Published:Updated:

லிப் கிஸ்ஸுக்கு டயட்!

லிப் கிஸ்ஸுக்கு டயட்!

'தீராத விளையாட்டுப் பிள்ளை’ எனப் பாடுகிறார், உற்சாகமாகச் சிரிக்கிறார், 'நான் உங்க கேள்வி

புரிஞ்சுக்கிட்டேன்!’ எனத் தமிழில் பேசி கலாய்க்கிறார்... நீத்து சந்திராவுடன் பேசிக்கொண்டு இருந்த அரை மணி நேரமும் அரட்டை ரகளை தான்!

 '' 'ஆதிபகவன்’ படத்துல உங்க ரோல் எப்படி வந்துட்டு இருக்கு?''

''இயக்குநர் அமீர் ஒரு பெர்ஃபக்ஷனஸிட். ஒரு ஸீன் 100 சதவிகிதம் முழுமையாக வரும் வரை விட மாட்டார். அவரது இயக்கத்தில் நடிக்கிறது எனக்கு ரொம்பவே பெருமை. இந்தியில் மதூர் பண்டார் கர் இயக்கத்தில் நான் நடிச்ச 'டிராஃபிக் சிக்னல்’ படம் தேசிய விருது வென்றது. இந்த மாதிரி 'சிறந்த இயக்குநர்கள்’ படங்களில் நடிக்கும்போது நம்ம ரோல் எப்படி இருக்கும்னு கவலைப்படத் தேவை இல்லை. 'ஆதிபகவன்’ படத்துலயும் எனக்கு அந்தக் கவலை இல்லை!''

''அந்தப் பட ஷூட்டிங்கில் ஏற்பட்ட விபத்தில் உங்க உதட்டுல இருந்து ரத்தம் கொட்டுச்சாமே... ரொம்ப வன்முறை யான முத்தக் காட்சியோ?''

லிப் கிஸ்ஸுக்கு டயட்!

''ஏய்ய்.... இதானே வேணாங்குறது! முதல் நாள் ஷூட்டிங் தாய்லாந்தில். துப்பாக்கி சூட்டுக்கு நடுவில் நான் ஓடுவது மாதிரி ஒரு ஸீன். அப்போ துப்பாக்கி குண்டில் இருந்து பாய்ந்த துகள் என் உதட்டில் பட்டு ரத்தம் கொட்ட ஆரம்பிச்சுருச்சு. உடனே, ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டேன். ஒண்ணும் பிரச்னை இல்லை. கொஞ்ச நாள் லிப் கிஸ் வேண்டாம்னு 'டயட்’ல இருக்கேன். ஆமா, ஷூட்டிங்ல ஆர்ட்டிஸ்ட் ரத்தம் சிந்தினா தமிழ் சினிமா சென்டிமென்ட்படி படம் ஹிட் ஆகுமாமே. அப்படியா?''

லிப் கிஸ்ஸுக்கு டயட்!

'' 'மங்காத்தா’வில் அஜீத் கூட ஏன் நீங்க நடிக்கலை?''

''படத்தின் ஹீரோயின் கேரக்டருக்கு என்னைத்தான் முதல்ல கேட்டாங்க. ஆனால், டேட்ஸ் செட் ஆகலை. வேற எந்தக் காரணமும் இல்லை. மிஸ் செஞ்சுட்டோமேன்னு நானே வருந்துற வாய்ப்பு அது!''

லிப் கிஸ்ஸுக்கு டயட்!
லிப் கிஸ்ஸுக்கு டயட்!

''இப்போ தமிழ் சினிமா ஆர்ட்டிஸ்ட்டுகள் எல்லாரும் ரொம்பவே டேலன்ட். எப்படிச் சமாளிக்கப் போறீங்க?''

''ஏன், என் டேலன்ட்டுக்கு என்ன குறைச்சல்! நான் ரொம்பவே தைரியமான பொண்ணு. மார்ஷியல் ஆர்ட்ஸ் தெரியும். பேஸ்கட் பால் ப்ளேயர். கராத்தே வில் ஏகப்பட்ட மெடல் ஜெயிச்சிருக்கேன். அதே சமயம், படிப்பிலும் நான் கில்லி. 'சிறந்த மாணவி’க்கான விருதை 2003-ம் வருடம் பிரதமர் கையால வாங்கியிருக்கேன். இதுக்கு மேல என்ன எதிர்பார்க்குறாங்க. என் ஸ்டில்ஸ்லாம் பாருங்க... திறமை தரும் தன்னம்பிக்கை என் முகத்தில் பளிச்சிடும்!''

(அந்த 'பளிச்’ படங்களைப் பார்த்த பிறகு, மேற்கொண்டு நீத்துவிடம் கேட்கக் கேள்விகள் எதுவும் மிச்சம் இல்லை!)