காக, சீனியர் ஹீரோயின்களையும் ஒன்றிரண்டு ஸீன்களில் நடிக்க வைத்துவிடுகிறார். (இந்தப் படத்திலும் கஜோல், பிரியங்கா சோப்ரா, ராணி முகர்ஜி ஆகியோர் வந்து போகிறார்கள்!)'' என்கிறார்கள்.

ஆனால், அப்படியெல்லாம் இல்லை என்று மறுக்கிறார் படத்தின் இயக்குநர் ஆதித்யா சோப்ரா. ''அனுஷ்காவைத் தேர்ந்தெடுத்ததில் எந்த அரசியலும் இல்லை. ஃப்ரெஷ்ஷாக ஒரு முகம் இருந்தால் நன் றாக இருக்குமே என்றுதான் அனுஷ்காவைத் தேர்ந் தெடுத்தோம். அறிமுகமாக இருந்தாலும் 'ஓம் சாந்தி ஓம்' வெற்றிக்கு தீபிகாவும் ஒரு காரணம் என்பதை மறக்க வேண்டாம்'' என்கிறார்.

இந்த வாதப் பிரதிவாதங்களால் கடுங்கோபத்தில் இருப்பது அனுஷ்காதான். ''ஷாரூக்கின் ஹீரோயின் ஆவதற்கு என்னையே நான் தகுதிப்படுத்திக்கொண் டதன் வலியும் வேதனையும் எனக்குத்தான் தெரியும். மிக டெக்னிக்கலான டான்ஸ் ஸ்டெப்ஸ், நுணுக்க மான உணர்ச்சிகளுடன் நடிக்க வேண்டிய இந்த கேரக்டருக்கு ஹோம்வொர்க் செய்தபடியே இருந் தேன். இருக்கட்டும், படம் ரிலீஸாகட்டும். என்னைப் பற்றி கண்டபடி பேசுபவர்களை அப்புறம்பார்த்துக் கொள்கிறேன்!'' என்று ஒற்றை விரல் காட்டி எச்சரிக்கிறார் அனுஷ்கா. உஷாருங்கோ!

 
ஷாரூக்கின் புதுப் பொண்ணு!
ஷாரூக்கின் புதுப் பொண்ணு!