வி ஜய்
உடம்புக்கு இது பழைய கமல் ஸ்டைல் ‘காக்கிச் சட்டை’. டெய்லர்...
அட, நம்ம பிரபுதேவா!
காசு கொடுத்தால், காட்டுகிற ஆளைப் போட்டுத் தள்ளுகிற
போக்கிரியாக விஜய். இன்டர்நேஷனல் தாதா பிரகாஷ்ராஜுக்கும்
லோக்கல் தாதா ஆனந்தராஜ் குரூப்புக்கும் இடையே பவர் வார்.
தனி ஆவர்த்தன தாதாயிஸம் பண்ணும் விஜய், கொடுக்கிற காசுக்கு
இரண்டு குரூப் ஆட்களையும் ரவுண்டு கட்டிக் காலி பண்ணுகிறார்.
‘இவ்வளவு கொடூரமான ரௌடியா?’ எனக் காதலி அசினையே
திகைக்க வைக்கும் விஜய் உண்மையில் யார் என்பதே க்ளைமாக்ஸ்!
தெலுங்கில் இதே பெயரிலேயே வந்து பம்பர் ஹிட்டடித்த படம்.
பளீர் காமெடி, ஜிலீர் ரொமான்ஸ், சுளீர் ஆக்ஷன் எனக் கச்சித
காக்டெயிலாக ரீ-மேக்கியதில் கமர்ஷியல் கொடி ஏற்றியிருக்கிறார்
டைரக்டர் பிரபுதேவா!
விஜய்க்குள் அசின் காதல் சிக்ஸர் அடிக்கிற அறிமுகக் காட்சி,
அழகு. மழைச் சாலையில் குடை மாறி குடை மாறி அசினைப் பார்ப்பதும்,
லிஃப்ட்டுக்குள் நடக்கிற ஜாலி ரகளையும், மின்சார ரயிலுக்குள்
தடதடக்கிற (நிஜ) உப்புமா காதல் காட்சிகளுமாக இருவருக்குமான
லவ் ட்ராக், ஜாலி விசில்!
அழகிலும் நடிப்பிலும் ஸ்பெஷல் பிக்-அப் கூடியிருக்கிறது விஜய்யிடம்.
படம் முழுக்க விஜய் காட்டும் தெனாவட்டு, ரசிக்கும்படியான ரகளை.
ஆக்ஷன் காட்சிகளில் கடுமை யான உழைப்பு. கங்கிராட்ஸ்!
அப்புறம், அசின்... பெரிய ஹீரோக்கள் படத்தில் கிடைக்கிற
வழக்கமான ஹீரோயின் கேரக்டர்.
|