இர.ப்ரீத்தி
##~## |
''வணக்கம்! எப்படி இருக்கீங்க?'' - ஒருவரி அழகிய தமிழ் பேசி ஆச்சர்யப்படுத்துகிறார் கொழுக்மொழுக் ஹன்சிகா மோட்வானி.
''தமிழ் சினிமாவில் நடிக்க வந்தாச்சு. இன்னும் தமிழ் கத்துக்காம இருக்க முடியுமா? அதான் ஒரு நல்ல வாத்தியார்கிட்ட தமிழ் கத்துட்டு இருக்கேன்!''
''ஆனா, 'மாப்பிள்ளை’ படத்தில் டப்பிங்குக்கும் உங்க லிப் ஸிங்க்குக்கும் கொஞ்சம்கூடச் சம்பந்தம் இல்லையே?''

''ஏய்... ஸாரிப்பா! 'மாப்பிள்ளை’தான் தமிழில் என் முதல் படம். மும்பையில் இருந்து தமிழ்நாடு வந்து இறங்கியதுமே ஷூட்டிங் போயிட்டேன். தமிழுக்கு ஸ்பெல்லிங்கூட எனக்குத் தெரியாதப்ப நடிச்ச படம் அது. வசனம் புரியாம, பேசத் தெரியாம, திணறி நின்னப்ப... தனுஷ்தான் ஹெல்ப் பண்ணார். ஆனா, 'எங்கேயும் காதல்’ ஷூட்டிங்கில் பிரபு அண்ணா ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டதால், தமிழ் கத்துட்டு இருக்கேன். இந்தப் படம் ரிலீஸ் ஆனதும் பாருங்க, 'நம்ம பொண்ணுடா ஹன்சிகா’ன்னு என்னைக் கொண்டாடுவீங்க!''
''தமன்னாவின் வாய்ப்புகளை எல்லாம் நீங்க தட்டிப் பறிக்கிறீங்களாமே?''
''யார் சொன்னா? தமன்னா மேடத்தை இதுவரை நான் சந்திச்சதுகூட இல்லை. ஆனா, அவங்க ரொம்ப ஃப்ரெண்ட்லின்னு சொல்வாங்க. அவங்க சான்ஸைத் தட்டிப் பறிக்கும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை. நான் குட்டிப் பொண்ணு. அவங்க எனக்கு சீனியர்!''
''குட்டிப் பொண்ணுக்குக் கல்யாணம் எப்போ?''
''எனக்கு 19 வயசுதாம்ப்பா ஆகுது. அதுக்குள்ளே என்ன அவசரம்? ஆனா, சின்ன வயசுல ஏதாவது கல்யாணத்துக்குப் போகும்போது, கல்யாணப் பொண்ணு கலர் கலரா பூ வெச்சுட்டு, நிறைய நகை போட்டுட்டு நிக்கிறதைப் பார்த்து, 'எனக்கும் கல்யாணம் பண்ணி வைங்க’னு அழுது அடம் பிடிச்சேனாம். அதட்டிப் பார்த்துக் கேட்காம, முதுகுல நாலு சாத்தி சாத்தியிருக்காங்க. அப்போல இருந்து 'கல்யாணம்’ங்கிற வார்த்தையைக் கேட்டாலே அலர்ஜி!''
''அப்போ உங்க லவ்வர் பாய் எப்படி இருக்கணும்னு சொல்லுங்க?''
''எனக்கு அமெரிக்க நடிகர் ப்ராட்லி கூப்பர்னா அவ்வளவு பிடிக்கும். சினிமா, டி.வி-ன்னு கலக்கிட்டு இருக்குற ஹேண்ட்சம் ஹீரோ. அவருக்கு ஏற்கெனவே கல்யாணம் ஆகிருச்சு. ஆனாலும், இப்போ அவர் 'ஓ.கே’-ன்னு ஒரு வார்த்தை சொன்னாலும் ஹன்சிகா உடனே அமெரிக்காவுக்கு எஸ்கேப்!''