சினிமா
Published:Updated:

“தமிழ்நாட்ல நான் அரசியல் பண்ணுது!”

நச் நமீதாம.கா.செந்தில்குமார், படங்கள்: கே.ராஜசேகரன்

##~##

 மீதாவைப் பேட்டி எடுக்க காரணம் தேவையா என்ன? 'மச்சான் தமிழ்’ கேட்கலாமா...

''நீங்க இல்லாத இரண்டு வருஷ இடைவெளில தமிழ் சினிமாவே மாறிடுச்சே?!''

''நான் கொஞ்சம் ஃபேமிலி லைஃப்ல பிஸியா இருக்கு. என் அம்மா-அப்பாட்ட பிஸியா இருக்கு. இண்டஸ்ட்ரியில யார் போயாச்சு, யார் வந்தாச்சு, அது எனக்குத் தேவை இல்லை. இங்கே கொஞ்சம் நல்ல படம் வந்திருக்கு. ஆனா, என் படம் வரலை. நிறைய நியூ கம்மர்ஸ் வந்திருக்கு. அது நல்லதுதானே!''

''ரெண்டு மூணு கிலோ உடல் எடையைக் குறைச்சிருக்கீங்க போல!''

''அம்மா-அப்பா திட்டியாயிடுச்சு. அவங்க எனக்கு டயட்லாம் பண்ணியாச்சு. அம்மா, நான், என் அண்ணி... மூணும் வீட்ல யோகா பண்ணுது!''

''இப்போ தமிழ் சினிமாவில் யார் க்ளாமர் குயின்?''

''ஃபேன்ஸ் எல்லாம், 'உங்களைத் தவிர வேற யாரும் க்ளாமர் குயின்’ இல்லைனு சொல்லுது. இப்பக்கூட என்னைத்தான் அப்பிடிக் கூப்பிடுறாங்கனு தெரியுது. க்ளாமர் குயின் ரோல் வேற யார்ட்டயும் போகலை. என்கிட்டதான் இருக்கு மச்சான்!''

 “தமிழ்நாட்ல நான் அரசியல் பண்ணுது!”

''நீங்க அரசியலுக்கு வரப்போறீங்கன்னு செய்தி பரபரப்பா இருக்கே!''

''எனக்கு பாலிடிக்ஸ்ல திடீர்னு இன்ட்ரஸ்ட் இருக்கு. போன ஒரு வருஷத்துல இருந்து டிசைட் பண்ணியாச்சு. ஆனா, நான் இப்ப எந்தப் பார்ட்டிலயும் ஜாயின் பண்ணலை. என்ன பார்ட்டி ஜாயின் பண்ணுதுனு நல்லா யோசிக்கிறேன். ஆனா அதுக்குள்ள, 'நமீதா பி.ஜே.பி. ஜாயின் பண்ணியாச்சு’னு சொல்லுது. ஆனா, நான் பி.ஜே.பி. ஜாய்ன் பண்ணலை. பட், எனக்கு ஆரஞ்சு கலர் ரொம்பப் பிடிச்சிருக்கு. நிறைய ஆரஞ்சு கலர் ஸாரி கட்டுது. அதனால நான் பி.ஜே.பி. ஜாய்ன் பண்ணிடுச்சுனு சொல்லுதானு தெரியலை!''

 “தமிழ்நாட்ல நான் அரசியல் பண்ணுது!”

''சென்ட்ரல், ஸ்டேட்... எங்கே அரசியல் பண்ணுவீங்க?''

''தமிழ்நாடுதான்! நான் ஒரு தமிழச்சி. (ஆஹா..!) இன்கம்டாக்ஸ் இங்கதான் கட்டுது. என் பாஸ்போர்ட்கூட தமிழ் அட்ரஸ்லதான் இருக்கு. தமிழ்நாட் வந்து 10 வருஷம் ஜாஸ்தி ஆயிடுச்சு. அதனால நான் மும்பையோ, நார்த்தோ கிடையாது. சென்னை கேர்ள்தான். ஸோ, நான் இங்கே ஸ்டேட் பார்ட்டிலதான் ஜாயின் பண்ணுது. ஆனா, எதில் சேருதுனு இப்ப சொல்ல முடியாது!''

''மோடி, குஜராத்தை அப்படியே தலைகீழா மாத்தியிருக்கார்னு சொல்றாங்க. நீங்க குஜராத் பொண்ணுதானே... அப்படி அவர் என்னதான் பண்ணியிருக்கார்?''

''சூரத்ல நான் பார்த்ததுல ரொம்ப புராக்ரஸ் இருக்கு. 10 வருஷம் முன்ன சூரத், 10 வருஷம் அப்புறம் சூரத்... ரொம்ப டிஃபரென்ஸ் இருக்கு. பிசினஸ், சுத்தம் ஜாஸ்தி ஆகிருக்கு. அப்ப சூரத் ஒரு சின்ன டவுன்; இப்ப சிட்டி. சூரத் இஸ் மச் பெட்டர் நவ்!''

''காதல்ல இருக்கீங்கனு சொன்னாங்க... எப்ப கல்யாணம்?''

''ஐ லவ் மை ஃபேமிலி. ஆனா, மேரேஜ் பத்தி தெரியாது. என்னைப் புரிஞ்சுக்கும் குட் ஹஸ்பண்ட் வேணும். 'மேரேஜ் அப்புறம் நீங்க வீட்லதான் உக்கார்றீங்க. குழந்தை பெத்துக்கிட்டு வீட்டைப் பாத்துக்கங்க’னு சொல்றது எனக்குப் பிடிக்காது. நான் தன்னம்பிக்கை ஜாஸ்தி இருக்கிற சுதந்திரமான பொண்ணு. க்ளாமர் துணி போட்டுக்கிட்டு நடிக்கிறதால, டெய்லி பார்ட்டி பண்ற பொண்ணு கிடையாது. நான் மிடில் டைப் பொண்ணு. கல்யாணம் பண்ணிட்டாலும் என் கேரியர் இங்கதான். அதைப் புரிஞ்சுக்கிட்டவரா இருக்கணும்!

எனக்கு சவுத் இந்தியன் ஆளு ரொம்பப் பிடிக்குது. எல்லாரும் ரொம்ப சின்சியரா இருக்குது. டவுண் டு எர்த் பழகுது. அதனால ஒரு சவுத் இந்தியன் மச்சான் கல்யாணம் பண்ணிட்டு இங்கேயே செட்டில் ஆகுறதுதான் என் சாய்ஸ்!''

எப்பா, யாராச்சும் இருக்கீங்களா தெய்வ மச்சான்!