ஸ்பெஷல் -1
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

உனக்கு இரண்டு... எனக்கு நான்கு!

உனக்கு இரண்டு... எனக்கு நான்கு!


சினிமா
உனக்கு இரண்டு... எனக்கு நான்கு!
உனக்கு இரண்டு... எனக்கு நான்கு!
 
உனக்கு இரண்டு... எனக்கு நான்கு!
உனக்கு இரண்டு... எனக்கு நான்கு!
உனக்கு இரண்டு... எனக்கு நான்கு!
உனக்கு இரண்டு... எனக்கு நான்கு!

த்தனையோ காதல்கள் கண்ட பாலிவுட்டுக்கு கரீனா கபூர் - சைஃப் அலிகானின் காதல், ஆச்சர்ய அதிர்ச்சி!

2000-ம் ஆண்டில் 'ரெஃப்யூஜி' படம் மூலம் பாலிவுட்டில் காலடி எடுத்துவைத்தார் கரீனா. படம் ஓடாவிட்டாலும், பொண்ணுக்கு நல்ல பெயர். அதற்கடுத்து கரீனா நடித்த நாலு படங்களும் ஃப்ளாப். ராசி இல்லாத நடிகை ஆனார். கரீனாவுக்கு பிரேக் கொடுத்தது 'கபி குஷி கபி கம்' படம். அதற்கடுத்து, இந்தி 'குஷி'யில் கரீனா இடுப் பைக் காட்டிக்கொண்டு இருந்த நேரம், பாலி வுட்டில் ஹீரோ அந்தஸ்துடன் உள்ளே நுழைந் தார் ஷாகித் கபூர். சினி ஃபீல்டில் கரீனாவைவிட 2 வயதும், ஒரிஜினலாக 1 வயதும் இளையவர் ஷாகித். மீண்டும் கரீனாவின் கிராஃப் இறங்குமுகம் ஆனபோது, ஷாகித்தின் கிராஃப் ஏறுமுகம் ஆனது. 2004-ம் வருடம் இருவரும் முதன்முதலாக இணைந்து நடித்த 'ஃபிடா' ரேட்டிங்கில் சறுக்கினாலும், இருவரும் டேட்டிங் வரை போனார்கள். பிஸியாகின இந்தி மீடியாக்கள். ஷாகித் - கரீனா எங்கே போனாலும், எது பேசி னாலும் லவ் நியூஸ் லைவ் நியூஸ் ஆனது.

இது ஒருபுறம் இருக்க, 2004-ம் ஆண்டு பாலிவுட்டின் பணக்கார நடிகர்களில் ஒருவரான சைஃப் அலிகான், தன் காதல் மனைவி அம்ரிதா சிங்கை 13 ஆண்டு காலத் திருமண வாழ்க்கைக்குப் பின் டைவர்ஸ் செய்தார். வீட்டுக்கே வராமல், எப்போதும் ஏதாவது ஒரு மாடலுடன், நடிகையுடன் நட்பாகத் திரிந்த சைஃப் அலிகான், டைவர்ஸ் வாங்கியதில் வருத்தப்பட்ட பலரில் கரீனாவும் ஒருவர். ஏனெனில், அம்ரிதா சிங்கின் தீவிர ரசிகை கரீனா. செல்போன் புரட்சியில் அகப்பட்டவர்களில் ஷாகித் - கரீனா ஜோடியும் ஒன்று. மாலை நேரத்து மயக்கத்தில் இருவரும் கொடுத்த ஃபிரெஞ்ச் கிஸ் எம்.எம்.எஸ்-களாக உலா வந்தது. 2006-ம் ஆண்டில் ஷாகித், கரீனா சேர்ந்து நடித்த '36 சைனா டவுன்', 'சுப் சுப் கே' படங்களால், பாலிவுட்டின் ராசி ஜோடியானார்கள் இருவரும். அதற்கப்புறம் நடந்ததெல்லாம் ரகசியச் சண்டைகள். 2007-ம் வருடம் 'ஜப் வி மெட்' படத்தில் நடிக்க ஆரம்பிக்கும்போதே, இருவருக்கும் புகைச்சல் என்று செய்தி கிளம்பியது. படத்துக்கான பரபர பப்ளிசிட்டி ஸ்டன்ட் என்று மீடியா உட்பட பலரும் நினைத்துக்கொண்டு இருக்க, சைஃப் அலிகானுடன் வலம் வர ஆரம்பித்தார் கரீனா. அதற்குப் பிறகு, ஷாகித்தையும் கரீனாவையும் பட ஸ்டில்களில் தவிர, வேறெங்கும் ஒன்றாகப் பார்க்க முடியவில்லை.

'ஜப் வி மெட்' கதையில் இருவேறு ஐடியாலஜி கொண்ட இரண்டு பேருக்கும் காதல் பற்றிக்கொள்ளும். அதற்கடுத்து நடக்கிற காமெடிக் குழப்பங்கள்தான் கதை. 'உண்மையில் இருவேறு ஐடியாலஜி கொண்டவர்கள் காதலித்தால் காமெடி நடக்காது' என்பதை சீரியஸாக உணர்த்தியது ஷாகித்-கரீனாவின் பிரிவு.

ஒரு காதல் முடிந்த நேரம், அடுத்த காதலை கரீனா ஆரம்பித்ததுதான் பாலிவுட்டில் பலருக்கும் ஆச்சர்யம். இத்தனைக்கும் அதுவரை சைஃப் அலிகானும் கரீனாவும் 'ஓம்காரா' என்கிற படத்தில் மட்டுமே இணைந்து நடித்திருந்தார்கள். இருவருக்கும் இடையே காதல் வரும் என்று யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. 'ஜப் வி மெட்' உலக அளவிலான ரிலீஸூக்கு ஒரு வாரம் முன்பே லக்மே ஃபேஷன் ஷோ மேடையில் ஜோடியாகத் தோன்றி காதலைப் பகிரங்கப்படுத்தினார்கள்.

அன்று முதல் இன்று வரை ஏறிக்கொண்டே இருக்கிறது கரீனாவின் சினிமா கிராஃப். இந்த வருடம் கரீனாவும் சைஃப் அலிகானும் இணைந்து நடித்த 'தஷன்' படத்தின் விளம்பரப் பொறுப்பை மீடியாவே எடுத்துக்கொண்டது. கரீனாவுக்கு இந்தப் படத்தில் நடிக்கக் கொடுக்கப்பட்ட தொகை 3.5 கோடி. அதுவரை ஐஸ்வர்யா ராய் 3 கோடி ரூபாய் வாங்கி அதிகச் சம்பளம் வாங்கும் நடிகை என்ற பெயரோடு இருந்தார். 'தஷன்' ஊத்திக்கொண்டாலும் இன்று வரை கரீனாவின் சம்பளம் குறையவில்லை.

மும்பை பாந்த்ரா பகுதியில் கோடிக்கணக்கில் செலவு செய்து கரீனாவுக்காக ஃப்ளாட்டை டிசைன் செய்துகொண்டு இருக்கிறார் சைஃப். இருவருக்கும் பிடித்த மாதிரி கோடிகளை விழுங்கிக்கொண்டு பளபள ஃப்ளாட் தயாராகிறது. கரீனாவும் சும்மா இல்லை. ''சைஃபின் இரண்டு குழந்தைகள் எனக்கு மிக முக்கியமானவர்கள். தவிர, நானும் இரண்டு ஆண், இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள முடிவு செய்திருக்கிறேன். 6 பேரையும் அற்புதமாக வளர்க்க வேண்டும்'' என்று காதல் வழியும் கண்களோடு பேட்டி கொடுக்கிறார் கரீனா.

தனித்துவிடப்பட்ட ஷாகித், டென்னிஸ் ராக்கெட் சானியா மிர்சாவோடு கொஞ்ச நாள் முன்பு மும்பை ஓட்டல்களில் வலம் வர ஆரம்பித்தார். ஷாகித் - சானியா காதல் என்று மீடியா கட்டம் கட்ட, மறுக்காமலும், ஏற்கா மலும் மையமாகச் சிரித்துவைத்தார் ஷாகித். இப்போது கால் காயம் காரணமாக ரிவர்ஸ் கியர் எடுத்து 100-வது ரேங்க் போய்விட்ட சானியா, மீண்டும் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். மீண்டும் தனிமையில், வருத்தத்தில் இருக்கிறார் ஷாகித்.

இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான் ஷாகித்!

 
உனக்கு இரண்டு... எனக்கு நான்கு!
உனக்கு இரண்டு... எனக்கு நான்கு!