என் விகடன் - மதுரை
என் விகடன் - கோவை
ஸ்பெஷல் -1
Published:Updated:

சூர்யாவை மிரட்டும் ஸ்பைடர்மேன் வில்லன்!

இர.ப்ரீத்தி

##~##

''எய்ய்... ரா... அர்ர்வூ!'' கொஞ்சம் யோசித்து, முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு, கடுமையாக முயற்சி செய்கிறார் ஜானி ட்ரை கூயென். 'ழா’வும் 'றி’யும் வருவேனா என்று தகராறு பண்ண, சிரித்தபடி கை தூக்குகிறார். ஜானியைச் சிரமப்படுத்திய அந்த வார்த்தை 'ஏழாம் அறிவு’. யெஸ், சூர்யாவின் புதிய படத்தில் ஜானிதான் அனல் கிளப்பும் வியட்நாம் வில்லன்!

 '' 'ஏழாம் அறிவு’ டீம் உங்களை எப்படிப் பிடிச்சாங்க?''

''ஸ்டன்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் எங்க ஊர்தான். அவர் எனக்கு அறிமுகம். ஒருநாள் போன்ல படத்தோட கதையைச் சொல்லி, 'நடிக்கிறியா?’ன்னு கேட்டார். யோசிக்காம உடனே ஓ.கே. சொல்லிட்டேன். படத்தில் முதல் ஸீனே பயங்கர டிராஃபிக் ஜாம்ல,  ரொம்ப த்ரில்லிங்கான சேஸிங் ஸீன். 'ஸ்பைடர் மேன்’ படத்தில் ஹீரோவுக்கு நான்தான் டூப். அந்தப் படத்தில் மாஸ்க் மாட்டிக்கிட்டு சுவர் சுவராத் தாவி சண்டை போட்டதைத்தான் இதுவரை பெருமையா சொல்லிட்டு இருந்தேன். அதைத் தூக்கிச் சாப்பிட்டுருச்சு இந்தப் படம்!''

சூர்யாவை மிரட்டும் ஸ்பைடர்மேன் வில்லன்!

''உங்களை ஜூனியர் புரூஸ்லீன்னு சொல்றாங்களே..?''

சூர்யாவை மிரட்டும் ஸ்பைடர்மேன் வில்லன்!

''ஓ... அப்படியா? ரொம்ப சந்தோஷம்! நான் வியட்நாம்காரன். என் தாத்தா தற்காப்புக் கலை நிபுணர். அவர் பேரைக் காப்பாத்தணும்னு, என்னை என் அப்பா ஆறு வயசுலயே தற்காப்புக் கலை கத்துக்கவெச்சார். ஆனா, குடும்பச் சூழ்நிலை காரணமா, சின்ன வயசுலயே குடும்பத்தோடு அமெரிக்கா போயிட்டோம். டச் இல்லாததால், தற்காப்புக் கலையை மறந்துட்டேன். சில வருடங்களில் வியட்நாம் திரும்பும் வாய்ப்பு கிடைச்சது. போய் இறங்கினதும், என்னை அறியாம அழுதுட்டேன். அங்கேயே தங்கி தற்காப்புக் கலை களைத் தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சேன். சினிமா வாய்ப்பு வந்தப்போ, ஸ்டன்ட்ல எனக்குன்னு ஒரு ஸ்டைல் வெச்சுக்கிட்டேன்.  அதுக்குன்னு ரசிகர்கள் வட்டம் உருவானது. நான் புரூஸ்லீ அளவுக்குக் கிடையாது. ஆனா, புருஸ்லீயோட என்னை ஒப்பிட்டுப் பேசுறது உண்மையிலயே சந்தோஷம். தேங்க்யூ வெரிமச்!''

''எப்படி இருக்கு தமிழ் சினிமா?''

''செம சூப்பர். ஆசியா கண்டத்தின் ஒரு சின்ன மாநிலத்தில், ஹாலிவுட்டுக்குப் போட்டி போடும் டெக்னாலஜி வளர்ச்சியுடன் ஒரு சினிமா ஃபீல்டு இருக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. எல்லோருமே ரொம்ப சின்சியர்.

'ஏழாம் அறிவு’ படத்தின் டைரக்டர் முருகதாஸுக்கு சினிமாபத்தி அவ்வளவு தெரிஞ்சிருக்கு. நினைச்ச காட்சியை ஸ்க்ரீன்ல கொண்டு வர ரொம்பவே உழைக்கிறார். மொழி புரியாம நான் கஷ்டப்பட்டப்ப, எனக்கு ரொம்பவே ஹெல்ப் பண்ணார். ரொம்ப ரிஸ்க்கான ஸ்டன்ட் காட்சி களில்கூட டூப் போடாம ஆர்வமா நடிச்சார் ஹீரோ சூர்யா. ஹீரோயின் ஸ்ருதி சாதாரண ஒரு நடிகைன்னு நினைச்சேன். ஆனா, சென்னையைச் சுத்திப் பார்க்கும்போது, அந்தப் பொண்ணு படம் பல இடங்களில் இருக்கு. அவங்க அப்பா ஃபேமஸ் ஆக்டராமே? அவருக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்காங்களாமே! அப்புறம் நான் ஸ்ருதிகிட்ட இன்னும் மரியாதையா நடந்துக்கிட்டேன். சென்னை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு!''

சூர்யாவை மிரட்டும் ஸ்பைடர்மேன் வில்லன்!

''அப்படியே படத்தோட கதையைச் சொல்லிட்டீங்கன்னா வந்த வேலை முடிஞ்சிரும்...''

''ஒரு வெளிநாட்டுக்காரர் ஒரு நவீன மெஷினோடு இந்தியாவுக்கு வர்றார். அந்த மெஷினால் சூர்யாவுக்கும் ஸ்ருதிக்கும் இடையே பிரச்னைகள். இதுதான் ஒன் லைன். நான்தான் அந்த ஃபாரினர் கேரக்டரில் நடிக்கிறேன். இதுக்கு மேலே சொன்னா, உதைப்பாங்க உங்க ஊர் ஆளுங்க!'' - சிரித்துக்கொண்டே விடை கொடுக்கிறார் ஜானி!