என் விகடன் - மதுரை
என் விகடன் - கோவை
ஸ்பெஷல் -1
Published:Updated:

''காதலியைத் தேடுகிறேன்!''

ஆர்யா ஆச்சர்யம்நா.கதிர்வேலன், படம் : என்.விவேக்

 ##~##
'''எ
ப்படிடா மச்சீ, திடீர்னு நல்ல நல்ல படமா செலெக்ட் பண்றே?’னு ஃப்ரெண்ட்ஸ் ஆச்சர்யப்படுறாங்க. உண்மையைச் சொல்லணும்னா, நானா எதையுமே தேடிப் போறதில்லை. இறைவன் அருளால் எல்லாமே நல்லபடியா நடக்குது. பாலா சார்கிட்ட, 'எனக்கு ஏத்த மாதிரி ஒரு படம் பண்ணிக் கொடுங்க’ன்னு எந்த ஹீரோவாலும் கேட்க முடியாது. அவர் யாருக்காகவும் கதை செய்ய மாட்டார். கதைக்குப் பொருந்துவோம்னு தோணினா, அவரே கூப்பிடு வார். அப்படித்தான் 'நான் கடவுள்’ படத்தில் என்னைக் கூப்பிட்டார். அதற்குப் பிறகு, 'மதராசப்பட்டினம்’. அவ்வளவு பெரிய பட்ஜெட்டுக்கு நான் தகுதியானவன் கிடையாது. இருந்தாலும், என்னை நம்பி அந்த வாய்ப்பைக் கொடுத்தாங்க. இதுதான் சாரே தொழில் ரகசியம்!''- அதி உற்சாகமாகச் சிரிக்கிறார் ஆர்யா. கோலிவுட்டின் 'மோஸ்ட் வான்டட் ஸ்வீட் ராஸ்கல்!’

''மறைக்காம உண்மை சொல்லுங்க... 'அவன் இவன்’ படத்தில் நீங்க, விஷால் சேர்ந்து நடிச்சிருக்கீங்க... யார் பெஸ்ட்?''

''இதுல மறைக்க என்ன இருக்கு. சந்தேகமே வேண்டாம்... விஷால்தான் பெஸ்ட்!

''காதலியைத் தேடுகிறேன்!''

விஷால் அளவுக்கு என்னால ரிஸ்க் எடுக்கவே முடியாது. மாறு கண் கேரக்டரில் நடிக்கிறது சாதாரண விஷயம் இல்லை. ஒருநாள் மாறு கண் மாத்தி நடிச்சாலே, கண் வலிக்கும். தண்ணி கொட்டிட்டே இருக்கும். அவன் தொடர்ந்து 220 நாட்கள் கஷ்டப்பட்டு நடிச்சிருக்கான். அவனைப் பாக்கவே பாவமா இருக்கும். அதனால ஒரு பிரதர் மாதிரி அவனுக்கு நான் ஹெல்ப் பண்ணேன். அவன் நடிப்புக்கு முன்னாடி, என்னால நிக்கக்கூட முடியாது. அதனால, இவனைவிட அவன்தான் பெஸ்ட்!''

'' 'நான் கடவுள்’ தவிர, மத்த படங்களில் அலட்டிக்காமலே வந்து ஸ்கோர் பண்ணிட்டீங்க. எப்படி அது சாத்தியம்?''

''ஷூட்டிங் கிளம்புறதுக்கு முன்னாடி ஹோம் வொர்க் பண்ண மாட்டேன். ஸ்பாட்லயும் மிரட்டி எடுக்கணும்னு நினைக்கிறது இல்லை. எந்த ஐடியா வும் இல்லாம, வெள்ளை பேப்பர் மாதிரிதான் போவேன். என்னை எப்படியும் பயன்படுத்திக்கலாம்னு சரண்டர் ஆகிடுவேன். அவ்வளவுதான்! எனக்கு டைரக்டர்களின் திருப்திதான் முக்கியம். சந்தோஷமா, 'வெரிகுட் ஆர்யா!’ன்னு கை கொடுக்கணும். இல்லைன்னா, தம்ஸ்-அப் காட்டி, 'சூப்பர்’னு பாராட்டணும். 'அறிந்தும் அறியாமலும்’ படத்தில் இருந்து 'அவன் இவன்’ வரை வந்தது நல்ல விஷயம். ஓவர் நைட்டில் ஹீரோ ஆகாமல், படிப்படியா முன்னேறி வந்திருக்கேன். எனக்கு பாலா படத்திலும் நடிக்கணும். விஜய், ராஜேஷ் மாதிரியான இயக்குநர்களின் படங்களில் வெரைட்டியும் காட்டணும். இமேஜ் வேண்டவே வேண்டாம்னு நினைக்கிறவன் நான். இமேஜ் இருந்தா... வளர்ச்சி வராதுங்கிறது என்னோட நம்பிக்கை!''

''ஹீரோயின்களுக்கு உங்களைப் பிடிச்சிருப்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. ஆனா, பல ஹீரோக்களுக்கே 'ஆர்யா’ன்னா பிடிக்குதே... எப்படி?''

''எல்லாருக்கும் உண்மையா இருப்பேன். நான் யாரோடும் சண்டை போடுறதுக்காக சினிமாவுக்கு வரலை. எல்லார் மேலேயும் அக்கறையா இருப்பேன். படம் ஹிட்னா... அதை எல்லாரும் கொண்டாடுவோம். எங்க எல்லாரையும் ஒண்ணு சேர்த்தது கிரிக்கெட். எனக்கு எதிரின்னு யாரும் கிடையாது. மற்ற நடிகர்களின் வெற்றியை மனப்பூர்வமா கொண்டாடுவேன். அதனாலதான், என்னை எல்லாருக்கும் பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன்!''

''பேச்சிலரா இருந்தும் இன்னும் நீங்க காதலில் விழலைன்னு சொன்னா நம்ப முடியலையே?''

''காதலியைத் தேடுகிறேன்!''

''என்ன சொல்றது... நம்ம ராசி அப்படி!

எனக்கு கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் அதிகம். ஆனால், நட்பைத் தாண்டி கல்யாணம்கிற கமிட்மென்ட்டுக்குள் வர்றதுக்கு, அன்பைப் பகிர்ந்துக்கிற அளவுக்கு ஒரு பெண்ணை நான் இன்னும் பார்க்கலை. எனக்கு இன்னொரு ஜென்மத்தில் நம்பிக்கை கிடையாது. ஒரே வாழ்க்கைதான். அதில் பிரிவு, வருத்தம்னு எந்தக் குறையும் இருக்கக் கூடாது. முழுக்க முழுக்கச் சந்தோஷமா இருக்கணும். அப்படி ஒரு பெண்ணைத் தேடிட்டு இருக்கேன். அதான் கல்யாணம் தள்ளிப் போய்ட்டே இருக்கு. லவ் தேடி வரணும். அதுதான் நல்லது!''